
காதல் கெட்டவனையும் ஒரு நொடியில் நல்லவனாக மாற்றிவிடும். பாலைவனத்தையும் சோலைவனம் ஆக்கிவிடும். காதல் இல்லாத வாழ்க்கை இது எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றிவிடும்.
இங்கே வருகை தந்த பெண்களுக்கும் ,ஆண்களுக்கும் தனித்தனியாக காதல் கதைகளை தந்துள்ளேன், இதை படித்தால் உண்மையான காதல் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு :
காதலித்து கொண்டிருந்த இரண்டு ஃபட்டர்ஃப்ளை( Butterfly ) தோட்டத்தில் ஹைடு அன் சீக்( Hide & Seek) விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது ஆண் ஃபட்டர்ஃப்ளை சொன்னது நாம் இருவருக்குள்ளும் ஒரு பந்தயம் என்றது.
பெண் ஃபட்டர்ஃப்ளையும் அதை ஒத்துக்கொண்டு பந்தயம் என்ன வென்று கேட்டது
ஆண் ஃபட்டர்ஃப்ளை சொன்னது. மறுநாள் காலையில் யாரு சிக்கிரம் வந்து இந்த பூவிற்குள் வந்து அமர்கிறார்களோ அவர்கள்தான் ரொம்ப அதிகமாக மற்றவர்களை காதலிக்கிறார்கள் என்று கருதப்படுவார்கள்,
பெண் ஃபட்டர்ஃப்ளையும் ஒகே என்று சொல்லி பறந்து சென்றது.
அடுத்தநாள் அதிகாலையில் ஆண்ஃப்ட்டர்ஃப்ளை குளிரையும் பொருட்படுத்தாமல் பூ திறப்பதற்காக பெண் ஃப்ட்டர்ஃப்ளை வந்து உட்காரும் முன் தாம் உட்கார்ந்து தன் அதிகப்படியான காதலை காண்பித்து விடவேண்டுமென்று காத்து இருந்தது`
கடைசியில், பொழுதும் விடிந்தது பூவும் மலர்ந்தது. ஆண் விரைந்து உட்காரச் சென்றது. ஆனால் அது கண்ட காட்சி பெண் பட்டர்ஃப்ளை இறந்து கிடந்த காட்சிதான்.
அது இரவு முழுவதும் குளிரில் உட்கார்ந்து இருந்து..காலையில் காதலனை பார்த்ததும் அதனுடன் பறந்து சென்று தான் எந்தளவுக்கு காதலனை நேசிக்கிறோம் என்று சொல்ல காத்திருந்தது.
காதலர்களே வருத்தபடாதீர்கள். நம் காதல் பெண்களின் காதலுக்கு எந்த அளவும் குறைந்தது கிடையாது. பின் வரும் காதல் கதையை படியுங்கள் பின் அதன்படி நடங்கள்.....
ஆண்களுக்கு :
ஒரு பிஸியான காலை நேரத்தில் 8 மணியளவில் 80 வயதான ஒரு பெரியவர் மருத்துவமனைக்கு வந்தார். கையில் உள்ள கட்டுகளை அவிழ்த்து தையலை பிரிப்பதற்காக வந்த அவர் 9 மணியளவில் இன்னொரு அப்பாயிண்ட்மெண்ட் இருப்பதாகவும் சீக்கிரம் செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டார்.டாக்டருக்கு பார்க்க வேண்டிய பேஷண்ட்கள் அதிகம் இருந்தாலும் பெரியவர் மேல் இரக்கம் கொண்டு அவர் காயங்களை பரிசோதனை செய்து அதற்கு வேண்டிய மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டவாறே அவரிடம் பேச்சு கொடுத்தார்.
கடிகாரத்தை மாறி மாறி பார்த்து கொண்டிருந்த பெரியவரை பார்த்து டாக்டர் கேட்டார் பெரியவரே உங்களுக்கு வேறு ஏதும் டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட இருக்கிறதா என்று . அதற்கு அந்த பெரியவர் இல்லை டாக்டர் ஆனால் நான் நர்ஸிங் ஹோமுக்கு போயி என் மனைவி கூட ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வேண்டும் என்றார்.
