ஹெல்த்தியான மாலை நேர (பார்ட்டி) ஸ்நாக்- உருளைக்கிழங்கு லாலி பாப்
தேவையான பொருட்கள்:
4- உருளைக்கிழங்கு
2 - கேரட்
2-வெங்காயம்
6- பச்சைமிளகாய்
1-கட்டு கொத்தமல்லி இலை
1 பாக்கெட் ப்ரெட் தூள்
2- ஸ்பூன் மைதா
1- ஸ்பூன் எலுமிச்சை பழ ஜூஸ்
1-ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
2-ஸ்பூன் வெள்ளை நிற எள்ளு
1-ஸ்பூன் மிளகாய் தூள்
உப்பு தேவையான் அளவு
எண்ணெய் தேவையான அலவு
உருளைக் கிழங்கை நன்கு வேக வைத்து அது ஆறிய பிறகு அதை தோல் நீக்கி நன்றாக மசித்து கொள்ளவும்
கேரட், வெங்காயம்,பச்சை மிளகாய், கொத்தமல்லி இலையை படத்தில் காட்டிய படி பொடிப் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
இப்படி பொடிப் பொடியாக நறுக்கி வைத்த காய்களுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, எள்ளு, எலுமிச்சம் பழ ஜூஸ், இஞ்சி, மிளகாய் தூள், உப்பு போன்ற அனைத்தையும் போட்டு தண்ணி விடாமல் கெட்டியாக பிசைந்து வைத்து கொள்ளவும்.
அதன் பின் ஒரு கப்பில் மைதாவை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்து கொள்ளவும். அதன் அருகில் ப்ரெட் தூளை ஒரு தட்டில் நன்கு பரப்பி வைக்கவும்.
இப்போது பிசைந்து வைத்த வெஜிடபிள் கலவையை சிறிது சிறிது துண்டாக உருட்டி வைத்து கொள்ளவும் ( டயட்டில் உள்ளவர்கள் அதிக லாலிபாப் சாப்பிட வேண்டாம் ஒன்றே ஒன்று போதும் என்று நினைத்தால் மிக பெரிய உருண்டையாக உருட்டி கொள்ளவும்.. முக்கியமாக இது டயட்டில் இருக்கும் ஏஞ்சல் மற்றும் அதிராவிற்காக இந்த சிறு குறிப்பு )
இப்படி உருட்டி வைத்ததை கரைத்து வைத்த மைதாவில் முக்கி எடுத்து, அதை அருகில் இருக்கும் பிரெட் தூளில் புரட்டி எடுத்து அதை வடை சட்டியில் காயந்து கொண்டிருக்கும் எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்கவும்.
இப்படி பொறித்து எடுத்ததை சிறு குச்சியில் குத்தி எடுத்து வைத்தால் அதுதான் உருளைக்கிழங்கு லாலி பாப்
இதை மழைகாலங்களில் செய்து சாப்பிடலாம்.... இதற்கு தொட்டு கொள்ள கொத்தமல்லி சட்னி அல்லது மிண்ட் சட்னி, தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.
சாப்பிட்ட பின் மழை தொடர்ந்தால் அந்த நேரத்தில் உங்கள் மனைவியை சற்று புகழ்ந்து அவள் செய்து தந்த இந்த ஸ்நாக்கை பாராட்டி தட்டி அணைத்து அதன் பின் .........(ச்சீ ச்சீ கண்டபடி கற்பனை செய்ய வேண்டாம் )
வேற என்ன விளக்கை அணைத்து தூங்கிவிடவும் அது இல்லாமல் சில்மிஷம் பண்ணினால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : மைசூர் பாக் செய்வது எப்படி என்ற பதிவிற்கு 1800 க்கும் மேல் பார்வையாளர்கள் வந்து பார்த்து இருப்பதாலும் அரசியல் பதிவில் இருந்து சில நாட்கள் ஒதுங்கி இருக்க எண்ணியதால் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறேன்.. இது பார்த்து ரசிக்கமட்டுமல்ல சமைத்து ருசிக்கவும் செய்யுங்கள்
கொசுறு :
இந்த படத்தில் உள்ள பெண் யார் என்று சரியாக கண்டுபிடித்து அவர் பெயரை சொல்லும் ஒருவருக்கு( பல பேர் சரியாக சொல்லி இருந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ) அமெரிக்க வர அழைப்பு விடுவிக்கப்படும்
அதெல்லாம் சரி மதுர... இதை யாரு மாலை நேர ஸ்நேக்ன்னு சொன்னது. இதையும் நான் அங்கே வந்து இருக்கும் போது காலையில் செஞ்சி இருக்கலாமே...
