Friday, October 20, 2017

அமெரிக்காவில்  இந்தியர்கள் கொண்டாடும் தீபாவளி இப்படித்தான்

அமெரிக்காவில் முக்கியமான நகரங்களில் இந்தியர்கள் மிக அதிக அளவில் வசிக்கிறார்கள் அதுமட்டுமல்லாமல் கோயில்களும் இந்த நகரங்களில் மிக அதிகமாகவே இருக்கிறது.. இப்படியே போனால் இந்த நகரங்களில் இருக்கும் சர்ச்களைவிட கோயில்களின் எண்ணிக்கை அதிகமாக கூடிய சூழ்நிலை ஏற்படலாம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தீபாவளியும் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுவும் நான் இருக்கும் மாநிலத்தில் இந்திய மக்கள் மிக அதிகமே அதனால் தீபாவளியும் மிக கொண்டாட்டமாகவே இருக்கிறது. என்ன ஒரு குறை இந்தியா போல தீபாவளிக்கு அரசு விடுமுறை கிடையாது. ஆனால் நான் வசிக்கும் மாநிலமான நீயூஜெர்ஸியில்  பல பள்ளிகளில் தீபாவளி விடுமுறை வீட்டு இருக்கிறார்கள் .


என் பெண் படிக்கும் பள்ளியில் இந்த ஆண்டுவிடுமுறை இல்லை . ஆனால் இந்திய குழந்தைகள் மட்டும் வேண்டுமானல லீவு எடுத்து கொள்ளலாம் ஆனால் அதை அப்ஜண்டாக கருதமாட்டார்கள். அடுத்த ஆண்டு முதல் விடுமுறை விடுவதற்காக மாணவ்ர்களிடம் இருந்து கருத்து கேட்டு விடுமுறை விடப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்.... ஆனால் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு  நான்கு நாட்களுக்கு நோ ஹோம் வொர்க்டே என்று அறிவித்து மாணவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார்கள்.  இதனால் என்னவோ அமெரிக்க மாணவர்களும் அடுத்த ஆண்டுமுதல் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக கையெழுத்து போட்டு ஆதரித்து இருக்கிறாகள்...

இதை விட முக்கியமானது என்னவென்றால் எங்கள் மாநிலத்தில் பட்டாசு வைத்திருப்பதற்கும் வெடிப்பதற்கும் தடை உண்டு. ஆனால் பக்கத்து மாநிலத்தில் அதற்கு தடை இல்லை என்பதால் எங்கள் மாநிலாத்தில் வசிப்பவர்கள் அங்கு சென்று பட்டாசுகளை திருட்டுதனமாக வாங்கி வெடிப்பதுண்டு. மாட்டினால் அபராதம் கட்ட வேண்டும் ஆனால் இந்த தடவை எங்கள் மாநில அரசு அந்த தடையை நீக்கியதால் முதன் முறையாக கடைகளில் பட்டாசு விற்கபட்டதும் நம்மக்களும் மிக ஆர்வமாக வாங்கி வெடித்து மகிழ்ந்து தீபாவளி கொண்டாடினர் ( “Since June 2017, when the NJ state legalized the fireworks possession and sale,) பல கடைகளில் அதுவும் அமெரிக்கவில் உள்ள ஹோல்சேல் ஸ்டோரான காஸ்ட்கோவில் தீபாவளிக்கு என்றே பட்டாசுகள் விற்கப்பட்டன என்பது மிக சிறப்பு (கவனிக்க : இங்கு பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தற்கும் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையின் போது விடுமுறை அளிக்கப்பட்டதற்கும் மோடிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதை அறிந்த தேசபக்தர்கள் இதற்கு மோடிதான் காரணம் என்று கூறி போஸ்டர் அடித்து சொன்னாலும் சொல்லுவார்கள் என்பதால்தான் )


இங்கு நம் இந்தியர்கள் தீபாவளியின் போது கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள் பல கோயில்கள் நாள் முழுவதும் இதற்காகவே திற்ந்து வைத்திருப்பார்கள் சிறப்பு பூஜைகளும் நாள் முழுவது நடந்து கொண்டிருக்கும். அதன் பின் நண்பர்களை கூப்பிட்டு விருந்து வைப்பதும் உண்டு அல்லது எல்லோரும் சேர்ந்து ஒன்றாக பார்ட்டி கொண்டாடுவதும் உண்டு ஆனால் வாரநாளில் தீபாவளி வந்திருப்பதால் அடுத்த நாள் எல்லோரும் வேலைக்கு செல்லவிருப்பதால் பல இடங்களில் வீக்கெண்டுகளில் தீபாவளி பார்ட்டி நடை பெறும்.