டாக்டர் அவர் மனைவிக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார் அந்த பெரியவர் சொன்னார் என் மனைவிக்கு ( Alzheimer’s disease) ஞாபக மறதி வியாதிக்கு அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றார். உடனே டாக்டர் கேட்டார் நீங்கள் கரெக்ட் டைமுக்கு போகவில்லை என்றால் உங்கள் மனைவி அப்செட் ஆகிவிடுவாரா என்று?
பெரியவர் சொன்னார் இல்லை டாக்டர் என் மனைவிக்கு நான் யாரு என்று கூட கடந்த ஐந்தாண்டுகளாக தெரியாது. அந்த அளவிற்கு ஞாபக மறதி என்றார்.
டாக்டருக்கு ரொம்ப ஆச்சிரியம் கலந்த வியப்புடன் அவரை பார்த்து உங்கள் மனைவிக்கோ நீங்கள் யாரு என்று தெரியாத போதும் தினசரி அவர்களுடன் சேர்ந்து சாப்பிட விரும்புகிறீரகளா என்று கேட்டார்.
அதற்கு அந்த பெரியவர் சிரித்தவாறே டாக்டரை தட்டிக் கொடுத்து கொண்டே சொன்னார். டாக்டர் அவளுக்கு வேண்டுமென்றால் நான் யாரு என்று தெரியாது ஆனால் எனக்கு அவள் யாரு என்று தெரியுமே...அவள்தான் என் காதல் மனைவி என்று.
அதை கேட்ட டாக்டரின் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வழிந்தோடின.
என்ன நாமும் இந்த ஜோடிகள் மாதிரி வாழ்ந்து காட்டுவோமா.. பதில் எழுதுங்களேன் நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று???
--------
அமெரிக்காவில் ஸ்கூலில் குழந்தைகள் காதலர் தின கார்டுகளை பறிமாறி கொள்வார்கள். இது கிண்டர்கார்டனில் இருந்து தொடங்கிவிடும். டீசசர் வகுப்பில் உள்ள மாணவர்களின் பெயர்கள் அனைத்தையும் கொடுத்து அனுப்புவார். ஒவ்வொரு வருடமும் நான் என் மகளுக்கு நானே டிசைன் பண்ணி கொடுத்து அனுப்புவேன்.
தல இதன நாள் எங்க இருந்திங்கா... ரெண்டு story+blog super....பின்றிங்க... தொடருங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteகார்ட் வரிகள் அருமை..
ReplyDelete//வெவ்வேறு மதங்களை சார்ந்த நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மதங்களை மாற்றாமல் //
வாழ்த்துகள்.
vazhthukkal.
ReplyDelete//டாக்டர் அவர் மனைவிக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தார் அந்த பெரியவர் சொன்னார் என் மனைவிக்கு ( Alzheimer’s disease) ஞாபக மறதி வியாதிக்கு அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் //
ReplyDeleteஇதை படித்தவுடன் எனக்கு பெங்களூர் இல் நாங்கள் இருந்தபோது நாங்கள் சந்தித்த சிவகுருப்பா அங்கிள் தான் நினைவில் உடனே..அவர் மனைவிக்கும் இதே நோயால் 13 வருஷங்கள் அவதி..அங்கிள் யாருனே தெரியாது அவங்களுக்கு . காஞ்ச சருகு மாதிரி கட்டிடில் படுத்து இருப்பாங்க..பார்க்கவே கஷ்டமா இருக்கும் ...ஆனாலும்...ஓவியமாய் பார்ப்பார்..இவருக்கு 70 வயதாவது இருக்கும்...ஆனால் தோற்றத்தில் 50 ஆகத்தான் மதிப்பிடலாம்...கேட்டால் ஒரே வார்த்தை..என் மனைவியை கவனிக்க நான் ஆரோகியமா இருக்கணும்...நாங்க மதுரை வந்து ஒரு மூன்று மாதத்தில் அந்த ஆன்ட்டி இறந்துட்டாங்க...இன்னும் நான் போன் பண்ணும்போது ஆண்ட்டியை சிலாகிக்க நேரம் போதாது அங்கிள் க்கு..
ரொம்பவே நிறைவான பதிவு..ரொம்ப பிடிச்சது...
நண்பர் அவர்களுக்கு
ReplyDeleteஎல்லாம் சரி காதலை கொண்டாடுவதற்கு ஒரு நாள் தேவையா?