ReplyDeleteஇன்னாது அஞ்சேல் டயட்டில் இருக்காங்களா?
அப்புறம் அந்த சமைக்காமல் ரிசிப்பி போட்ட அம்மணி.. கிழக்கு சீமையில் தான் வாழுறாங்கனு நினைக்கேன்.
செஞ்சதையே ஒழுங்காக சாப்பிடாமல் போயிட்டிங்க அதை வைச்சு வைச்சு தின்னுவதற்குள் எனக்கு போது போது என்றாகிவிட்டது இதிலே வேற இது செய்யலைய்யா என்று ஒரு கேள்வி...
Deleteசரி சரி உங்க வீட்டிற்கு வரும் போது எல்லாம் செஞ்சு போடுறேன் சாப்பிடுவீங்களோ அல்லது ப்ரிஜில் வைப்பீங்களோ அது உங்களிஷ்டம்
யோவ் கிழக்கு சீமையிலா தேம்ஸ் நதி இருக்குது.?
ஏஞ்சல் டயட்டில் இருப்பதால் ஜூஸ்ஸாக குடிக்கிறார்களா அல்லது பல் எல்லாம் போய்விட்டது என்பதால் இப்படி ஜூஸ்ஸாக குடிக்கிறார்களா என்பதை நேரில் பார்த்தவர்களால்தான் சொல்ல முடியும்.
விசு அண்ணே அது டயட்நா நீங்க நினைக்கற டயட் இல்லை இது க்ளூட்டன் ப்ரீ டயட் :)
Deleteஅப்படியே உங்க தோட்டத்து கொய்யாக்காய்ங்களை மட்டும் அனுப்பி விடுங்க அதுக்கு நோ ரிஸ்ட்ரிக்ஷன் :)
எவ்ளோனாலும் சாப்பிடுவேன்
எனக்கு இங்கின விசு பேசுவதைப் பார்த்தால்.... கலக்கப்போவது / அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் இப்போ கொஞ்சக் காலமா ஒருவர் முகம் காட்டாமல் போன் பண்ணி ஜஜ் எல்லோரையும் கலாய்ப்பாரே.. அவரைப்போலவே இருக்கு:)..
Deleteஅதுசரி, இவ இப்போ எதுக்கு கொய்யாப்பயம் கேய்க்கிறாக:)
ஹா ஹா ஹா ஹாஅ ... முதலில் ஒரு பெரீயாஆஆ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சொல்லிடுறேன்:) அப்போதான் என்னால கொஞ்சமாவது மூச்சுவிட முடியும்:)...
ReplyDeleteஎங்கிருந்து கண்டுபிடிச்சுப் பெயர் வச்சிருக்கிறீங்க ட்றுத்?:)... இருப்பினும் இம்முறை பயங்கர முன்னேற்றம் நீங்க... இம்முறை ஸ்ரெப் பை ஸ்ரெப் படமெல்லாம் போட்டு அசத்திட்டீங்க:)... என் சமையல் குறிப்புப் பார்த்ததால் வந்த பொறாமைதானே...:)..
என்னாது போன குறிப்பை பார்த்தது ஆக 1800 தானா?:) அதில நான் 600 வியூஸ் அஞ்சு ஒரு 800 வியூஸ் ஆக்கும்:)..
