இந்த காலத்தில் மணி மண்டபங்களும் சிலைகளும் அவசியம்தானா?
இப்போது சிலையையும் மணிமண்டபங்களையும் அரசு திறக்கும் போது அதனால் என்ன பயன் என்ற எண்ணம் என் மனதில் எழுகிறது. அது பற்றிய பதிவுதான் இது.
இது பற்றி" நடிகர் சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா? என்ற பதிவு 2015 எனது தளத்தில் வெலிவந்து இருக்கிறது அதை படிக்காதவர்கள் இங்கே சென்று அதை படித்துவிட்டு இந்த பதிவை தொடராலம் அல்லது இந்த பதிவை படித்துவிட்டு அந்த பதிவை தொடரலாம் அது உங்களுக்கு எளிதோ அதன்படி படியுங்கள் http://avargal-unmaigal.blogspot.com/2015/08/sivaji.html
காந்திக்கு மணி மண்டபம் கட்டி இருக்கிறார்கள். அதில் தவறே இல்லை. காரணம் அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர் & இந்திய சமுகத்திற்காக பாடுபட்டவர். அவரிடம் இருந்து இந்த கால இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம். அதனால் அவருக்கு மணி மண்டபம்(நினைவு மண்டபம் ) கட்டி இருப்பது ஒர் நல்ல செயலாகும். இந்த மண்டபத்தில் காந்தியைப் பற்றிய பல தகவல்கள் அங்கு இருக்கின்றன. அதை பயன்படுத்தி மாணவர்கள் பலரும் பல ஆராய்ச்சி படிப்பை படித்து முடித்து இருக்கிறார்கள். மேலும் குழந்தைகள் அங்கு சென்று வருவதன் மூலம் இந்திய வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள முடியும் .காந்தி எப்படி நம் சுதந்திரத்திற்காக போராடினார். இந்தியா சுதந்திர நாடாக இருப்பதால் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க முடிகிறது என்பதையும் அதற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை அறிந்து கொள்ள இயலும்.
ஆனால் நாட்டிற்காக அல்லது சமுகத்திற்காக எந்த செயலையும் செய்யாத ஒரு நடிகருக்கு அரசாங்க செலவில் அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தில் மண்டபம் கட்டுவது சிலைகள் வைப்பது என்பது ஏன்? சினிமா மூலம் அவர் இந்த சமுகத்திற்கு எதாவது கற்றுக் கொடுத்தாரா?அவர் சினிமாவில் நடித்து தன் குடுமபத்திற்காக சொத்துக்கள் மட்டுமே சேர்த்தார் அவ்வளவுதானே...
சினிமா என்பது ஒரு துறை அவ்வளவுதான். ஆனால் அதை விட பல சிறந்த துறைகள் உள்ளன, அதில் வெற்றி பெற்று சாதித்தவர்களுக்கு ஒரு மணிமண்டபங்கள் கூட கட்டவில்லை அப்படி கட்டி இருந்தாவலாவது அது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் .அதைவிட்டுவிட்டு சிவாஜிக்கு ஒரு மணிமண்டபம் கட்டுவதால் என்ன பயன்? ஒரு வேளை அந்த மண்டபத்தில் சென்று சிவாஜியின் நடிப்பு பற்றிய செய்திகளை அறிந்து அல்லது அவர் நடித்த படங்களை பார்த்து இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொண்டால் அதில் பயன் ஏதும் உண்டா? எனக்கு தெரிந்தது ஒரே ஒரு பயன்தான் அவரின் நடிப்பை பார்த்துவிட்டு அது போல இன்றைய திரைப்படங்களில் நடிக்காமல் இருப்பதுதான். காரணம் அவர் போல் இன்றைய நடிகர்கள் நடித்தால் அவரை கல்லால் அடிக்காமல் இன்றைய ரசிகர்கள் இருக்கமாட்டார்கள் என்பதுதான் உண்மை
சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டினால் அவரைவிட நடிப்பில் எந்த விதத்திலும் குறையாத பல பழம் நடிகர்கள் இருக்கிறார்களே அதிலும் பல நகைச்சுவை நடிகர்கள். அவர்கள் நகைச்சுவையாய் நடித்தாலும் மக்களை சிரிக்க வைத்து கொண்டே பல நல்ல கருத்துகளை இந்த சமுகத்திற்கு சொல்லி சென்று இருக்கிறார்கள் அவ்ர்களுக்கும் மணி மண்டபம கட்டுவதுதானே சிறப்பு..