வழக்கமாக பேண்ட் சர்ட் அல்லது ஸ்கர்ட் போட்டு தொந்தியும் தொப்பையுடன் வலம் வரும் பெண்கள் தீபாவளி சமயத்தில் சேலை அல்லது சுரிதார் போட்டு வருவதால்  மிக அழகாக காட்சியளிப்பார்கள். குண்டானவர்களை அழகாக காண்பிக்கும் உடை அலங்காரம் நம் இந்திய உடை அலங்காரம்தான்.நேற்று கடைகளுக்கு சென்ற போது இப்படி அழகான பல இந்திய பெண்களை காண வாய்ப்பு கிடைத்தது..


சரி இப்படி பலரும் தீபாவளி கொண்டாடினால் நாமும் கொண்டாடுவதுதானே சிறப்பு அதனால் இன்று இரவு நண்பர்களின் வீட்டில் கொண்டாடுவதாக முடிவு செய்து நாங்களும் தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடினோம் இதில் என்ன கூத்து என்றால் பட்டாசிகளி வாங்கி வெடிக்க குழந்தைகளை கூப்பிட்ட போது இதில் என்ன பெரிய  சந்தோஷம் என்று கேள்வி கேட்டு அவர்கள் வெடிக்காமல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இறுதியில் பெரியவர்கள் மட்டுமே பட்டாசு கொளுத்தி சந்தோஷப்பட்டு இந்தியாவில் வசிக்கும் போது கொண்டாடிய தீபாவளிகளை நினைவில் கூர்ந்து  சந்தோஷப்பட்டனர்.

நீங்களும் குழந்தைகள் போல பட்டாசு வெடித்து சந்தோசப்பட்டிர்களா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.காரணம் நான் பொதுவாக எங்கு சென்றாலும் பார்வையாளனகவே இருப்பேன்...

அப்படி நான் பார்வையாளனாக இருந்ததால்தான் என் மனைவி நீண்ட நாட்களுக்கு அப்புறம் சேலைகட்டி இருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டு ரசித்து கொண்டு இருந்தேன். தீபாவளி வருஷத்திற்கு ஒரு முறை என்பற்கு பதிலாக தினம் தினம் என்று இருந்தால் தினமும் சந்தோஷமாக இருக்கலாம் ஆனால் என்ன செய்வது......ஹும்ம்ம் எதையாவது பார்த்து ரசித்தால் சந்தோஷமாக இருக்கும் ஆனால் மனைவி சேலை கட்டி இருப்பதை பார்த்து ரசித்தால் சந்தோஷம் மட்டுமல்ல நல்லா மூடும் வந்திடும்....அப்ப என்ன ஜாலியாக இருந்தீர்களா மதுரைத்தமிழன் என்று கேட்டால் என்ன சொல்வது..பார்ட்டி முடிந்து வீட்டிற்கு வர 12 மணிக்கும் மேல் ஆகிவிட்டது அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி இருப்பதால் அவரவர் ரூமிற்கு சென்று தூங்கிவிட்டதால் "மூடு"டை  வீக்கென்ட் வரை எக்டென்ஷன் பண்ணி வைத்திருக்க முடிவு செய்து இருக்கிறேன். வீக்கென்ட் முடிந்ததும் சொல்லுகிறேன் நான் ஜாலியாக இருந்தேனா அல்லது என் மனைவி பூரிக்கட்டையை வைத்து எனக்கு பூஜை செய்தாளா என்று

கொசுறு : இந்தியாவில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுபுற சூழ்நிலை கெடுகிறது என்று சொன்னவர்கள் ஒருவேளை அமெரிக்காவே பட்டாசு வெடிக்க ஆரம்பித்துவிட்டது அமெரிக்கன் செஞ்சால் அது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லி இந்தியாவில் மீண்டும் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பிகலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

New York: New Jersey residents of Indian origin have a special reason to be happy this Diwali, as they can buy fireworks right in the state from their favorite Costco outlets.

This will be the first time Costco outlets will sell fireworks specially for the Diwali festival.