Deleteஹலோ திருஷ்டி போடாதீங்கப்பா
கடசிப்படம் அது கீழ இருந்து மேலே படிக்கும் அஞ்சுவேதான்ன்ன்ன்:).. அதை ஆதாரமாக்கி நிரூபிச்சிருக்கிறாவே தன் போஸ்ட்டில்... பாவம் அவட ஆத்துக்காரர் எத்தனை நாளைக்குத்தான் கடையிலயே சாப்பிடுவார்:)... அதான்:)... இவ அதிராவைத் தேம்ஸ்ல தள்ளவென்றே சமையலையும் விட்டுப்போட்டுக் காவல் இருப்பா கரையில்:)... ஹா ஹா ஹா
ReplyDeleteகர்ர்ர்ர் :) ஹாஹா :) தேம்ஸ் கரைன்னா அது அதிரா ..அந்த பொண்ணு கைல ஐ போன் பாருங்க
Deleteநீங்க ரெண்டு பேரும் சொன்னது தப்பு அந்த பொண்ணு கொஞ்சம் ஒல்லியாகத்தானே இருக்கு
Deleteஆங் ஒல்லிப்பொண்ணு நான்தான் ..பீச்சில் பிளாஸ்டிக் போடக்கூடாதுனு போராட்டம் நடத்தும்போது போலீஸ்கார் இழுத்திட்டுபோர்ரார்
Deleteஒல்லிபொண்ணுனு முதலிலேயே சொல்லியிருக்கலாமில்ல கர்ர்ர் 10000 டைம்ஸ் for truth :)
Deleteஎனக்கு தெரியுமே! தேம்ஸ் நதிக்கரைன்னதும் புரிஞ்சுப்போச்சு...
ReplyDeleteநீங்க ஸ்மார்ட்டான் பொண்ணு அதுனால நீங்க அது அதிராண்ணு முடிவுக்கு வந்திருக்க மாட்டீங்க
Deleteகர்ர்ர்ர்ர்.. ராஜி சொன்னாவா பெயரை இல்லயே:).. இப்போ இவரெதுக்கு எடுத்துக் கொடுக்கிறார்:)
Deleteஅரசியல் பதிவிலிருந்து சிலநாட்கள் ஒதுங்கி இருக்கலாம்....
ReplyDeleteவாங்குன அடிலாம் கண்ணுக்கு முன்னாடி வந்து போவுமா இல்லியா?!
அண்ணா சொன்னார் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று ஆனால் நான் இதையும் (இதயம் அல்ல இதை பூரிக்கட்டை அடி ) தாங்கும் உடம்பை பெற்று சாக வரம் பெற்று இருக்கிறேன்
Deleteமாலை நேரத்துல கட்லட் சமைக்கலாம்ன்னு உருளை வேக வச்சிருக்கேன். உடனே செஞ்சு பார்த்துட்டு வரேன்.
ReplyDeleteராஜி நீங்க ரொம்ப ஸ்மார்ர்டான ஆளாகவே இருக்கிங்க அதனால்தான் செஞ்சு அதை மற்றுவர்களுக்கு கொடுத்திட்டு பார்த்திட்டு வாரேன் என்ற தோனியில் சொல்லி இருக்கீங்க செஞ்சு சாப்பிட்டு வரேன்னு சொல்லவே இல்லை என்னா ஸ்மார்ட்
Deleteவளர்ப்பு அப்படிங்க பாஸ்
Delete''அதிராம்பட்டணம் அதிரடி அதிரா'' என்று நான் உறுதியாக சொல்ல முடியவில்லை. நண்பரே
ReplyDeleteஅது கடற்கரை மண்ணில் உருண்டதால் கலர் வெள்ளையா தெரியுறகு ..டவுட்டே வேணாம் இட் இஸ் அ .அ .அ
Deleteகில்ல்ர்ஜி நீங்களும் சரியாகத்தான் கணிச்சிருக்கீங்க அதிராவை அவங்க வீட்டுகாரர் இப்படி எல்லாம் தூக்க முடியுமா என்ன?
Delete@ஏஞ்சல் அப்பா நீங்க அதிரா கருப்பு கலர் என்றா சொல்லுறீங்க அப்ப அதிரா எனக்கு அனுப்பிய போட்டோ உண்மையான போட்டோ இல்லையா அதிலே அவங்க் வெள்ளையா இருந்தாங்கலே ?
Deleteஎல்லோருக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்*786543
Deleteஹையோ பூனை உங்களை ஏமாத்தியிருக்கு :) அது facial போட்ட முகம் :)அதான் வெள்ளையா தெரிஞ்சி
Deleteவீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்திருக்கேன் நான் .ஆனா ஒருத்தர் கண்ணு முழிச்சி கையோட ஓடி வந்திட்டாங்க :)
ReplyDeleteவாவ் !! நாளா இருக்கே லாலி பாப் ..நான் டீப் பொரிச்சது சாப்பிடறது குறைவுதான் ...மைதா ப்ரெட் தூளுக்கு க்ளூட்டன் ப்ரீ மாவு ரொட்டி தூள் சேர்த்தா எனக்கு சாப்பிடலாம் ..
