ஏலே இந்தியாவில் உள்ள நதிகளை காக்கும் முன் தமிழ்நாட்டில் உள்ள ஆற்றை முதலில் காப்பாற்றுங்கடே
நதியைப் காப்போம் என்று சொல்ல மரங்களை வெட்டி பாதகைகளை கையில் எந்தி இருக்கும் மகா அறிவாளிகளே உங்களிடம் இருந்து மரங்களை காக்கத்தான் பொதுமக்கள் போராடவேண்டும்... அறிவுஜீவிகளே மரங்களை பாதுகாத்தால்தான் நதிகளையும் பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?
Rajinikanth pledged his support - "Rally for Rivers"
ரத்த நாளங்கள் இல்லையென்றால் உடம்பு இயங்காது அது போல நதிகள் பூமியின் இரத்த நாளங்கள் என்று ரஜினி நதிகளை காப்போம் என்ற விளம்பரத்தில் பேசுகிறார். நதிகள் ரத்த நாளங்கள் என்றால் மரங்கள் மனிதன் சுவாசிக்கும் காற்று .அந்த மரங்களை வெட்டிவிட்டு ரத்த நாளங்களை காப்பாற்றினால் என்ன பிரயோசனம் என்று அவருக்கும் தெரியவில்லை போல
இந்திய நதிகளை காப்போம் காப்போம் என்று கூவுகிறீர்களே உங்க நாட்டு நதிகளை என்ன பாகிஸ்தான் சீனா போன்ற எதிரி நாடுகளா கைப்பற்றி இருக்கிறது அது உங்களிடம்தானே இருக்கிறது... அதனால இப்படி கூவிக் கொண்டு பாதகைகளை ஏந்தி கொண்டு இருக்கும் நேரத்தில் அதற்காகும் செலவை கொண்டு நதிகளை பாதுகாக்கும் அல்லது சுத்தம் செய்யும் செயலில் இறங்கலாமே
டிஸ்கி : ஹலோ சத்குரு சாமியாரே இந்தியாவில் உள்ள நதிகளை காக்கும் முன் தமிழகத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றை கார்பொரேட் கம்பெனிகளிடம் இருந்து முதலில் காப்பாற்ற போராடுங்கள்...
அன்புடன்
மதுரைத்தமிழன்
நச்!!! செம பாயின்ட் மதுரை சகோ!!
ReplyDeleteகீதா
சென்னையில் மறுபடியும் ஒரு பெருமழை காத்திருக்கிறது என்கிறார்கள். தூர் வாருவது உட்பட இன்னும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவே இல்லை. மேட்டூர் அணை பலநாட்கள் காய்ந்து கிடந்தது. அப்போது தூர் வாரி, சுத்தம் செய்யவில்லை. இதோ, மீண்டும் 75 அடிக்கு தண்ணீர் நிரம்பி விட்டது.
ReplyDeleteநதிகளை இணைப்பது இருக்கட்டும். மரங்களை வெட்டுவதையும், அதைவிட மணல் அள்ளுவதையும் இவர்கள் உடனடியாக நிறுத்தினால் நல்லது.
அய்யா மதுரை தமிழரே...
ReplyDeleteஇந்த பிரச்சார திட்டத்தின் நோக்கம் புரியாமல் பிதற்றியுள்ளீர்கள்...
1) நதிகளை காக்க இந்தியா முழுவதுமான பல விஞ்ஞானிகள் மற்றும் தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம் இணைந்து தயாரித்து வரும் Policy செயல்திட்டத்திற்கு மத்திய மாநில அரசுகளின் ஆதரவும் மக்கள் ஆதரவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் இந்த பயணம்...
2) ஆறுகளின் இரு புறமும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு மரங்கள் நட்டு., மண்ணிண் ஈரப்பதத்தை தக்க வைப்பது தான் முக்கிய திட்டம்...
3) இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள சத்குருவின் பிரச்சார உரைகளை யூடியூபில் பார்க்கவும்.
மணல் அள்ளுபவர்களை சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுத்தது நம்மை போன்ற மக்கள் தானே... அமைச்சரை நிகழ்ச்சிக்கு அழைத்தால் குற்றம் எனில், அவர்களுக்கு வாக்களித்த மக்கள் தான் யோசிக்க வேண்டும்.
4) மரங்கள் வெட்டப்படுவது நீங்கள் சொல்லும் பொய் குற்றச்சாட்டு.
வைகையின் நிலைக்கு யார் காரணம் என்பதை மனதில் நிறுத்தி, விதண்டாவாத மனதை கைவிட கோருகிறோம். நன்றி.
இந்த இயக்கத்தில் பங்கேற்க 80009 80009 என்ற எண்ணில் மிஸ்டு கால் தந்து உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள்.