அந்த காலங்களில் இணையம் என்று ஒன்று கிடையாது அதனால் இப்படி ஒரு மணிமண்டபம் கட்டி அதில் தலைவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அவரின் வாழ்க்கை சம்பந்தபட்ட புகைப்படங்கள் நூல்கள் பலவற்றை காட்சி பொருட்களாக வைப்பார்கள் அதை மாணவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் வந்து பார்த்து அவர் சம்பந்தப்பட தகவல்களை அறிந்து கொள்வார்கள் இதற்காகவே அந்த காலங்கலில் மணி மண்டபங்கள் கட்டப்பட்டன.....
ஆனால் இணையம் வந்த பின் எல்லா தகவல்களையும் இணையம் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது என்று இருக்கும் போது மணிமண்டபங்கள் இவ்வளவு செலவு செய்து கட்டுவது அவசியம்தானா என்று கண்டிப்பாக யோசிக்க வேண்டும்
நடிகர் பிரபு என் அப்பா சிறந்த நடிகர் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடி பெற்று இருக்கிறார். அவரிடம் ஒரு கேள்வி....சிவாஜி ஒரு சிறந்த நடிகர் அதுமட்டுமில்லாமல் அவர் உங்கள் தந்தைதானே..இப்படி அரசிடம் நீங்கள் கோரிக்கை வைப்பதற்கு பதிலாக உங்கள் அப்பா நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த சொத்தில் இருந்து ஒரு சிறிய தொகையை பயன்படுத்தி ஒரு இணைய தளத்தை தொடங்கி அதில் அவர் சம்பந்தப்பட்ட தகவல்களை போட்டோக்களை பேச்சுகளை நடித்த படங்களை அழகாக ஆண்டு வாரியாக தொகுத்து அளித்து இருந்தால் அது பலருக்கும் பயன் அளித்து இருக்கும் உலகில் எந்த பகுதியில் உள்ளவரும் அதை பயன்படுத்தி பலன் அடைவார்கள்தானே ஒரு வேளை அதை செய்ய வசதி இல்லையென்றால் அதை திரைப்பட நடிகர் சங்கத்திடம் கேட்டு பெற்று இருக்கலாம் அல்லது அரசிடம் கேட்டு பெற்று இருக்கலாம்.. ஆனால் அப்படி பயன் உள்ளதாக செய்யாமல் மணிமண்டபம் கட்டு சிலை வைத்துவிட்டால் என்ன லாபம் சில நாட்கள் கழித்து காக்கைகல் மற்றும் பறவைகள் வந்து எச்சமிட்டு போகும் அல்லது காதலர்கள் வந்து அவசர தேவைகளுக்காக வந்த் அந்த இடத்தை பயன்படுத்தி கொள்வார்கள் அவ்வளவுதான் நடக்கப்போகிறது
அரசிற்கு ஒரு வேண்டுகோள் இனிமேல் வருங்காலத்தில் இப்படி ஒவ்வொருவருக்காக தனித்தனியாக மண்டபம் கட்டுவதை விட தமிழகத்தில் இருக்கு ஒரு மியூசியத்தை தேர்வு செய்து அதை விரிவுபடுத்தி அதில் இப்படி சிறப்பானவர்கள் மற்றும் தலைவர்கள் பற்ரிய தகவல்களை திரட்டி ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தால் அது மிக சிறப்பாக இருக்கும் அதை குழந்தைகள் முதல் பொது மக்கள் வரை வந்து பார்த்து பயன் அடைவார்கள்
