Monday, September 4, 2017

 தமிழ்மண வோட்டுகளும் இல்லை கருத்துகளும் அதிகம் இல்லை ஆனாலும் அதிகபார்வையாளர்கள் வருகின்றார்கள் அது எப்படி?


நான் நேற்று இட்ட பதிவிற்கு பின் என் தளத்திற்கு  வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 9272 அதில் 6499 நிர்மலா சீதாராமன் பற்றிய பதிவிற்கும் என் குழந்தை எனக்கு கற்று கொடுத்த பாடப் பதிவிற்கு  1772 பார்வையாளர்களும்  மற்றைய பதிவுகளுக்கு 1001 பார்வையாளர்களும் வந்து இருக்கின்றனர்.. அதுமட்டுமல்லாமல் கடந்த  சில மாதங்களாக பதிவுகள் அதிகம் இட நேரமில்லை ஆனாலும் அந்த மாதத்தில் வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை  48585 என்று கூகுல் ப்ளாக் ஸ்டேடஸ் சொல்லுகிறது. இவ்வளவிற்கும் நான் ஒன்றும் பிரபலமான பதிவர் இல்லை.

இப்படிபட்ட எனக்கே இவ்வளவு பேர்கள் வருகிறார்கள் என்றால் பிரபல பதிவர்களுக்கு லட்சத்திற்கு மேலும்  வருவார்கள் அல்லவா?

இப்ப சொல்லுங்க பேஸ்புக் வந்த பின் வலைத்தளம் காத்தாடுகிறதா என்ன? சில பேர் காத்தாடுகிறது என்று சொல்லுவார்கள்அப்படி யாரும் சொன்னா நம்பாதீங்க. இங்கே வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது ஆனால் என்ன பேஸ்புக் மாதிரி இங்கே லைக்பட்டன் இல்லாததால் லைக்குகளை பார்க்கமுடிவதில்லை ஆனால் இங்கே வருபவர்களின் எண்ணிக்கைதான் நமக்கு லைக் பட்டன் என்பதை புரிந்து கொண்டு தொடர்ந்து எழுதுங்கள்

நேற்று நான் இட்ட பதிவிற்கு  702 லைக்குகளும்  79 பேர் ஷேரும்  247 கருத்துக்களும் இட்டுள்ளர். ஆனால் இவர்களில் யாரும் என் பேஸ்புக் கணக்கை தொடராதவர்கள் ...ஆனால் இவர்கள் எல்லாம் ஒரு குழுவில் இணைந்து இருப்பவர்கள்... எனது பேஸ்புக்கில் 1700 க்கும் மேற்பட்டவர்களே நண்பர்களாக இருக்கிறார்கள் அவர்களிடம் இருந்து வரும் லைக்குகள் மிக சொற்பமே ஆனால் என்ன அவர்களில் அதிகம் மாணவர் என் பதிவை வந்து படித்து செல்கிறார்கள்.... சுமராக எழுது எனக்கே இவ்வளவு பேர் வருகிறார்கள் என்றால்  நன்றாக எழுதும் உங்களுக்கு நிச்சயம் அதிகம் பேர் வருவார்கள் .

வலைத்தளம்தான் உங்கள் எண்ணங்களை எழுத்துகளை மெருகூட்டி உங்களை நாலுபேற் அறியச்  செய்கிறது..


அதனால் சொல்லுகிறேன் பதிவர்களே சோர்ந்துவிட வேண்டாம் தொடர்ந்து எழுதுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. குழும மின் அஞ்சல், முகநூல் குழுமம், வாட்ஸ்சப் குழுமம், தனிப்பட்ட மின் அஞ்சல் என்று எத்தனையோ வழிகளில் ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாதபோது மனதளவில் சோர்ந்து போய்விடுகின்றார்கள் என்று நினைக்கின்றேன். பத்திரிக்கை உலகம் என்பது வேறு. பதிவுலகம் என்பது வேறு. பதிவுகள் என்று அவரவர் நினைவுகளின் தொகுப்பு. வீட்டில் டைரி எழுதி வைத்திருந்தால் குடும்பத்தினர் மட்டுமே படிக்க முடியும். ஆனால் பதிவுலகத்தில் உலகம் முழுக்க தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்களால் வாசிக்க முடியும். நம் எண்ணங்கள் யாரோ ஒருவருடன் பொருந்திப் போகும் அல்லவா?

    இங்கு எல்லோரும் பதிவுகளில் பக்கங்கள் பார்வையாளர்கள் பொறுத்து ஹிட்ஸ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். எப்போதும் நான் குறிப்பிட்ட தலைப்பை எத்தனை பேர்கள் அடுத்த மூன்று நாட்களுக்குள் படித்துள்ளார்கள் என்பதனை கவனித்தது உண்டு. குறைந்தபட்சம் ஆயிரம் பேர்கள் ஒரு தலைப்பை படித்து இருந்தால் அது சரியாக சென்று சேர்ந்து விட்டது என்று திருப்திபட்டுக் கொள்வதுண்டு.

    ஆனாலும் முகநூல் வீச்சு என்பது நம் கற்பனைக்கெல்லாம் எட்டாதது. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பேர்களை கொண்டு வந்து சேர்த்து விடும். ஆனால் இது நிரந்தர வாசகர்களைத் தந்து விடாது என்பதனையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். பதிவுலகம் என்பது நிதானமான ஆழமான புரிதல் உள்ளவர்களுக்கும் வாசிப்பை அமைதியாய் முழுமையாக வாசிக்கத் தெரிந்தவர்களுக்கும் உண்டான களமிது.