“Since June 2017, when the NJ state legalized the fireworks possession and sale, we had planned to give our customers a treat this Diwali season. We had little time to plan elaborately for the sale, we managed to begin with limited varieties this year. We are introducing shipment of sparklers and rising lights. Going forward we will be doing this elaborately every Diwali, said Michael De Jesus, Assistant General Manager at Costco, Lawrenceville, New Jersey.

“We have a whole lot of Indian population in this region and we made special request to our head office for adding fireworks.” Not all Costco outlets in the state will sell fireworks but only select outlets. Morganville, North Brunswick and Lawrenceville outlets have stocked them. “Next year we intend to bring more varieties,” said Michael.

“So glad this year we can buy fireworks here in New Jersey. As it was banned in the state we used to travel to Pennsylvania during Diwali to buy and play fire crackers. Fireworks is an integral part of Diwali celebrations, said Ankit Agarwal a Costco Customer.

Costco has always been friendly and caring to the needs of its ethnic population. “Introduction of organic grains, pulses like Toor Dhal, Channa Dhal, Samosas, Naan varieties have all been making Indians feel at home and the news of fire crackers for Diwali is a real treat this festive season,” said Neena Swami, an excited customer. Fireworks are also available for online sale in Costco websites.

Earlier in June this year Governor Chris Christie legalized the sale of non-explosive, non- aerial fireworks such as sparklers and party poppers, glow- worms and smoke devises.

Along with Delaware and Massachusetts, New Jersey earlier had been having a blanket ban on fireworks. Selling sparklers could put one under serious risk of conviction of fourth degree crime carrying up to 18 months imprisonment.

Even today possession of explosive aerial fireworks is treated as a disorderly person’s offense and carries up to $500 fine. Fire crackers, sky rockets and bottle rockets still remain in the banned list. By law sale is limited to customers 16 years and above.
http://www.thesouthasiantimes

27 comments:

  1. பொறாமையாக இருக்கிறது தமிழா .எங்கள் ஊரான நியூயார்க்கில் இப்போதும் தடை இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்ப நீயூஜெர்ஸியிலும் ஒரு வீட்டை வாங்கி போட்டுடுங்க கெஸ்ட் ஹவுஸ்சாக அதன் பின் நீங்களும் பட்டாசு வெடிச்சு மகிழலாம்

      Alfred Thiagarajan ஒரு சின்ன வீடாக கிடைத்தால் சொல்லுங்களேன் ?

      Delete
  2. தீபாவளி அனுபவம் ரசிக்கும்படி இருந்தது பகிர்வுக்கு நன்றி.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே படித்து ரசித்து கருத்துகள் இட்டதற்கு

      Delete
  3. ஹாஹா அருமையான அமெரிக்க தீபாவளி அனுபவம் :) மனைவி சேலை நீங்க என்ன ட்ரெஸ் போட்டீங்க வேஷ்டி சட்டை or குர்தா :)

    எங்க ஏரியாவில் பார்ட்டி சனிக்கிழமைதான் நடக்கும் பட்டாசு சத்தம் கொஞ்சூண்டுதானே கேட்டது நேற்று நைட் ..

    :) அதென்ன சேலை அல்லது சுரிதார் போட்டு மட்டும் போல்ட் எழுத்தில் :) பூரிக்கட்டை confirmed :)

    எங்க ஊர்ல லீவ்லாம் இல்லை ஆனா பண்டிகை கொண்டாடுறவங்க லீவ் எடுத்துக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. பாவப்பட்ட இந்த தமிழன் Anti Indian அதனால் எப்போதும் அணிவது ஜீன்ஸ் மட்டுமே

      நம்ம பெண்கள் ஒல்லியாக இருந்தாலும் குண்டாக இருந்தாலும் சேலைகட்டியதும் அழகாக மாறிவிடுகிறார்கள் என் கண்களுக்கு



      பூரிக்கட்டை பூஜை விக்கெண்டில் கன்பார்ம்தான் ஆனால் என்ன இந்த தடவை கொஞ்சம் அதிகமாக இருக்கலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது

      Delete
    2. ஹாஹாஹா ஏஞ்சல் கண்டிப்பா பூரிக்கட்டை கன்ஃபார்ம்ட்...