நடிகர் சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா? என்ற பதிவு 2015 எனது தளத்தில் வெளிவந்து இருக்கிறது, இங்கு சொல்ல விரும்பிய பல கருத்துக்கள் அங்கே சொல்லி இருப்பதால் அதை மீண்டும் இங்கே சொல்ல விரும்பவில்லை அதை படிக்காதவர்கள் இங்கே சென்று அதை படிக்கலாம் http://avargal-unmaigal.blogspot.com/2015/08/sivaji.html
மிகப் பெரிய பிரபலங்களுடன் தொடர்பு கொண்டு
அவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டு
தன்னை பிரபலமாக காண்பித்து கொண்டு
தமிழக பிரபலங்கள் மற்றும் தமிழர்களுக்கு அல்வா கொடுக்கும்
அமெரிக்க தமிழர் பற்றிய விபரம் இன்னும் சில தினங்களில்
எனது வலைத்தளமான
வெளியிடப்படும்
இவரிடம் ஏமாந்தவர்களில்
விஜய் டிவி கோபிநாத், லேனா தமிழ்வாணன்,
பாடலாசிரியர் முத்துகுமார் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
மற்றும் பல பல்கலைகழக வேந்தர்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்ல பதிவு... வாழ்த்துக்கள்!
ReplyDeleteநண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி..
DeleteNethi adi....what a valid points?
ReplyDeleteநண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி..
Deleteசெம பதிவு மதுரை சகோ! உங்கள் கருத்துகளை ஆதரிக்கிறோம். நீங்கள் சொல்லியிருப்பது போல் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கலாம். இப்படி மக்களின்பணம் வீணடிக்கப்படுவதர்குப் பதில் எத்தனையோ நல்ல செயல்கள் செய்யலாம். படிப்பதற்கு வசதியில்லாமல் இருக்கும் குழந்தைகளைப் படிக்க வைக்கலாம். ஏழைகளும் உழைப்பதற்குத் தகுந்த வாறு தொழில்களை உருவாக்கி குறிப்பாக யாசிப்பவர்கள் இல்லாமல் செய்யலாம்...எவ்வளவோ செய்யலாம்...சொல்லிக் கொண்டே போகலாம்...
ReplyDeleteகீதா
எவ்வளவோ செய்து கொண்டு போகலாம் ஆனால் செய்வதுதான் இல்லை.... இப்படி மணிமண்டபம் கட்ட்டுவதோடு முடிந்ததா அதை எத்தனை பொது மக்கள் வந்து காண்க போகிறார்கள் என்ன காதலர்கள் தங்களுக்கு ஒதுங்க இடம் கிடைத்துவிட்டதாக அங்கே செல்லுவார்கள் அதுதான் நடக்கப் போகீறது அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் நினைவு அஞ்சலி என்று அதற்கு அரசாங்கம் விழா எடுக்கும் அது தான் நடக்கிறது உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி..
Deleteகவுண்டமணி சொல்லுற மாதிரி சினிமாக்காரங்கதான் பொறந்தமாதிரி அலட்டிக்குறாங்க. சிறந்த ஆசிரியர், டாக்டர், சலவை தொழிலாளி, பியூன்க்குலாம் மணிமண்டபம் கட்டுவாங்களா?!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி..
Deleteஹீஹீ ஆசியர்கள் டாக்டருக்கு எல்லாம் என்ன பெரிய கொம்பா இருக்கு என்ன? அவர்களுக்கு மண்டபம் கட்டுவத்ற்கு
இதெல்லாம் தேவையா என்கிற எண்ணம் எனக்கும் தோன்றும்.