    இப்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு தனி மனிதர்களுக்கும் மற்ற அனைத்தையும் விட மனநலம் தான் முக்கியமானதாகத் தேவைப்படுகின்றது. எழுதத் தெரிந்தவர்களுக்கு மனஉளைச்சல் உருவாகாது. எழுதிக் கொண்டேயிருக்கும் போது மற்றவர்களை உங்களால் திருப்திபடுத்த முடிகின்றதோ இல்லையோ உங்கள் எண்ணங்கள் வலிமையாகும். வாழ்நாளின் எண்ணிக்கை கூடும் என்பது மட்டும் நிச்சயம்.

    நன்றி நண்பா.

    ReplyDelete
  2. Reading is a pleasure... Other social media offers only few liner reading n more opinion oriented.

    Blogs offer analytical n complete sense of a subject based on writer's knowledge n experience. Do encourage your fellow blog writers...

    ReplyDelete
  3. முகநூல் நல்ல ரீச் இருக்கும்தான் ஆனால் வலைத்தளம் கருத்துப் பரிமாற்றங்களுக்கும், பல நல்ல கட்டுரைகள் வாசிக்கவும் உதவுகிறது...துளசி முகநூலில் இருந்தாலும் அவர் அவ்வளவு ஆக்டிவாக இல்லை என்றே தோன்றுகிறது...

    சோர்வெல்லாம் வருவதில்லை சகோ. ஆனால் எங்கள் தளத்திற்கு எல்லாம் வாசகர்கள் குறைவுதான்...150 தாண்டினாலே பெரிய விஷயம்....மே பி பதிவுகள் அத்தனை ஸ்வாரஸ்யம் இல்லாமல் இருக்கலாம்..பெரிய எழுத்தாளரும் இல்லையே....ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. தமிழ்மணம் பற்றியும் கவலைப்படுவதில்லை. எழுதுவது ஒரு திருப்தி தருகிறது..நமது எழுத்து மெருகேறுவது போலத் தோன்றுகிறது. சிந்தனைகள், எண்னங்கள் வலுப்பெறுகின்றன....எழுதுகிறோம்...சகோ...

    கீதா

    ReplyDelete
  4. முக நூலில் முழு பதிவையும் நீங்கள் கொடுத்து விடுவதால் நிறைய வாசகர்கள் என நினைக்கிறேன் :)

    ReplyDelete
  5. வாழ்த்துகள் நண்பரே.

    பதிவுகளைத் தொடர்வோம். முகநூலில் எனக்கும் அத்தனை ஈடுபாடு இல்லை.

    ReplyDelete
  6. என் பதிவுகளுக்கு வருகை தருவோர் எண்ணிக்கை ஏதோஅதல பாதாளத்தில்தானிருக்கிறதுஅத்தி பூத்தாற்போல் ஏதோ பதிவுக்குவருகைப் பதிவு ஆயிரம் என்னும் எண்ணைத் தொடலாம் முகநூலில் நான் இருந்தாலும் ஆக்டிவாக இல்லை முகநூலில் என் பதிவுகளைப் படிப்போரும் குறைவே இருந்துமேழு ஆண்டுகளாக தொடர்ந்து வலைப்பதிவில் எழுதி வருகிறேன் நான் எழுதுவதே என் எண்ணங்களைக் கடத்தவே படிக்காதவர்கள் அதிர்ஷ்டமில்லாதவர்கள் என்றே நினைத்துக் கொள்வேன்

    ReplyDelete
  7. வலைப்பதிவு எழுதுபவர்கள் குறைந்து விட்டனரே தவிர பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்பது உண்மை அதிகம் பேர்எழுதும்போது பார்வையாளர் எண்ணிக்கை சிதறிவிடுகிறது. இப்போது தொடர்ந்து எழுதுபவர்களுக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்கிறது.வலைப் பதிவுலகம் உச்ச கட்டத்தின் போது இருந்ததை விட இப்போது கொஞ்சம் அதிகமாகவே ஹிட்ஸ் கிடைக்கிறது. ஒன்றுமே எழுதாத நிலையிலும் பழைய பதிவுகளுக்கே மாதம் 8000 ஹிட்ஸ் கிடைக்கிறது. நீங்கள் அசாதாரணவர், அரசியல் நாட்டு நடப்பு என்று ந்கைச்சுவையுடன் சுவாரசியமாக தருவது பெரும்பாலோரைக் கவர்ந்திருக்கிறது, குறிப்பாக பதிவுகள் அதிக நீளமின்றி சுருக்கமாக நச்சென்று சொல்வது உங்கள் பலம். வாழ்த்துகள்

    ReplyDelete
  8. வலைப்பதிவு எழுதுபவர்கள் குறைந்து விட்டனரே தவிர பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை என்பது உண்மை அதிகம் பேர்எழுதும்போது பார்வையாளர் எண்ணிக்கை சிதறிவிடுகிறது. இப்போது தொடர்ந்து எழுதுபவர்களுக்கு அதிக ஹிட்ஸ் கிடைக்கிறது.வலைப் பதிவுலகம் உச்ச கட்டத்தின் போது இருந்ததை விட இப்போது கொஞ்சம் அதிகமாகவே ஹிட்ஸ் கிடைக்கிறது. ஒன்றுமே எழுதாத நிலையிலும் பழைய பதிவுகளுக்கே மாதம் 8000 ஹிட்ஸ் கிடைக்கிறது. நீங்கள் அசாதாரணவர், அரசியல் நாட்டு நடப்பு என்று ந்கைச்சுவையுடன் சுவாரசியமாக தருவது பெரும்பாலோரைக் கவர்ந்திருக்கிறது, குறிப்பாக பதிவுகள் அதிக நீளமின்றி சுருக்கமாக நச்சென்று சொல்வது உங்கள் பலம். வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.