      கீதா

      Delete
  4. நல்ல சுவாரஸ்யமான பதிவு. அமெரிக்காவிலும் யாரும் நரகாசுரனை நினைத்து வெடி வெடிக்கவில்லை போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies

    1. இங்கு நரகாசுரனை நினைத்து பண்டிகை கொண்டாடுகிறார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால் நம்ம கலாச்சாரத்தை காப்பாற்றவே இங்கு பண்டிகைகள் கொண்டாப்படுகின்றன

      Delete
  5. எங்க நாட்டுலேயும் தீபாவளி லீவ் எல்லாம் கிடையாது. கடந்த அஞ்சாறு வருசங்களா நியூஸி பார்லிமென்ட்டில் தீபாவளி கொண்டாடறாங்க. அது எப்பவும் தீபாவளி வர்ற வாரத்துக்கு முன்னாடி வரும் வெள்ளிக்கிழமைகளில்தான். இந்தியாவில் ஒருநாள் தீபாவளின்னால் நாங்கள் நியூஸியில் பல முறை கொண்டாடுவோம். ஆனால் எல்லாம் வீகெண்டுக்கு நேர்ந்து விட்ருவோம்.

    இந்த வருசம் வீட்டு தீபாவளியைச் சேர்த்தால் வெறும் ஏழுதான். இன்றைக்கு சனிக்கிழமை இல்லையோ.... மத்யானம் கிளம்பணும் தீவாலி கொண்டாட :-)

    ReplyDelete
    Replies
    1. வலையுலகின் மூத்த பெண் பதிவரானவரும் அன்றும் இன்றும் என்றும் மாறாமல் மெருகுடன் வலையுலகில் பவனி வரும் 'வைஜெயந்திமாலா'வுமான நீங்கள் தீபாவளி அன்று வந்து கருத்து பரிசை வழங்கிய என்னை மகிழ்வித்த உங்களுக்கு நன்றியம்மா

      Delete
  6. என்னாதூஊ சேலை கட்டிய இந்தியப் பெண்களைப் பார்க்கக் கடைக்குப் போனீங்களோ கர்ர்ர்ர்ர்:)...இனிமேல் இப்படியான கடைகளுக்குப் போகும்போது கறுப்புக் கண்ணாடி போட்டுப் போகவும்... அப்போதான் பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பலாம்... ஏதோ என்னாலான ஒரு சிறு உதவி;) ஹா ஹா ஹா...

    ReplyDelete
    Replies
    1. கடைக்கு போனால் கண்ணாடியை மாட்டி கொண்டு போவதைவிட மனைவியை கழட்டிவிட்டு போவதுதான் நல்லது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன்.. ஆனால் மனைவியிடம் நீ கடைக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம் நான் கஷ்டப்பட்டு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருகிறேன் என்று சொல்லி சென்று கஷ்டப்படாமல் ரசித்து மகிழ்வேன்

      Delete
  7. எங்களுக்கு இந்தியாவிலேயே பட்டாசு வெடிக்கும் சுவாரஸ்யம் போய்விட்டது! இனிப்பு, பலகாரங்களுடன் உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்து என்றே கழிந்தது!

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் கண்டிப்பாக மறுபடியும் துளிர் விடும்!பொறுத்திருங்கள்.

      "பாரதீயன்"

      Delete
    2. நமக்கு வயதாகிவிட்டதால் சுவராஸ்யம் போகிவிடும் ஆனால் சிறுவர்களுக்கு அதுவே மகிழ்ச்சி.......அது போல இன்னும் சற்று வயதானவுடன் இனிப்பு பலகாரம் மேலுள்ள ஆசையும் போகிவிடும்

      Delete
  8. நன்றி முதலில் பகிர்விற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் இந்தியர்களும் அங்கு தீபாவளி கொண்டாட முடிந்தமைக்கு. உலகெங்கும் மதிப்பவர்கள் இருக்கிறார்கள் மற்றவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள. நடுவில் ரெட் லைனுக்கும் வேலை கொடுத்தாச்சு கண்டம்விட்டு கண்டம் தாண்டினாலும் கண்டம் இருக்கில்ல :-) :-)இப்பயெல்லாம் பிளாஸ்டிக்கில் பூரிக்கட்டை வந்துடுச்சி என்னபண்றது நண்பரா போயிட்டீங்க ஒரு உதவிதான் கடைசியா கொசுறு சொன்னிங்களே இங்கிருந்து அங்கு போயி சைலண்ட்டா தீபாவளி பார்ட்டி கொண்டாடிட்டு வருவாங்க இங்க குழல் ஊத்திட்டு இனிமே