ReplyDeleteஒவ்வொரு துறையில் மிக சிறந்தவர்களுக்கு இப்படி செய்வது நல்லதுதான் ஆனால் தனித்தனியாக மண்டபம் கட்டுவத்ற்கு பதிலாக ஒரு பெரிய மண்டபம் ஒன்று கட்டி அதில் எல்லா துறையிலும் சிறந்தவர்களை சிறப்பிக்கலாம் என்பதுதான் என் கருத்து
Deleteகணித மேதை ராமனுஜருக்கு மண்டபம் இருக்கிறதா? முதல் பெண் டாக்டரான முத்து லட்சுமிக்கு மண்டபம் இருக்கிறதா? இப்படி பலரை சுட்டிக்காட்டலாம் அவர்களுக்கு எல்லாம் இல்லதா போது நடிகருக்கு மட்டும் ஏன்
"அவரைப்போல இன்றைய நடிகர்கள் நடித்தால்" என்கிற வரிக்கு பதில் சொல்லலாம் என்று நினைத்து வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
ReplyDeleteஸ்ரீராம் நீங்கள் சொல்ல நினைப்பது என்னவென்று என்னால் யூகிக்கமுடிகிறது.
Deleteஎப்போதும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தாரளமாக இங்கு சொல்லலாம். சில சமயங்களில் நீங்கள் சிந்திக்கிற மாதிரி நான் சிந்தித்து இருக்க முடியாது ஒரு வேளை நீங்கள் சொலவதில் நல்ல பாயிண்ட் கூட இருக்கலாம். இல்லை அது தவறாக இருக்கும் போது அதற்கு பதில் நான் தரலாம். நீங்கள் என் கருத்திற்கு மாற்று கருத்து சொல்வதால் உங்களை எதிரியாக எல்லாம் நினைக்கமாட்டேன் கவலை இல்லாமல் தாராளமாக சொல்லலாம். இங்கு நான் எழுதுவது எல்லாம அன்றை தின மனநிலையில் நான் படித்த கேட்ட செய்திகளை வைத்து எழுதுகிறேன்... நான் எழுதுவது எல்லாம் சரி என்று எப்போதும் நான் வாதிடுவதில்லை அது தவறாக கூட இருக்கலாம்...அதனால் நீங்கள் சொல்ல நினைப்பதை இங்கு எப்போது தாரளமாக சொல்லலாம்
சிவாஜியைப் போல இன்றைய நடிகர்கள் நடிக்க முடியாதுதான் ஆனால் அப்படியே நடித்தாலும் இந்த தலைமுறைக்கு அது நிச்சயம் பிடிக்காது அதாவது 20 வயதிற்கு உட்பட்டவர்களை நான் இங்கே குறிப்பிடுகிறேன்
Deleteநியாயமான கேள்விதான்.. நானும் நினைத்தேன்.. இவ்ளோ செலவழிச்சு இது தேவைதானா என... ஒருவர் உயிரோடு இருக்கும்போதே கட்டினால் ஓரளவு ஏற்கலாம்.. இல்லாதுபோன பின் இந்த ஆடம்பரங்கள் எதுக்கு.. நாம் என்ன செய்ய நினைத்தாலும் உயிருடன் இருக்கும்போதே செய்து மகிழ்வித்திட வேண்டும்... போனபின் என்ன பண்ணி என்ன ஆவது.. எனத்தான் நான் நினைக்கிறேன்.
ReplyDelete
Deleteஉண்மையிலே சிவாஜியை அவரின் நடிப்பை மதிக்கும் கலையுலகத்தினர் இருந்தால் அவர்களே பணத்தை நன்கொடையாக கொடுத்தும் மீதியை நடிகரின் நடிப்பை பெரிதும் பாராட்டும் பொது மக்களிடம் இருந்து கலெக்ட் செய்து மண்டபம் கட்டலாமே? அதற்கு யாரும் எதிர்ப்பா தெரிவிக்கப் போகிறார்கள் இந்த நடிகர் எல்லாம் சிவாஜியின் நடிப்பை பார்த்துதான் நாங்கள் நடிப்பை கற்றுக் கொண்டோம் என்று சொல்லும் போது அவர்களின் குருக்காக இந்த் காணிக்கையாக இதை செய்யக் கூடாதா என்ன்? அவர்களின் பணம் என்றால் நோ பொதுமக்களின் வரிப்பணம் என்றால் எஸ்ஸா ? நல்லா இருக்கு அவர்களின் நியாயங்கள்
உங்களுக்குத் தெரியுமா மோடிக்குக் கோவிலே கட்ட இருக்கிறார்களாம் இன்றைய செய்தியில் படித்தேன்
ReplyDeleteசிலருக்கு அவர் வருமானம் வர அவர் வழி செய்து இருப்பார் அதனால் அவர்களின் கண்களுக்கு அவர் கடவுளாக தெரிவதால் அவர்கள் கோயில் கட்ட முனைகிறார்கள் போல
Deleteமிகச்சரியாக சொன்னீர்கள் நண்பரே நானும் மூன்று வருடங்களுக்கு முன்பே சிலைகள் அவசியமில்லை என்று பதிவு எழுதினேன்.