ஆமா இந்த அதிரா எந்த காலத்தில் டயட்டிங் இருந்திருக்காங்க :) சும்மா :) எனக்கு ஸ்னாப்சாட்டில் படம் வந்திச்சி KFC பாக்கெட்டோட நடக்கிறாங்க மேடம் :)
என்னாங்க் சிங்கல இருக்கிற பாத்திரத்தை எல்லாம் டிஸ்வாசர்ல போடுங்க... குட்டிம்மா டைனிங்க் டேபிளையும் அந்த ஹாலையும் சுத்தம் செய்துடும்மா.....குட்டிம்மா அப்பா ரொம் கஷ்டப்படுறாறு அதனால் டிஸ்வாசர்ல நீ சோப்பு பவுடர் போட்டு அதை ஆன் செய்திடும்மா.... என்னங்க குட்டிம்மா பாவம் அதனால நீங்க எனக்கு ஒரு காபி போட்டுட்டு கிச்சன் கவுண்டரை துடைச்சிடுங்க....
Deleteஅப்பாடி நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு வீட்டு வேலை செய்யிறோம் ஆனா அதிரா ஒன்றுமே செய்யாமல் காலையில் எழுந்திருச்சதும் மெண்ட் போட போறா....ஹும்ம்ம்
haahaaa :) not my mind voice
Deleteஎனக்கு கீரை வகை காய்கறிகள் தேங்காய் போட்டு செய்ற ரெசிப்பீஸ் வேணும் .பருப்பு வேணாம் அப்படி போட்டாலும் குறைவா சேர்கிற ரெசிப்பீஸ்
ReplyDeleteநேயர் விருப்பம் ..சொல்லிட்டேன் :)
நேயர் விருப்பம் கூடிய சீக்கிரம் நிறைவேறும்
Deleteartichoke எப்படி சமைப்பாங்கன்னு தெரியுமா ? அந்த ரெசிப்பியும் வேணும் ..ஆன்லைனில் தேடலாம் ஆனா நீங்க செஞ்சா சவுத் இண்டியன் டச் ஸ்டைல் வரும் அதான் கேக்கிறேன் ..இது வரைக்கும் யாரும் தமிழ் ப்லாகர்ஸ் கூட ஆர்ட்டிசோக் செஞ்சதில்லை :)
ReplyDeleteஎன்னங்க மனுசங்க திங்கிறதுக்கு ரிசிப்பி போடலாம் சரி சரி நீங்க கேட்டுடிங்க அதனால சீக்கிரம் போட்டுடலாம்...வீட்டுகாரம்மாதான் நம்மை கிச்சனுக்கு அனுப்புறாங்கன்னு பார்த்தா இங்க வருகிற தோழிங்க எல்லாம் இப்படி ரிசிப்பி கேட்டே நம்மை கிச்சன்லேயே குடி இருக்க வைச்சிருவாங்க போல..
Deleteபேசாமல் அரசியல் பதிவு போட்டா எல்லோரும் சைலண்டா படிச்சிட்டு போய்டுவாங்க
இல்லைங்க இதுவரைக்கும் நான் அந்த வெஜ் கடையில் மட்டும் பார்த்திருக்கேன் :)அதான் கேட்டேன்
Deleteஅப்புறம் சீடை ரெசிபியும் போடுங்க .நான் செஞ்சா சீடை கிச்சனேல்லாம் படார் படார்னு வெடிச்சிட்டே பறக்கும் நீங்க செய்யும்போதும் அதே மாதிரி பறக்குதான்னு தெரிஞ்சிக்க ஆசை :)
Deleteஆஹா ஒருதனுக்கு முஞ்சி கொஞ்சம் அழகாக இருந்தா சிலருக்கு பொறுக்காதே உடனே சீடை பண்ண சொல்லி டேமேஜ் பண்ண வைச்சிருவாங்களே
ம்ம்ம் அப்புறம் அழகான ப்ரெசன்ட்டேஷன் படங்களுடன் நீட்டா இருக்கு பார்க்க
ReplyDeleteஅழகான பொண்ணுங்க வர இடம் அதுனால கொஞ்சம் நீட்டாக இருக்கட்டுமே என்றுதான்..