இதான் பின்னால் இருக்கின்ற பாலியல் சுரண்டலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்
நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு எனது பதில்,
ReplyDeleteஅன்பை வெளிப் படுத்தும் தினம்தான் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. . அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் எல்லாம் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் தினம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், சக நண்பர்கள், பள்ளிகூட ஆசிரியர்கள் ,அப்பா,அம்மா,தங்கை,அண்ணன் என்று தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்ற நாள். நம்ம ஆளுங்க அரைகுறையா காப்பி அடிச்சிட்டு காதல்னு காமக்களியாட்டம் நடத்தறாங்க ...நீங்கள் நான் என் எட்டுவயது மகளுக்கு தாயார் செய்து கொடுத்து அனுப்பிய காதலர் தின கார்டுகளை நன்றாக பார்த்து இருந்தால் உங்களுக்கு புரிந்து இருக்கும்
எனது பதிவிற்கு வந்து படித்து கருத்து சொன்னதற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள்
மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும், ம்னம் ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழும் உங்கள் இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் கதையில், பெண் பட்டாம் பூச்சி ஏற்கனவே பூவினுள் ஒளிந்திருக்கும் என்று படிக்கும் போதே எதிர் பார்த்திருந்தேன். ஆனால் அது இப்படி தன் உண்மைக் காதலை, பந்தயத்தில் நிரூபிக்க வேண்டி இறந்திருக்கும் என்று நினைக்கவில்லை. கதையே என்றாலும், பட்டாம் பூச்சியே என்றாலும், அந்தப் பட்டாம்பூச்சி போலவே மிருதுவான இளகிய மனம் படைத்த என்னாலேயே அதன் முடிவை தாங்கிக் கொள்ள முடியாமல் வருத்தமாக இருந்தது.
இரண்டாவது கதையும் மிகவும் டச்சிங் ஆகவே உள்ளது. தான் தான் அவள் கண்வன் என்பதே தெரியாமல் கடந்த 5 வருடங்களாக சுயநினைவின்றி படுக்கையின் இருக்கும் அந்த வயதான பாட்டி மேல், மிகவும் அக்கரையுடன், தனக்கு அவளை யார் என்று தெரியும் என்று சொல்லும் அந்தப் பெரியவர் தாத்தா, எவெரெஸ்ட் சிகரமாக, மிக உயர்ந்த மனிதனாக பளிச்சிடுகிறார் என் மனதில். இப்போதே இப்படி என்றால் அவர்களின் அன்பும் காதலும் எவ்வளவு ஆழமானது, எவ்வளவு வருஷ இன்பமான தாம்பத்யம் அவர்களுடையது! அவர்களின் காதல் இலைகள், கிளைகள் என்றில்லாமல் வேரிலிருந்து வேரூன்றி உள்ளது என்று நினைக்கத் தோன்றுகிறது.
தங்களின் இந்தப் பதிவுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.
தாங்கள் தங்கள் குழந்தைக்காக் செய்து கொடுத்த வாழ்த்து அட்டைகளும் அதில் உள்ள வாசகங்களும், மிகவும் அருமையாக உள்ளது. உங்களின் ஆர்வமும், திறமையும், பொறுமையும் அவற்றில் பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள்.
என் ப்ளாக்குக்கு முதன் முதலாக வருகை தந்து கருத்துக்கள் கூறிய உங்களுக்கு என் நன்றிகள்.
அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com
பட்டர்ஃப்ளை கதை படித்தவுடன் நெஞ்சம் துடித்து 'சே சான்ஸே இல்ல, நெஞ்ச நக்கிட்டீங்க'ன்னு பின்னூட்ட நினைத்தேன். பிறகு பொறுமை காத்து அடுத்த கதையைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். இந்தப் பதிவில் ஆணுடைய காதல்தான் தூக்கலாத் தெரியுது. ஏனென்றால் முன்னது வெறும் கதை பின்னது உண்மைச் சம்பவம். MALE ROCKS ..எப்பூடி
ReplyDeleteவெளிநாட்டு வழக்கத்தில் அன்பானவர்களுக்கு - எந்த உறவாக இருந்தாலும் - அன்பைத் தெரிவிக்கவென்று ஆரம்பித்த வழக்கம், இன்று, பல விஷயங்களைப் போலவே, தன் இயல்பை விட்டுத் திரிந்து போய்விட்டது.
ReplyDeleteஅந்த வயதான தம்பதிகளின் அன்பு நெகிழவைக்கிறது.