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டை பிளாஸ்டிக்கில் வந்தால் என்ன நம்ம சகோக்கள் கீதா.ராஜி ,அதிரா, ஏஞ்சல் கிரேஸ் உஷா அன்பரசு போன்றவர்கள் இரும்பில் ஆனா பூரிக்கட்டைகளை வாங்கி என் மனைவிக்கு பரிசாக அல்லவா தருகிறார்கள்

      Delete
  9. துளசி: அட! அமெரிக்காவில் தீபாவளி அதுவும் பட்டாசுடனா ஆச்சரியம்தான்..இதுவரை கேள்விப்பட்டது வேறு. இடையில் பல வரிகள் சிரிக்க வைத்தன...எஞ்சாய் த வீக்கென்ட்!!!

    கீதா: அட போங்கப்பா நாங்கல்லாம் பட்டாசு வெடிக்கறதெல்லாம் விட்டு பல வருஷம் ஆகிப் போச்சு. அந்த ஸாரஸியம் எல்லாம் எப்போதோ போயிருச்சு...பின்ன வீட்டுல இருக்கற ரெண்டு நாலுகால் பொண்ணுன்ங்களும் படுற அவஸ்தைய பார்த்தா பாவம் அதுங்களை சமாதானப் படுத்தி அதுங்களோடு டைம் ஸ்பென்ட் பன்றதுக்கே டைம் சரியா இருக்கும். இதோ தீபாவளி முடிந்தப்புறமும் எங்கியாவது ஒரு பட்டாசு வெடிச்சா போதும் ஒன்னு கட்டிலுக்கடில போய் படுத்துரும். இன்னொன்னு என் காலடிலேயே என் கூடவே சுத்திட்டு உடம்பு நடுக்கத்துடன் இருக்கும்...அப்படி நடுங்கும்...பாவம்...

    அதானே எங்கடா நு பார்த்தேன் கடைக்குப் போனாலும் அங்க பொண்ணுங்கள பார்த்தத எழுதாம மதுரை போவாரானு...சரி சரி பூரிக்கட்டை பூசையாதான் இருக்கும்னு தோணுது நீங்க என்ன ட்ரெஸ் உங்க ஆத்துக்காரி உங்க ட்ரெஸ் பார்த்து ரசிச்சாங்களா!!?

    ReplyDelete
    Replies
    1. எந்தா துளசி சாரே வீக் எண்ட்ல் எஞ்சாய் என்று வாழ்த்திய போது பூரிக்கட்டையை மனதில் வைத்து சொன்ன மாதிரியல்லவா இருக்குது. நல்லயிருங்க சாரே நல்லாய்யிருங்க

      @கீதா எங்கவீட்டம்மா நான் போடுற டிரெஸ்சை பார்த்து ரசிக்கமாட்டாங்க அவங்க போடும் டிரெஸ்சை நான் துவைக்கும் போது அதை பார்த்துதான் ரசிப்பாங்க

      Delete
  10. தீபாவளிக் கொண்டாட்டமே உறவுகளுடன் மகிழ்வாய் இருக்க என்றுதானே நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொலவது மிக சரி அதுதான் உண்மையும் கூட சார்

      Delete
  11. ரசிக்கும்படியான பதிவு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு செய்தியை ரசிக்கும்படி சொன்னால்தானே நன்றாக இருக்கும் அதனால்தான் இப்படி ஒரு பதிவைப் போட்டேன் சார்

      Delete
  12. இங்கு தீபாவளிக்கு விடுமுறை இல்லை...
    வெடியெல்லாம் வெடிக்க முடியாது...
    சந்தொஷங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு வேலைக்குப் பொயிட்டு வந்தாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஊரில் உள்ள உறவுகள் சந்தோஷமாக இருக்க உங்களை மாதிரி ஆட்கள் சந்தோஷத்தை மூட்டை கட்டி வைத்தால்தானே முடிகிறது.. உறவுகள் சந்தோஷமாக இருக்க அப்படி செய்வதை சந்தோஷமாக நினையுங்கள் அதன் பின் எல்லாம சந்தோஷமாகவே இருக்கும்

      Delete
  13. சிறப்பாக தீபாவளி கொண்டாடியமைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.