Tuesday, September 19, 2017

@avargalUnmaigal
எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்திற்காக 100 கோடி பெற்றவர் யார்?

ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கும் ஒவ்வொரு அணியும் ஐந்து ,பத்து கோடின்னு வலை விசி தக்க வைத்து கொள்கிறார்கள்.  அதுமட்டமல்லாமல் ரிசார்ட்டிலும்  நல்ல கவனிப்பு அமைச்சர்களாக பதவி ஏற்றவர்களுக்கு இந்த 10 கோடி எல்லாம் ஒன்றுமே இல்லை அவர்களுக்கு தேவையானவைகளை அவர்களே பார்த்து கொள்ளும்திறமை இருக்கிறது...அப்ப சாபநாயகர் என்ன இளிச்சவாயரா என்ன? அவ்ருக்கு வருமானத்திற்கு வழி வேண்டாமா என்ன? ஐய்யா  எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் என்று கேட்க எம்.எல்,ஏக்களை தகுதி நீக்கம் செய் அதற்க்கு பலனாக 100 கோடி ரூபாய் உன் பினாமி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொன்னவுடன் எல்லோரையும் தகுதி நீக்க அறிவிப்பு விட்டு 100 கோடிக்கு அதிபர் ஆனார் ,ஒரு அறிவிப்பிற்கு 100 கோடி வாவ்....

மத்திய அரசு கையில் இருக்கும் வருமானத்துறைக்கு இது பற்றியெல்லாம் தெரியாது போல அல்லது தெரிஞ்சாலும் தெரிஞ்சது மாதிரி காட்டிக் கொள்ளக் கூடாதோ என்னவோ


அன்புடன்
மதுரைத்தமிழன்
19 Sep 2017

10 comments:

  1. எவன்யா இந்தியா ஏழை நாடுன்னு சொன்னது :)

    ReplyDelete
    Replies
    1. யாரும் சொல்லலை ஆனால் இப்ப அமெரிக்காதான் ஏழை நாடக ஆகிக் கொண்டிருக்கிறதுங்க

      Delete
  2. எப்படியாவது படிச்சு ஒரு மந்திரியாகிடனும் இல்லன்னா எம்.எல்.ஏவாகிடனும்.

    ReplyDelete
    Replies
    1. படிக்காம இருப்பதுதான் தகுதி அது தெரியாத நீங்க எம் எல் ஏவாக கூட ஆக முடியாது

      Delete
  3. பக்கத்தில் இருந்து பார்த்தது போலவே சொல்கிறீர்களே... அது... அதுதான் நான் ரசிப்பது!

    ReplyDelete
    Replies
    1. தமிழகத்தில் இருந்து வரும் செய்தியை வைத்துதான் இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கிறது. தமிழ்ல் ஒரு சொல் வழக்கு உண்டு சோழியன் குடுமி சும்மா ஆடாது என்று அது போலத்தான் சபாநாயகர் ஒன்றும் தனக்கு பலன் இல்லாமல் ஏதும் செய்யமாட்டார்

      Delete
  4. நூறு கோடி என்று சொல்லி பயமுறுத்தாதீர்கள் கோடிக்கு எத்தனை பூஜ்யம் என்பதே யோசிக்க வேண்டி உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் ஒரு கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரிந்து கொண்டால் போதும் அதுக்கும் மேலே நாம் தெரிஞ்சு ஒன்றும் ஆகப் பொவதில்லை

      Delete
  5. நூற்றுக்கு மேலுள்ளவர்கள் வாழ்வு
    தொடர்ந்து செழிக்க......

    ReplyDelete
  6. என்னது நூறு கோடியாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ??????????

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.