Thursday, October 19, 2017

avargal unmaigal
நீங்கள் மகிழ ...பக்தாஸ் வயிறு எரிய அரசியல் கலக்கல் சரவெடி


தமிழிசை மீடியாக்களிடம் சொல்ல மறந்தது இதுதான்



தமிழக பாஜகவை பொறுத்தவரை அவர்களின் கூட்டத்திற்கு எத்தனை ஆட்கள் வருகிறார்கள் என்பதைவிட எத்தனை சேர் அதிகம் போட்டு  இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்

நாங்க மற்ற கட்சி ஆட்களை போல மோசமானவர்கள் இல்லை. அதனால்தான் நாங்கள் எங்கள் கூட்டத்திற்கு வருபவர்களுக்கு மட்டுமல்ல எங்கள் கூட்டத்திற்கு வராத ஆட்களுக்கும் சேர்த்துதான் நாங்க சேர் போடுவோம் ஏனென்றால் நாங்கள் ரொம்ப நல்லவங்க!!!


கூட்டம் அதிகம் வராத பாஜக ஏன் அதிக அளவு  சேர்களை போட்டு இருக்கிறார்கள்? கூட்டத்திற்கு  சேர்களை வாடகைக்கு விட்டு பிழைப்பது அவர்கள்தானே



--------------------------------------------------------------------------------------

மோடி வெடி : இதை இந்தியாவில் பத்த வைச்சால் வெளிநாட்டில்தான் வெடிக்கும்.


ஸ்டாலின் வெடி : இந்த வெடியை சட்டசபைக்கு உள்ள பத்த வைச்சால் சட்டசபைக்கு வெளியே வந்துதான் வெடிக்கும்.


விஜயகாந்த வெடி:  இதை பத்த வைச்ச நம்மை சிரிக்க வைக்கும்.


எடப்பாடி/ பன்னிர் இரட்டை வெடி : இதை பத்த வைச்சால் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு மோடியின் காலில் போய் விழும்


வைகோ வெடி : இது கண்ணில் கண்ணிரை வர வைக்கும்.
ஹெச்.ராஜா வெடி : இதை பத்த வைச்சால்   மலத்தின் மீது வந்து வெடிக்கும்


ரஜினி வெடி : இதை நீங்க எப்ப வேண்டுமானாலும் பத்த வைக்கலாம் ஆனால் இது படம் ரீலீஸ் ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்னால்தான் வெடிக்கும்.


கமல் வெடி : கருப்பு கலரில் இருக்கும் இந்த வெடி வெடிச்ச பின்னால் காவி கலருக்கு வந்துவிடும் இதில் இன்னொரு வகை உண்டு இதை இங்க பத்த வைச்சால் வெளிநாட்டுக்கு போய்தான் வெடிக்கும் என்பார்கள் ஆனால் அது உள்ளுருக்குள்ளே வெடித்து விடும்


ராஜேந்தர் வெடி : இது வெடிக்கும் போது நான் தான் வெடி என் மூஞ்சில முடி அதனால் சாணியக் கரைச்சு அடி என்று பாடிக் கொண்டே வெடிக்கும்

----------------------------


என்னடா செயல்தளபதி ஆன பின்னாலும் ஸ்டாலின் இன்னும் பொட்டு வெடியவே வெடிச்சிட்டு இருக்கிறார். இவர் எப்ப லஷ்மி வெடி வெடிக்கிறது முதல்வராக ஆட்சியில் உட்காருவது... ஹும்ம்



இந்தியா மதச் சார்பற்ற நாடாம்.. அப்படின்னா தீபாவளிக்கு மட்டும் ஏன் போனஸ் மற்ற மத பண்டிகைகளுக்கு போனஸ் கிடையாதா?