Deleteஇதில சொல்லியிருப்பது மீ யைத்தானே ட்றுத்:) ஒரே ஷை ஷை யா வருதெனக்கு:)..
Deleteஅவர் சொன்னது பொண்ணுங்களை ..பூனையை இல்ல
Deleteஇந்த அதிராவிற்கு தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் சரியாக தெரியாது போலி இருக்குதே இவங்களுக்கு அழகுன்னா என்ன என்று சொல்லி முடிப்பதற்குள் நமக்கு அழுகையே வந்துவிடும் போலிருக்குதே...ஹும்ம்ம்
Deleteநேற்று ஏஞ்சிலின் சமையல்கலை பற்றி பேசவும் இன்று ரெசிபியோடு ஆஜர் ஆகியாயிற்று சூப்பர் படத்துடன் விளக்கம் .... ஒற்றுக்கொள்கிறோம் உங்களுக்கு தான் சமையல் நன்றாக வருகிறது
ReplyDelete
Deleteஅடிவாங்கவும் தெரிந்தவர்களுடன் நன்றாக வாயாடவும் தெரியும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்
ஏன் இது என்ன டிஸ்கி தலைக்குமேலே வெள்ளம் போனா ஜாண் என்ன மொழமென்ன என்ற முடிவை கொடுத்திடுச்சா நிலைமை
ReplyDeleteஜான் என்ன முழம் என்ன அல்ல அடி என்ன உதை என்ன என்ற நிலைமைதான் இங்கே
Deleteஅட தேம்ஸ் நதியில் இலவச பைட்டிங் சீனா அப்ப அடுத்த பதிவுல அவங்க வின்னிங் சீன் வருமில்ல
ReplyDeleteஆஹா அடுத்த பதிவில் கொசுறு போட ஐடியா கிடைச்சிடுச்சே
Deleteடயட்டிலிருப்பவர்களுக்கான யோசனை படித்துச் சிரித்து விட்டேன். ராத்திரியில் ஒரு பழம் மட்டும் சாப்பிடச் சொன்னால் பலாப்பழம் சாப்பிடுவது மாதிரி!
ReplyDeleteகட்லெட் மாதிரி செய்ததுண்டு. இது சற்றே வித்தியாசமாய் இருக்கிறதே...
பழம் பற்றிய கருத்து மிக அட்காசம்......
Deleteஇதை இணைத்தில் பார்த்து படித்து நான் செய்தேன்... மிக நன்றாக வந்தது. எண்ணெய் அதிகம் வேண்டாம் என்றால் இதை கட்லெட் மாதிரி செய்யலாம். அல்லது அவன் இருந்தால் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கலாம்..அவனில் வைத்து எடுத்தாலும் அதிக சுவை மாறாமல் அதே டேஸ்டில் இருக்கும்..
நான் உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் இங்கு கிடைக்கும் ஸ்பினச் கீரையை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து உப்பு ஒரப்பு சேர்த்து அவனில் வைத்து எடுப்பேன். இதைவிட மிக அருமையாக இருக்கும் இப்படி செய்வதால் எண்ணேய்யே தேவையில்லை
இந்த சமையல் குறிப்பை உங்கள் தளத்தில் வெளியிட நினைத்து இருந்தேன்... ஆனால் அங்கு வரிசையில் நம் சகோதரிகள் இருப்பதால் இங்கு நான் வெளியிட்டேன்.
கடைசி படம் சிரிக்க வைத்து விட்டது! இதற்கான "எசப்படத்தை" எதிர்பார்த்து ஆவலுடன் என் பக்கம் பார்த்திருப்பேன்!
ReplyDelete
Deleteவில்லனை பார்த்து ரசித்த உங்களுக்கு வில்லியை பார்த்து ரசிக்கவும் முயற்சி செய்கிறேன்
இருவரே போடும் பின்னூட்டங்களே நிறைய எண்ணிக்கையில் இருக்குதே
ReplyDelete
Deleteநேரமும் காலமும் இருந்தால் பின்னுட்டங்கள் அதிகரிக்கும் இல்லையென்றால் அருமை என்று ஒரே சொல்லில் முடிந்துவிடும் சார்
கட்லெட் ரெசிப்பியை உருட்டி குச்சியில் குத்தினால் உகிலாபா!!!??
ReplyDeleteநோட்டெட் த ரெசிப்பி!! குட் ஒன் இண்டீட்!
கீதா