ReplyDeleteநம்நாட்டில் மக்கள் பணத்தை செலவு செய்யும் பொழுது மக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை
சிவாஜி கணேசனால் மட்டுமல்ல எந்த ஒரு நடிகனாலும் பிரயோசனம் இல்லை அவர்கள் நடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்து வைத்தார்கள்.
விடிஞ்சு எந்திரிச்சா டிவியில் இந்த பிரபுவோட தொல்லை தாங்க முடியவில்லை நண்பரே எல்லோருக்கும் ஐஸ்வர்யா வேணும்னு சொல்றான் கொஞ்சம் சொல்லி வையுங்களேன்.
த.ம.3
Deleteஅவரின் அடுத்த கோரிக்கை ஐஸ்வர்யாவிரற்கும் மணி மண்டபம் கட்டுவதாக இருக்கப் போகிறது நண்பரே
உண்மை தான்.... நீங்க கொடுத்திருக்கும் மியூஸிய ஆலோசனை நல்ல இருக்கு இதை யாரவது பார்த்து இந்த இந்த முறையை பின்பற்றினால் நல்ல இருக்கும்
ReplyDelete
Deleteநல்லா இருப்பதை யார் பின் பற்றப் போகிறார்கள்?
பலரது உள்ள கிடக்கை வெளிக்கொணர்ந்த பதிவு இது.
ReplyDelete"Money" மண்டபத்தால் என்ன லாபம் ... எல்லாமே லாபம்தான்.
கட்ட பொம்மனாக நடித்தார்,வா ஊ சி யாக நடித்தார், இப்படி வசனம் பேசினார் அப்படி வசனம் பேசினார் என்றெல்லாம் சொல்லி புகழ வேண்டுமாயின் அந்தந்த திரைப்படங்களின் கதை வசன கர்த்தாக்களையும், சரியாக- தாம் விரும்பும்படி காட்சிகள் பதிவாக்கம் செய்யப்படும்வரை நுணுக்கமாக யோசித்து - சிந்தித்து இயக்கிய இயக்குநர்களுக்கன்றோ அந்த பாராட்டும் புகழும் போய் சேரவேண்டும்.
அல்லது மக்கள் கொடுத்து தாம் பெற்ற சம்பளத்தின் ஒரு சிறு துரும்பையேனும் மக்கள் நலனுக்கென்று "ஈகை உள்ளத்தோடு" கொடுத்திருந்திருக்க வேண்டும்.
வலிமையுள்ளவனும் அரசின் துணை உள்ளவனும் எதைவேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாம் இன்றைய சூழலில்.
தங்கள் கருத்துடன் இழைகிறேன்.
நன்றி.
