Tuesday, February 8, 2011

சிரிக்க & சிந்திக்க வைக்கும் தமிழ்தத்துவங்கள்1.என்னதான் ஒரு பொண்ணு போட்டோவில் தேவதை மாதிரி இருந்தாலும் நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா( ஆனா நம்ம நடிகைகள் மேக்கப் இல்லாம பார்த்தா அதைவிட கேவலமா இருப்பாங்க)

2. இருக்கறப்ப என்னதான் காம்பளான், போர்ன்விட்டா ஹார்லிக்ஸுன்னு குடித்தாலும் செத்ததுக்கு அப்புறம் எல்லாருக்கும் பால்தான் மக்கா (ராசா எவ்வளவு பெரிய ஊழல் பண்ணி பெரிய பங்களா கட்டினாலும் மாட்டிக்கிட்டா சின்ன ரும்லதாம்பா கிடக்கனும்)

3. நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சமையலுக்கு பருப்பு கடையிலதான் வாங்கனும்.( என்னதான் சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் உலகப் புகழ் பெற வேண்டுமென்றால் "சன்" தாயாரிப்பில் நடிச்சாதான் உலகப் புகழ் பெறமுடியும்)

4. சிற்பி கல்லை உளியால அடிச்சா அது "கலை" ஆனா நாம சிற்பிய உளியால அடிச்சா அது "கொலை"( பதிவர்கள் மாற்று கருத்து கூறினால் அது அசிங்கம் ஆனால் அதுவே சாரு நிவேதா அசிங்கமா பதில் கூறினால் அது இலக்கிய விமர்சனம்)

5. என்னதான் நாய்க்கு நாலு காலு இருந்தாலும் அதால கால் மேல் கால் போட்டு உட்கார முடியுமா?( என்னதான் விஜய்காந்த் டாக்டர் பட்டம் வாங்கினாலும் அவரால் நோயாளிக்கு வைத்தியம் பார்க்க முடியுமா?)

6. பஸ்ல நீ ஏறினாலும் உன்மேல பஸ் ஏறினாலும் டிக்கெட் வாங்குவது என்பது நீதான் மக்கா (ராமதாஸ் ஐயா எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் அல்லது எந்த கூட்டணி ராமதாஸ் ஐயாவிடம் சேர்ந்தாலும் தோற்க்கப்போவது ராமதாஸ் ஐயா இருக்கும் கூட்டனிதான் மக்கா)

7. டிக்கெட் வாங்கிட்டு உள்ளபோறது சினிமா தியோட்டர் ஆனா உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குறது ஆப்ரேசன் தியோட்டர்.
( இதற்கு கமெண்டஸ் பதிவாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.______________________________________________________________)

8. சவுத் இண்டியால நார்த்தங்காய் வாங்கலாம் ஆனா நார்த் இண்டியாவுல போய் சவுத்தாங்காய் வாங்கமுடியுமா?( விஜய் சினிமாவுல பலசாலியை மண்னை கவ்வ வைக்கலாம் ஆனால் அரசியலில் வயதான கலைஞரை இந்த இளைஞன் விஜய் மண்ணை கவ்வ வைக்க முடியுமா?)

11 comments:

 1. 7. டிக்கெட் வாங்கிட்டு உள்ளபோறது சினிமா தியோட்டர் ஆனா உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குறது ஆப்ரேசன் தியோட்டர்.
  ( இதற்கு கமெண்டஸ் பதிவாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.______________________________________________________________)//

  சிறைக்கு சென்றும் அனுப்பியவரிடம் சீட் வாங்கியது வைகோ , ஆனா சீட் வாங்க சிறைக்கே அனுப்புவது கலைஞர் மட்டும்தான்..

  ReplyDelete
 2. சாந்தி மேடம் சூப்பர் கமெண்ட் நன்றி

  ReplyDelete
 3. //பதிவர்கள் மாற்று கருத்து கூறினால் அது அசிங்கம் ஆனால் அதுவே சாரு நிவேதா அசிங்கமா பதில் கூறினால் அது இலக்கிய விமர்சனம்)//

  Fentastic..:))

  ReplyDelete
 4. 7. டிக்கெட் வாங்கிட்டு உள்ளபோறது சினிமா தியோட்டர் ஆனா உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குறது ஆப்ரேசன் தியோட்டர்.
  ( இதற்கு கமெண்டஸ் பதிவாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.______________________________________________________________)//ஆப்பில் ஆப்பு ஸ்பெக்ட்ரம் 2 ஜி என்பார்.. அதிலும் பெரிய ஆப்பு இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் என்பர்..ஆனால் ஆப்ப சைஸ் ஆப்பு நமக்கு தான் என்பேன்..:)))

  ReplyDelete
 5. ரொம்பவே யோசித்து இருக்கீங்க... ஹா,ஹா,ஹா,ஹா...

  ReplyDelete
 6. சூப்பர். எப்படிதான் யோசிப்பீங்களோ?

  ReplyDelete
 7. அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கும் கமெண்டுகள் அனைத்தும் பிரமாதம்...

  ReplyDelete
 8. /// Chitra said...
  ரொம்பவே யோசித்து இருக்கீங்க... ஹா,ஹா,ஹா,ஹா... ////

  ஆமாம் சித்ரா மேடம் இருந்த மூளையும் கொஞ்சம் சுளிக்கி போச்சுங்க...

  ReplyDelete
 9. ///komu said...
  சூப்பர். எப்படிதான் யோசிப்பீங்களோ? //

  ரொம்ப ஈஸிங்க கையில ஒரு கப் தண்ணி எடுத்துட்டு அப்படியே ஸ்லோவா குடிச்சால் ஐடியா தன்னால வருமுங்க.....தண்ணினு நான் சொன்னது காபி தண்ணீங்க....நீங்க தப்ப எடுத்திருந்த அதற்கு நான் காரணம் அல்ல

  ReplyDelete
 10. (சின்ன தளபதி )Philosophy Prabhakaran வாங்க...வாங்க.. கமெண்ட்ஸுக்கு நன்றி....பார்த்திங்களா உங்களையும் அடைப்புக்குள் போட்டு இருக்கேன். அதனால அடிக்கடி நம்ம தளத்துல வந்து எட்டிப் பார்த்து போங்க. ஒகேவா

  ReplyDelete
 11. டிக்கெட் வாங்கிட்டு உள்ளபோறது சினிமா தியோட்டர் ஆனா உள்ள போயிட்டு டிக்கெட் வாங்குறது ஆப்ரேசன் தியோட்டர்.
  ( இதற்கு கமெண்டஸ் பதிவாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.______________________________________________________________

  very nice job.. keep it up.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.