Saturday, October 14, 2017

@avargal Unmaigal
தீபாவளி சமயங்களில் திடீரென்று முளைக்கும் அறிவு ஜிவிக்கள்

தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் காற்று அசுத்தமாகும் ஆனால் மற்ற நிகழ்வுகளில் வெடிக்கும் போது சுத்தமான ஆக்ஸிசன் வெளிவரும் இந்திய அறிவு ஜீவிகளின் அறிய கண்டுபிடிப்பு.


தீபாவளி என்றாலே முதலில் வருவது பட்டாசுதான் அதன்பின் தான்  பலகாரமும் புதுதுணிகளும்தான்  அப்படி இருக்கையில் சில பிரபலங்களும் அறிவு ஜீவிகளும் தீபாவளி சமயத்தில் கோமாவில் இருந்து விழித்து எழுந்தவன் போல தீடீரென்று  எழுந்து பட்டாசு வெடிப்பதால் சுற்றுபுற காற்று மாசுபடுகிரது அதனால் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுரைகளை அள்ளிவிடுகின்றனர். இப்படி அள்ளிவிடுவர்கள் யார் என்று பார்த்தால் அதில் இஸ்லாமியர்கள் இல்லை கிறிஸ்துவர்கள் இல்லை ஆனால் இந்துமதத்தில் உள்ள சில திடீர் அறிவாளிகள்தான் இப்படி பேசுகிறார்கள்.



இந்த அறிவு ஜீவிகளுக்கு இந்து மதத்தில் இருக்கும் சாமன்ய மக்கள் தங்கள் சந்தோஷத்திற்காக வருடத்திற்கு ஒரு முறை பட்டாசு வெடித்து கொண்டாடுவதுதான் கண்னை உறுத்துகிறதாம் .அடே உங்களை கேட்கிறேன் தலைவர்களின் பிறந்த நாள்களுக்கு , தலைவர் வருகையின் போது , பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது , திருமண ஊர்வலங்கள் ,இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் போது , உங்கள் தலைவர்கள் சிறையில் இருந்து வெளிவரும் போது  மற்றும் IPL போட்டிகளின் போது பட்டாசு வெடிக்கிறீர்களே அப்போது காற்று மாசுபடுவது உங்கள் கண்ணிற்கு தெரியவில்லையா அல்லது அந்த நிகழ்வுகளுக்கு பட்டாசு வெடித்தால் காற்று மாசுப்படாதா?


அடே அதுமட்டுமல்ல இந்தியாவில் எத்தனை வாகனங்கள் ஒடுகிறது அத்தனையும் மாசுகட்டுப்பாட்டுடன்தான் இயங்குகிறதா? அல்லது இந்திய தொழிற்சாலைகலள் அனைத்தும் மிகவும் மாசு கட்டுப்பாட்டுடன்தான் செயல்படுகிறதா என்ன?  பணத்திற்காக வெளிநாட்டினரின் குப்பைகளை கண்டெய்னர் மூலம் கொண்டு வந்து இந்திய நிலங்களில் கொட்டுகிறார்களே பல பாதகர்கள் அதனால் சுற்றுபுறம் பாதிக்கப்டாதா?இதற்கு எல்லாம் எத்தனை தடவை அறிக்கைகள் விட்டு இருக்கிறீர்கள்?.

இதற்கு எல்லாம் அறிக்கை விடாதவர்கள் சாமன்யர்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு மட்டும் அறிக்கைவிட்டு நாட்டுக்காக நல்லது செய்வதாக நீங்கள் வேஷம் போடுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்ன... போங்கடா கபோதிபயல்களே வந்துட்டாங்க அறிவுரை சொல்ல..

@avargal unmaigal
இப்படி அறிக்கைவிடுபவர்களை கவனித்து பார்த்தால் இவர்கள் கார்ப்பரேட்டுக்களின் கைகூலிகளாக இருப்பார்கள். இவர்கள்தான்  பூமி வெப்பமடைதலைத் தடுக்கவும் சுற்றுபுர சூழலைப் பாதுகாக்கவும் தம்மாலானதெல்லாம் செய்யப்போவதாக வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். இவர்களின் முக்கிய நோக்கம் குடிசை தொழில் மற்றும் சிறு தொழில்கள் மூலம் செய்யப்படும் பட்டாசுகளை ஒழிப்பதுதான் இதற்குதான் இந்த நாய்கள் இப்படி வேஷம் போடுகிறார்கள்