கோ
நீங்கள் சொல்லிய அனைத்தும் மிக சரியே....ஆனால் பலர் அப்படி சிந்திக்காமல் இருக்கிறார்கள். சிவாஜி சிறந்த நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை.. அவர் வரலாற்று சிறப்பு மிக்க பட்ங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் அந்த படங்கள் எல்லாம் பெட்டிக்குள் உறங்கி கிடக்கின்றன. இங்கு அமெரிக்காவில் பள்ளிக் குழனதைகளுக்கு வரலாற்று பாடம் நத்தும் போது அது சம்பந்தமான படங்களை பொட்டு காட்டுகிறார்கள்.. ஆனால் இந்தியாவில் அல்லது தமிழகத்தில் அது போல எந்த பள்ளியிலாவது காட்டப்படுகிறதா என்ன? கட்ட பொம்மனை பற்றி அல்லது வ.உ,சியை பற்றி வரலாற்று பாடம் எடுக்கும் போது சிவாஜி நடித்த இந்த படங்களை அவர்களுக்கு இளம் வயதில் போட்டுக்காட்டலாமே . அப்படி செய்வது சிவாஜிக்கு காட்டும் சிறப்பு மரியாதைதானே அப்படி யாராவ்து செய்கிறார்களா என்ன? அவர்கள் செய்வது எல்லாம் இந்த காலத்தில் வரும் பாடல்களுக்கு ஏற்ற குத்து டான்சை சொல்லி கொடுத்து பள்ளி விழாக்களில் ஆட சொல்லுகிறார்கள் ஹும்ம் இதுக்கும் மேல என்னததை சொல்ல
Deleteசெம கலக்கல் பதிவு ..நாட்டில் வீடு உணவு இல்லாமற் எத்தனையோ பேர் இருக்காங்க .இந்த மணி மண்டபத்தை கட்ட ஆன செலவில் ஏழைகளுக்கு ஏதாச்சும் செய்திருக்கலாம்..
ReplyDeleteஇப்பவேனெஞ்சு பதறுது இன்னிக்கு சிவாஜி இன்னும் வரும் நாளில் ஒவ்வொருவருக்கும் மணி மண்டபம் கட்டணும்னா இடம் இருக்குமா ??
நீங்க சொன்ன மியூசியம் நல்ல ஐடியா ..அவர் சிறந்த நடிகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ..
தொலைக்காட்சியில் வாரம் ஒரு முறை இப்படி புகழ்வாய்ந்த நடுக்கர்களின் படங்கள் மற்றும் அவர் பற்றிய செய்தி குறிப்பிகளை ஒளிபரப்பினால் போதும் சிவாஜி மனதில் நீங்காமலிருப்பார் ...
அந்த மணிமண்டபத்தை எத்தனை பேர் சென்றுபார்க்கப்போறாங்க ???
Deleteஎது பயனுள்ளதாக இருக்குமோ அதை செய்து அந்த நபரை சிறப்பு செய்யாமல் யாரோ பலன் பெறுவதற்காக இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள் வரிப்பணத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டும்போதோ, மக்கள் வரிப்பணத்தில் இலவச டிவி.மிக்ஸி,கிரைண்டர்,சேலை,வேட்டி வழங்கி கஜானாவைக் காலிசெய்தபோதோ வராத பொறுப்புணர்ச்சி, தமிழ் நாட்டில் பெருமைகளில் ஒன்றாக இருக்கிற சிவாஜி கணேசனுக்கு ஒரு 1 கோடி ரூபாய் செலவில் மண்டபம் அமைத்தால் வருகிறது பார்த்தீர்களா? அதான்...அங்கதான் நீங்கல்லாம் நிக்கறீங்க! வாழ்த்துகள். :-)
ReplyDeleteநண்பரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி.. உங்கள் கருத்தை பார்த்து என் மனதில் எழுந்ததை இங்கு பதிலாக எழுதி இருக்கிறேன். அதில் தவறு ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி ( என மனைவி உங்களின் எழுத்திற்கு fan . நண்பர் பால கணேஷ் நீங்கள் எழுதிய புத்தகததை பரிசாக தந்தார் அதை என்மனைவி படித்து மகிழ்ந்தார் நன்றி இருவருக்கும் )
Deleteமக்கள் வரிப்பணத்தில் யாருக்கு செய்தாலும் தவறுதான் அதில் அண்ணா எம்ஜியார் ஜெயலலிதா போன்றவர்களும் விலக்கு அல்ல அதுமட்டுமல்ல அவர்களாவது தமிழக முதல்வராக இருந்திருக்கிறார்கள் என்பதால் அதில் சிறு விலக்கு அளிக்கலாம் ஆனால் என்னைக் கேட்டால் அதுகூட தவறு என்பேன்.... ஆனால் நடிகருக்கு செய்வது என்பது எல்லாம் சுத்த வேஸ்ட் அதைத்தான் நான் இங்கு சொல்லுகிறேன். அதுமட்டுமல்லாமல் இப்படி ஒவ்வொருவருக்காக மணிமண்டம் கட்டுவதற்கு பதிலாக மணிமண்டபத்தில் என்ன வைத்திருக்கிறார்களோ அதையே மீயூசியத்தின் ஒரு பகுதியில் வைக்கலாம் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறேன் அது தப்பா?