படித்தேன் பதிவை,
ReplyDeleteசுவைத்தேன் பொலிவை,
மதித்தேன் பகிர்வை,
பதித்தேன் உணர்வை!
அழகான பட்டாம்பூச்சி கதை...ரெம்ப நல்லா சொல்லி இருக்கீங்க...
ReplyDeleteஅல்சைமர் ஜோடி கதை கண்ணில் நீர் வர வைத்தது... ரெம்ப சரி...
சபரி,
ReplyDeleteசாந்தி,
ஆனந்தி,
சங்கர் நாராயணன்
அப்பாவி தங்கமணி
அனைவரின் வருகைக்கும் கமெண்ட்ஸுக்கும் நன்றி
//வெளிநாட்டு வழக்கத்தில் அன்பானவர்களுக்கு - எந்த உறவாக இருந்தாலும் - அன்பைத் தெரிவிக்கவென்று ஆரம்பித்த வழக்கம், இன்று, பல விஷயங்களைப் போலவே, தன் இயல்பை விட்டுத் திரிந்து போய்விட்டது//
ReplyDeleteஹுசைனம்மா இந்தியாவில்தான் எல்லாம் திரிந்து போகிறது. இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவில் ஒழுக்கமும் கட்டுபாடு இல்லாமல் போகிவிடும் போலிருக்கிறது...நான் இந்தியாவில் வந்து செட்டில் ஆகிவிடும் என்ற எண்ணத்தில்தான் இருந்தேன் ஆனால் இந்தியா பற்றிய நல்ல எண்ணம் நாளுக்கு நாள் மாறி கொண்டிருக்கிறது.
கடவுள்தான் எல்லோருக்கும் நல்ல புத்தி கொடுத்து காப்பாற்ற வேண்டும்
மதி அவர்களுக்கு உங்கள் கவித்துவமான கமெண்ட்ஸ்குக் நன்றி
ReplyDeleteதிரு.வை.கோபால கிருஷ்ணன் சார் அவர்களுக்கு மிகவும் நன்றிகள்.. என் ப்ளாக்கிற்கு வந்து படித்ததுமட்டுமல்லாமல் தங்கள் மதிப்பு மிகுந்த நேரத்தை ஒதுக்கி மிகப் பெரிய பதிலாக போட்டதை மிகவும் பாராட்டுகிறேன். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு பதிவே போட்டிருக்கலாம் ஆனால் என்னை போன்றவர்களின் தளத்திற்கு வந்து படித்து நல்ல சப்போர்ட் பண்ணுவதற்கு உங்களுக்கு நிச்சயம் பெரிய மனதுதான் இருக்க வேண்டும். இந்த வருடத்தில் நீங்கள் போட்ட பதில்தான் எனக்கு கிடைத்த நல்ல " அவார்டு" ஆகும். உங்களுக்கு மீண்டும் எனது மனப்பூர்வமான நன்றிகள். வாழ்க வளமுடன்
ReplyDelete///இந்தப் பதிவில் ஆணுடைய காதல்தான் தூக்கலாத் தெரியுது. ஏனென்றால் முன்னது வெறும் கதை பின்னது உண்மைச் சம்பவம். MALE ROCKS ..எப்பூடி
////
ReplyDeleteஅரபுத்தமிழன் அவர்களூக்கு நன்றிகள்.ஆண்களின் காதல் துக்கலாத் தெரிந்தாலும் அதை வெளிப்படையாக சொல்ல கூடாது. உங்களுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று நினைக்கிறேன் அதனால்தான் இப்படி வெளிப்படையாக சொல்கிறிர்கள்.
//வெவ்வேறு மதங்களை சார்ந்த நானும் எனது மனைவியும் திருமணம் செய்து மதங்களை மாற்றாமல் மனங்களை மாற்றி பல்லாண்டு காலம் வாழ்ந்து வருகின்றோம் //
ReplyDeleteஉங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
நல்ல பதிவு...
தோழி பிரஷா அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
ReplyDeletesir rombo rombo nala iruku sir,
ReplyDeleteenaku rombo pudichi iruku......intha mathri niraya eluthuinga g......appathan true love na enna nu therium .........
அருமையான பதிவு. தங்களை பற்றியும் கொஞ்சம் அறிந்தோம்..
ReplyDelete