மோடி ரொம்ப நல்ல மனுஷன்யா ஆனால் இந்த அண்ட்ராயர் பாய்ஸ்தான் மோசம்
ஜிஎஸ்டி திட்டம் எல்லா மாநில தலைவர்களுடனும் எதிர்கட்சிகளுன் கலந்து ஆலோசித்து கொண்டுவரப்பட்டது. அதை இப்போது பலரும் எதிர்க்கிறார்கள். அதில் இருக்கும் தவறுகளை திருத்தி அமைத்து முறைப்படுத்துகிறேன்-மோடி
மோடியே அதில் தவறுகள் இருக்கிறது என்று பொதுக் கூட்டத்தில் ஒத்துக் கொண்டாலும் இந்த அண்ட்ராயர் பாய்ஸ் மட்டும் ஜிஎஸ்டி திட்டத்தில் தவறுகளே இல்லை அது அருமையான திட்டம் என்று பக்கம் பக்கமாக எழுதி கொண்டிருக்கிறார்கள். போகிற போக்கில் இந்த அண்ட்ராயர் பாய்ஸ் மோடியை ஆண்டி இண்டியன் என்று சொன்னாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை.... அந்த நாளும் கூடிய சீக்கிரம் வரும் என எதிர்பார்க்கிறேன்..
-------------------------
செய்தி :இந்திய வர்த்தக சந்தையை அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்காக மேலும் தாராளமயமாக்க வேண்டும். மேலும் இந்தியாவில் அமெரிக்க நிறுவவனங்களுக்கு உள்ள வர்த்தக தடைகளை நீக்க வேண்டுமென்றும், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்புகளை தளர்த்த வேண்டும்மென்று வாசிங்கடனில் நடைபெற்ற அமெரிக்க இந்தியா இடையிலான வர்த்தக கொள்கை மாநாட்டில் அமெரிக்கா கூறியுள்ளது.
-----------------------------------------------
மக்கள்: ஜிஎஸ்டி என்பது புதுவரியா?
பக்தாஸ் :இல்லை பதினேழு வகை வரிகள் ஒழிக்கப்பட்டு.. அந்த பதினேழு வகை வரிகளுக்கு பதிலாக.. ஒரே தேசம்ஒரே வரி என்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
மக்கள் : அப்ப இந்த 17 வரிகளையும் கூட்டினால் வரும் வரியின் தொகையும் இந்த ஒரே தேசம்ஒரே வரியான ஜிஎஸ்டி வரியின் தொகையும் ஒன்றாகத்தானே இருக்கணும்
பக்தாஸ் : ஏய் ஏய் நீங்கள் எல்லாம் Anti Indian அதுனாலதான் இப்படி எல்லாம் கேள்வி கேட்கிறீங்க
--------------------------------------------------
டெங்குவினால் ஏற்படும் பாதிப்பைவிட மோடியின் தலைமையிலான பாஜகவால் தமிழகத்தில் ஏற்படும் அழிவுதான் மிக அதிகமாக இருக்கும். இல்லை என்பவர்கள் பொறுத்து இருந்து பார்க்கவும்...
மோடி அரசு டெங்குவைவிட மோசமான அரசு அது தமிழகத்தில் பரவ காரணம் பக்தாஸ்தான்(சாக்கடைதான்) அதை ஒழிக்க நீங்கள் முயற்சி செய்தால் தமிழகம் வருங்காலத்தில் காப்பாற்றபடும். இது வரை அதை தமிழகத்தில் தடுத்து நிறுத்திய சக்திகளில் (ஜெயலலிதா & கலைஞர் ) ஒன்று மறைந்துவிட்டது இன்னொரு மருந்து இப்போது ஆக்டிவ்வாக இல்லை. அதனால் மருந்தை எதிர்பார்க்கமல் சாக்கடை பெருகாமல் இருக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
-------------------------------------
கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் கஷ்டமாக இருந்திருக்கும் ரஜினி பேச்சு;
ஆமாய்ய உன் கடவுள் ரசிகர்கள்தான் என்பதை மறந்து காவிகள் பின்னாலே செல்லாதே
----------------------------------------------------
எடப்பாடியின் தலைமையிலான அதிமுக அரசும்
அமெரிக்க நீயூஜெர்ஸி தமிழ் சங்கமும்
செய்த நல்ல செயல் ஒன்றே ஒன்றுதான்
அது ஹார்வோர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் துறை ஏற்படுத்த
பணம் திரட்டி கொடுத்திருப்பது மட்டும்தான்.
அதற்காக அவர்களை மனம் திறந்து பாராட்டுவோம்.
உங்களின் இந்த நல்ல செயல் தமிழ் இருக்கும் வரை பேசப்பட்டு கொண்டிருக்கும்
===========================
தலைவர்களை நக்கல் நையாண்டி செய்வது தவறு என்றால் அவர்களை தேர்ந்தெடுத்த உங்களை என்னவென்று சொல்வது?
இங்கே எனது கருத்துகளை பெர்ஷனல் காரணங்களால் வெளியிட வேண்டாம் என்று சொல்லி எனக்கு இமெயில் அனுப்பி தங்களது ஆதரவுகளை தொடர்ந்து தரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
உங்களது பாராட்டிற்கு நான் தகுதியுள்ளவன என்று தெரியவில்லை . ஆனால் உங்கள் விருப்பபடி இந்த நையாண்டி, நக்கல் கருத்துக்கள் தொடரும் என்று உறுதியளிக்கிறேன்
உங்களது பாராட்டிற்கு நான் தகுதியுள்ளவன என்று தெரியவில்லை . ஆனால் உங்கள் விருப்பபடி இந்த நையாண்டி, நக்கல் கருத்துக்கள் தொடரும் என்று உறுதியளிக்கிறேன்
அன்புடன்,
மதுரைத்தமிழன்
இருந்தாலும் இப்படியெல்லாம் நையப் புடைக்ககூடாது மனசுக்கு வருத்தமாக இருக்கு இதுக்கு மருந்து வாங்க கடைக்கு போனால் அவன் ஜிஎஸ்டி என்றான் நான் ஓடி வந்துட்டேன்...
ReplyDeleteஏம்பா! மதுர, இத்தனை அடி வாங்கியுமா திருந்தல?! தமிழ்மணத்துக்கு சங்கூதிட்டுதான் ஓய்வே போல!!!!
ReplyDeleteஅன்ராய்டு பாய்ஸ் மைனஸ் ஓட்டா போட்டு தாக்குறாங்க நம்ம தலையை எதுத்து பேசுனாலே ஆண்டி இந்தியன்.. நீங்க சும்மா சும்மா எழுதுன விடுவாய்களா அதான் பொங்குறாய்க பக்கிக... கவனம் மதுர தமிழா...
ReplyDeleteதாம + 1.
M.செய்யது
Dubai
தமிழ்நாடு தலையெழுத்துல என்ன எழுதி இருக்கோ தெரியலையே நீங்க சொன்ன மாதிரி யார் இருக்கா இனி ......
ReplyDeleteரஜினியை கடவுளாய் நினைக்கும் ரசிகர்கள்கூட, ரஜினி காவிகள் பின்னால் போவதை விரும்ப மாட்டார்கள் :)
ReplyDeleteகருத்துப் பதிவு உங்கள் உரிமை அதை ஏற்பதும் ஏற்காததும் வாசகர்கள் விருப்பம் போற்றுபவர் போற்ற தூற்றுபவர் தூற்ற எழுதுவது நன்று
ReplyDelete