நீங்கள் இங்கு அதற்கு ஒரு கோடிமட்டும் செலவு ஆனது என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அரசாங்கம் 2 அரைகோடிக்கு மேலாக செலவழித்து இருக்கிறது என்று தகவல்.
அதுமட்டுமல்லாமல் இந்த மண்டபத்தை திறக்க விழா நடத்திய செலவை கணக்கு பார்த்தால் நிச்சயம் அதுவே லட்சகணக்கில் இருக்கும்.
இப்படி செய்வதற்கு பதிலாக பெண்களுக்கு கல்லூரிகளிம் பொது இடங்களிலும் கழிப்பறை கட்டினால் எவ்வளவு பயனாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறேன் அது உங்கள் கண்ணில் பயன்படவில்லையா?
உங்கள் வீட்டு பெண்களிடம் கேட்டுபாருங்கள் பொது இடங்களில் கழிவறை எவ்வள்வு அவசியம் என்று சொல்லுவார்கள். நம்மை போல உள்ள ஆடவர்களுக்கு அதன் அவசியம் தெரிவதில்லை
ஒருவேளை நீங்கள் சிவாஜி ரசிகராக இருப்பதால் நீங்கள் இப்படி நினைக்கிறீர்கள் போல இப்படி ஒவ்வொருவரும் நினைத்தால் அதை நிப்பாட்ட வழியே இல்லை..
இப்படி யாரவது எடுத்து சொன்னால் உங்களின் பொறுப்புணர்ச்சியை கண்டு வியக்கிறேன் என்று அவர்களின் தலையில் தட்டினால் எப்படி?
இறுதியாக நான் சொல்லவது எனக்கு ஏதோ பொறுப்புணர்ச்சி வந்து எல்லாம் இங்கு பதிவுகள் எழுதுவதில்லை... நான் நடக்கும் நாட்டு நடப்புகளை அறிந்து அதனால் என்னுள் எழும் கருத்துக்களை இங்கு பொழுது போக்கிறகாக பதிகிறேன் அவ்வளவுதான்
அது போல இதை படிக்கும் மற்றவர்களும் பொறுப்புணர்ச்சியுடன் செய்லபட வேண்டும் என்று நினைத்தது கூட இல்லை..
தமிழில் சிறந்த நூலான திருக்குறளை படித்தும் அறிவை வளர்த்து பொறுப்புடன் நடந்து கொள்ளாதவர்களா இங்கு வந்து என் பதிவை படித்து பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளப் போகிறார்கள்
சிவாஐி ஒரு நடிகர் மட்டும் அல்ல, அவர் ஒரு பண்பாட்டு குறியீடு. நாட்டு பற்றை, வாழ்வியல் தத்துவங்களை, மனித உணர்வுகளை தம் தொழில் மூலம் தமிழருக்கு உணர்த்தியவர். ஒரு தலைமுறையையே நல்லோழக்க தலைமுறையாக மாற்றியது அவர் நடிப்பு. ஒரு நூலகம் செய்ய வேண்டியதை அவர் செய்து காட்டினார்.
ReplyDeleteநல்ல யோசனை, இணைய தளம் அமைத்து அவரைப் பற்றிய தகவல்களை பதிந்து வைக்கலாம்.
ReplyDelete