இந்தியாவை பார்த்து அமெரிக்காக கற்றி கொள்ள வேண்டிய பாடம்

என்னமோ அமெரிக்க வளர்ச்ச்சி அடைந்த நாடாம் ஆனால் பாருங்க கிறிஸ்துமஸ்க்கு போனஸ் ஒன்றும் கிடையாது ஆனால் இந்தியாவை பாருங்க அது வளர்ச்சிய அடையாத நாடாம் ஆனால் அவங்க் தீபாவளிக்கு போனஸ்ஸை அள்ளி தராங்க ஹும்ம் இதற்குதான் வளர்ச்சி அடைந்த நாடுகளில் வேலை பார்க்க கூடாது


அதிமுக அரசு இந்த தீபாவளியை துக்க தினமாகத்தான் கொண்டாடனும் ஆனால் அவர்கள் தீபாவளி போனஸ் கொடுத்து சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் # நல்லா இருங்கடே

பக்தாஸ் நிர்மலா சீதா ராமன் வீட்டிற்கு தீபாவளி அன்று பலகாரம் கேட்டு போயிடாதீங்க  அவங்க இராணுவ அமைச்சராகிவிட்டதால் தீபாவளி பல காரம் சுடுவதில்லை ராணுவ வீரர்கள் வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்திருக்கிறார் அதை வைத்துதான் சுடப் போகிறார் எதற்கும் ஜாக்கிரதை

ஹெச்.ராஜாவை டெங்கு காய்ச்சல் அண்வே அண்டாது ஏனென்றால் எல்லோரும் அவர் மேலே  சாணியால தொடர்ந்து அடிப்பதால்



ஆமாய்யா எடப்பாடி அரசை  விமர்சித்தால் நிச்சயம் உள்ளே போடுவோம் காரணம் அவர் என்ன ஆட்சியா நடத்துகிறார் விமர்சனம் பண்ண அதுனாலதான் அவருக்கு கோபம் வருது, அவர் ஆட்சியை கிண்டல் கேலி பண்ணுங்க அவர் ஒன்று சொல்ல மாட்டார்





உங்களுக்கு எல்லாம் இது சாதாரண தீபாவளி  ஆனால் "GST' க்கு இதுதான் தலைதீபாவளி.. அதனால் அதை வாழ்த்துங்கள் மக்களே



கொசுறு : போட்டோ ஷாப் இல்லைன்னா மோடி சாப் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

  1. எல்லா வெடிகளையும் ரசித்தேன் நண்பரே
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. Replies
    1. ஜம்புலிங்கம் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. எல்லா வெடியும் சூப்பர். இன்னும் தீபாவளி சீர் வரவில்லை எனக்கூறி....

    ReplyDelete
    Replies
    1. அய்யயோ நான் அனுப்பிய சீரை மாமா எடுத்து ஒழித்து வைத்திருக்க போகிறார் அல்லது கொரியர் காரன் ஏமாற்றி இருக்கப் போகிறான்

      Delete
  4. படங்களை வெட்டி ஒட்டி கஷ்டப்பட்டு திறமையாக பதிவைத் தயாரிக்கிறீர்கள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதிரி பதிவுகள் போடுவதில் கஷ்டமே இல்லை கத்திரி கோலை எடுத்து பேப்பரில் உள்ள படத்தை கட் பண்ணுவது போலவே நெட்டி படத்தை எடுத்து அதை கட் பண்ணி போடுவது மிக மிக எளிது... என்னைப் பொறுத்தவரை கதை கவிதை எழுதுவதுதான் கஷ்டம் நிறைய யோசித்து அதை கோர்வையாக சுவைபட சொல்லி செல்ல வேண்டும் அதற்கு திறமை மட்டுமல்ல கஷ்டமும் பட வேண்டும். இப்போது நான் கதைகள் படிப்பதை நிறுத்தினாலும் நமக்கு தெரிந்த பதிவர்கள் கதை அல்லது கவிதை எழுதி வெளியிடும் போது அவர்களை ஊக்கப்படுத்த என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அந்த கதைகளை படித்து சிலவரிகளாவது எழுதி கருத்துகளாவது பொடுவேன் அவ்வளவுதான்

      Delete
  5. வெடிச்சி வெடிச்சாச்சு எல்லாவற்றையும் பதிவில் படங்களும் அதற்க்கு எழுத்து வடிவங்களும் மிக அருமையா செய்து இருக்கீங்க இது ரொம்பவே கரெக்ட் அம்மா இறந்தால் பிள்ளைகளுக்கு துக்கம் தானே ஒரு வருஷத்திற்கு இங்கு ......அவர்கள் அப்ப்டிடிதான்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி

      Delete
  6. ரசித்தேன் நண்பரே
    த+ம=6

    ReplyDelete
    Replies
    1. ரசித்து படித்தற்கு நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.