நாங்கெல்லாம் கெட்டு போகாத தமிழர்கள்...
அட மக்கா அடிக்க வரதை நிப்பாட்டுங்க....சொல்றேன்ல உருட்டு கட்டையை கிழே போடுங்க முதல்ல...நான் சொல்லவரதை கவனமா கேளுங்க மக்கா..
உங்க வீட்டுல எதுக்காக குளிர்சாதனபெட்டி( Refrigerator ) வைத்திருக்கீங்க? எந்த பொருளும் கெட்டுபோகாமா இருக்கதானே? அது போலதான் நாங்க ஏதும் ரொம்ப கெட்டு போகாமல் இருக்க கடவுள் பாசமுடன் இந்த வருடம் ரொம்ப ஸ்னோ(Snow) அனுப்பி வைத்து எங்களை கெட்டு போகமல் பாதுகாத்து கொண்டிருக்கிறார்.
நியூஜெர்ஸியில் சராசரியாக 25 inch snow தான் பெய்யும் ஆனால் இந்த வருடம் Jan 27 ல் இருந்து Feb 4 வரை 62 inch ஸ்னோ பெய்துள்ளது.
இப்போ சொல்லுங்க நாங்க கெட்டு போகாத தமிழர்கள் தானே?
இந்த 2011 ஸ்னோவில் நான் என் வீட்டை சுற்றி எடுத்த போட்டோவை கிழேகாணலாம்.
நான் சிறு பையானக இருந்த போது இந்த அளவு ஸ்னோ கிடைத்தால் குச்சி ஐஸ் ஆக செய்து அவ்வளவும் நானே சாப்பிட்டுவிடுவேன்.. sighhhhhhhhhhhhhhhhhhhhhhh....
Super Cool Photos!!!!!!
ReplyDeleteதாங்கள் வருகைக்கும் கமெண்ட்ஸ்க்கும் நன்றி சித்ரா மேடம்
ReplyDeleteமிக அழகு.. ஆனா அதோட கஷ்டமும் உங்களுக்குத்தானே தெரியும்?.
ReplyDeleteஆயுளில் ஒருமுறையாவது ஸ்கீயிங் போயிடணும்னு நினைப்பதுண்டு..
nice
ReplyDeleteஒரு காலத்தில ஆச்சர்யமா, அதிசயமாப் பாத்தது இந்த ஸ்னோவை; ஆனா, அதுல உள்ள கஷ்டம் தெரிஞ்சதும், அடடாதான்!! பனிக்காலத்தில் வீட்டிலுள்ள பைப்புகளில் தண்ணீர் உறையாமல் இருக்க லைட்டாக டிரிப்பிங் ஆகிறமாதிரி திறந்துவிட்டேயாகணுமாமே, அப்படியா?
ReplyDeleteதுன்பத்தையும் பார்த்து இரசிக்கக் கற்றுக்கொண்டவனை துன்பம் எதுவும் செய்ய முடியாதுதுதுது!!!
ReplyDeleteநீங்கள் பார்த்த இந்த ஸ்னோ அந்த அளவிற்கு மோசம் கிடையாது என்னை போன்றவர்களுக்கு.
ReplyDeleteஎன்னைப் போன்றவரகளுக்கு என்ன பிரச்சனை என்னவென்றால் ஆ ஊ....என்றால் ஸ்கூல் லேட்டாக திறப்பார்கள் அல்லது லீவு விட்டுவிடுவார்கள். அதுதான் ப்ராபளம்.
ஹுசைனம்மா...ஆனந்தி மேடம், சாந்தி மேடம் &திரு.குணசீலன் அனைவருக்கும் கருத்துகள் வழங்கியதற்கு நன்றிகள்
/////பனிக்காலத்தில் வீட்டிலுள்ள பைப்புகளில் தண்ணீர் உறையாமல் இருக்க லைட்டாக டிரிப்பிங் ஆகிறமாதிரி திறந்துவிட்டேயாகணுமாமே, அப்படியா////
ReplyDeleteநீங்கள் சொன்னது ரொம்ப சரி. ஆனால் அது டெம்ரெச்சர் மைனஸில் போகும் போது மட்டும்தான் அதுமாதிரி செய்யவேண்டும். இங்கே உள்ள அநேக நபர்களுக்கு உங்களுக்கு தெரிஞ்ச விஷயம் கூட இன்ன்னும் தெரியாது. நீங்க நல்ல ஸ்மார்ட்டான் ஆள்தான் ஹுசைனம்மா
//நீங்க நல்ல ஸ்மார்ட்டான் ஆள்தான் ஹுசைனம்மா//
ReplyDeletehee.. hee.. thanx.. feeling like me too in the snowland!!
just kidding!! I read this somewhere in a forum where some US-living Indians were discussing about their problems of frozen water inside the pipes and resulting troubles. Wondered about it!!