இந்தியாவில் சுத்தபடுத்தப்படாத கழிவுநீர் காரணமாக ஏற்படும் நீர் மாசுபாடு பெரும் சிக்கலாக கருதப்படுகிறது. கங்கை,யமுனை போன்ற மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பாயும் ஆறுகள் அனைத்தும் மிகவும் அதிகமாக மாசுபட்டு இருக்கின்றன.இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு தீவிர பிரச்சினையாகும். விறகு மற்றும் உயிரி பொருள் எரிப்பு , எரிபொருள் கலப்படம், வாகன மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் முதலியவை முக்கிய காரணங்களாள் சுற்று புறம் மிகவும் மாசு அடைகிறது இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்கவும் அறிக்கைவிடவும் ஆட்கள் இல்லை ஆனால் சாதாரண மக்கள் வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடும் தீபாவளி திருநாளினால் மட்டும் மாசு படுகிறது என்று ஒவ்வொரு ஆண்டும் அறிக்கைவிடுகிறார்கள்.

@avargal Unmaigal
போங்கடா போங்க தீபாவளியின் போது எங்காவது வெளிநாட்டுக்கு போய்விட்டு ஒரு மாதம் கழித்து வாருங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. கடைசி பத்தி சரியான அறிவுரை.

    ReplyDelete
  2. இவர்களின் கூவலுக்குப் பின்னே நிச்சயமாக மிகப்பெரிய சதி இருக்கும் அது சாமான்னிய மக்களை பாதிப்பதாகவே இருக்கும்.
    த.ம.2

    ReplyDelete
  3. நன்றாகவே சொன்னீர்கள். அந்த அறிவு ஜீவிகளின் நோக்கம் சிவகாசி தமிழர்களின் பட்டாசு விற்பனையை தடுப்பதற்காக இருக்கும்.

    ReplyDelete
  4. சதியாக இருக்கலாம். அல்லது இவர்கள் அட்டென்சன் சீக்கர்ஸ்! இப்போது புதிய பிரச்சாரம் ஒன்று வாட்ஸாப்பில்... நிலவேம்பு கஷாயத்தை அரசாங்கம் திட்டமிட்டே கொடுக்கிறதாம். சாப்பிடக் கூடாதாம். ஆண்மை போய்விடுமாம். கு க திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு இதை மக்களுக்குத் தருகிறதாம்!

    ReplyDelete
  5. மாசு கட்டுப்பாடு இது ஒண்ணுலமட்டும் தான் பார்ப்பாங்க அவ்வ்ளவு மாஸ்(சு ) உள்ளவங்க.ஒரு வருஷம் முழுவதும் இதுக்கு வேலை செஞ்சவங்க வயதில் அடிக்க
    நீங்க இங்க சொன்ன லிஸ்டு கொஞ்சம் தான் லிஸ்டு போட்டா வெறுப்பாயிடுவோம்

    ReplyDelete
  6. பட்டாசு மாசு என்றால் தினமும் ஓட்டப்படும் வண்டிகள் விடும் புகை மாசு இல்லையா? எத்தனை வண்டிங்க மாசுக் கட்டுப்பாடு செக்கிக்ங்க் பண்றாங்க? வெளிய போய்ட்டு வந்து முகம் கழுவினா ஏதோ போர்க்களம் போய்ட்டு வந்தா மாதிரி தண்ணி கறுப்பா வருது...

    ஆனால் பட்டாசு என் பைரவிகளை பயமுறுத்தி பாவம் அதுங்க கன்னாபின்னா வென்று எங்கு ஒளிந்து கொண்டு படுபப்து என்று தெரியாமல் பிஹேவியர் கொஞ்சம் மாறிப் போகும்... பாவம்.

    கீதா

    ReplyDelete
  7. இந்த அறிவுஜீவிகளின் பேச்சை யார் கேட்க போகிறார்கள்? ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிட வேண்டியதுதான்! இவர்களெல்லாம் திடீர் திடீர் என்று முளைக்கும் காளான்கள்! நிலைக்க மாட்டார்கள்!

    ReplyDelete
  8. வரவர செய்திகளைப் படிக்கும் போது பத்திக்கிட்டு வருது

    ReplyDelete
  9. வயது ஆக ஆக பட்டாசு வெடிப்பதில் ஈடுபாடு இருக்காது. இது இயல்பானது. அது என்னவோ சுற்று சூழலுக்காக பட்டாசு வெடிக்காதது போல் பேசிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் முகத்தை பட்டாசு வெடிக்கும்போது பார்க்க வேண்டும்.எவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு. பட்டாசு வாங்கி காசைக் கரியாக்க வேண்டுமா என்பார்கள். ஆனால் வேறுவகையில் காசை காளியக்கிக் கொன்டிருப்பார்கள். இதெல்லாம் அறிவு ஜீவிகளுக்கு புரியாது.

    ReplyDelete
  10. அறிவு ஜீவிகள் என்று குறிப்பிடுவதே தவறு. உங்கள் கருத்தை ஏற்காமல் மாறு கருத்து சொன்னவர் அறிவு ஜீவி!...இல்லையா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: அவர் கருத்துக்கு எதிரான கருத்து உங்களது. உங்களை அறிவு ஜீவி என அவர் கிண்டலடிக்கலாமா? தமிழ்நாட்டுக்காரன் கண்டுபிடித்த முட்டாள்தனமான சொல்லை நீங்களும் எடுத்தாளவது வியப்பாக இருக்கிறது.

    அறிவு ஜீவிகள் எதிர்க்கிறார்கள் என்பதும் தவறு. சாமானிய மக்களில் பலரும் பட்டாசு வெடிப்பை விரும்பவில்லை. அவர்கள் சொல்லவில்லையென்றால் அவர்கள் விரும்புகிறார்கள் என எடுப்பது எப்படி? எதிர்ப்பவர்கள் எல்லாரும் உங்கள் அறிவுஜீவிகளா? பள்ளிகளில் பிள்ளைகளுக்கு say no to crackers eன்ற இயக்கமே நடத்துகிறார்கள் தீபாவளிக்கு முன்பு சில நாட்களாக. அதனால் இவ்வாண்டு தில்லியில் பட்டாசு விற்பனை படுத்தது. இவர்களெல்லாம் உங்கள் அறிவுஜீவிகளா? தில்லி உயர்நீதிமன்றம் தடை செய்தது. வழக்காடியவர்களும் தீர்ப்பளித்தவர்களையும் அறிவு ஜீவிகள் என்று கிண்டலடிக்க முடியுமா? தமிழ்நாட்டுக்காரன் கண்டுபிடித்த இச்சொல் குறிக்கிறது. அவர்களை பேசவிடாமல் தடுத்தால் பலர் வாழலாம். எப்படி சிந்தனையாளர்கள் உருவார்கள் இங்கே? ஆமாம் சாமியும் ஆஹா ஓயோ சரியாகச் சொன்னீர்கள் என்று எல்லாரும் சொல்வதைத்தானே நாம் விரும்புகிறோம். Religion already is emasculating free thinking. Now with that, everything joins and the general society is afraid to think. We've created a climate against intellectuals. Politicians, academicians, and religious men - and now media - have enslaved us.

    உஙகள் எண்ணம்தான் என்ன? யாருமே உங்களை எதுவும் சொல்லக்கூடாது. நீங்கள் விரும்பியதைச் செய்ய தடையேதுமே இருக்கக்கூடாது. நினைவிற்கொள்க: நீங்கள் மட்டும் இவ்வுலகில் வாழவில்லை. பிறரோடு சேர்ந்துதான் வாழவேண்டும். அமெரிக்காவில் பட்டாசு கொளுத்தி தெருவில் போட முடியுமா? இரவில் 12 மணிவரை வெடிக்க முடியுமா? அங்கு அவர்கள் வாழ்க்கையைப்பற்றி அவர்கள் கரிசனம் கொள்கிறார்கள். உங்கள் பதிவிலேயே நீங்களே பாராட்டுகிறீர்கள். தமிழ்நாட்டில் கவலைப்படுவோரை அறிவுஜீவிகள் எனக் கிண்டலடிக்கிறீர்கள்.

    எல்லா மாசுக்களை அறிவுஜீவிகள் எதிர்க்கிறார்கள். ஆனால் அவை பரபரப்பாக தெரியவில்லை. ஏராளம் என் ஜி ஓக்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. கிரீன்பீஸ் இருக்கிறது. புளூ க்ராஸ் உண்டு. கொன்சால்வாஸ் என்ற வழக்குறைஞர் environmental issues எடுத்தாள்கிறார். பப்ளிக் இன்ட்ரஸ் லிட்டிகேசஹன் எத்தனை எத்தனை? எல்லாமே பட்டாசு வெடிப்பு பற்றியல்ல. இவர்கள் சமூக அக்கறையுள்ளோர். வாகன கட்டுப்பாடு பற்றியும் பில் எல் ஐ போடப்பட்டு பலன் கிடைத்திருக்கிறது. இன்னும் கிடைக்கும். உண்மை இவ்வாறிருக்க அதை எதிர்த்தார்களா? இதை எதிர்த்தார்களா? என்று எப்படி கேட்க முடியும்?

    மாசு பெருகி வாழ்க்கையே பாழ் என வரும்போது எல்லாமே எதிர்க்க படும். இருவாரங்களுக்கு முன் தில்லியில் அப்படி நடக்க, நீதிமனறங்கள் முதல்வரையே கைது செய்வோம் என்ற தொனியில் பேச பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.