Monday, October 9, 2017

@avargalUnmaigal
ஸ்ரீ கிருஷ்னா ஸ்வீட்ஸ் ஸ்டைலில் நெய்யால் செய்யும் மைசூர் பாகை  செய்து கொடுத்து குழந்தையை மகிழ்விப்பது எப்படி?



கடந்த ஒரு வாரகாலமாக அப்பா எனக்கு மைசூர் பாகு செய்து கொடுப்பா என்று என் பெண் என்னை நச்சரித்து கொண்டே இருந்தாள். என் மனைவியும் என்னங்க அவதான் கேட்கிறாளே அதை செய்துதான் கொடுங்களேன் . உங்களுக்கு வேண்டிய உதவியை நான் செய்கிறேன் என்றாள்....(உடனே என் மைண்ட் வாய்ஸ் உதவியா அப்ப சரி மைசூர் பாகு  செய்யதால் அது  நன்றாக வாராது என்று நினைத்தேன் அப்ப்டி நினைக்க காரணம் அவள் என் அருகில் நின்று நெய்யை குறைச்சு போடு சீனியை குறை என்று சொல்லி கொண்டு இருப்பாள் அப்படி அவள் சொல்லும் படி செய்தால் சரியாகவாராது ) இல்லைம்மா இன்று கொஞ்சம் டையர்டாக இருக்கு அதனால் நாளை கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று  ஒரு வழியாக சமாளிச்சிட்டேன்,


அவளும் சரி என்று சொல்லிவிட்டு மாலை நேரத்தில் சர்ச்க்கு போனாள். அவ சர்ஸ்க்கு போய்விட்டு அப்படியே ஷாப்பிங்க் செய்து வர எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகிவிடும் என்பதால் அவள் போன உடனே விறு விறு என்று மைசூர் பாகு செய்ய ஆரம்பித்து அவள் வருவதற்குள் முடித்து கிச்சனையும் க்ளின் செய்து வைத்துவிட்டேன்

ஸ்வீட் செய்வதிலே மிக குறைந்த நேரத்தில் செய்வது இந்த ஸ்ரீ கிருஷ்னா  ஸ்டைல் மைசூர் பாகுதான்

அதற்கு தேவையான பொருட்கள் இதோ


3 கப் கடலை மாவு
6 கப் சீனி
3 கப் ஆலிவ் ஆயில் ( நாங்க ஹெல்த்தியா மைசூர் பாகு செய்வதால் ஹீஹீ)
1 கப் நெய்


முதலில் கடலை மாவை வடை சட்டியில் போட்டு சிறிது வறுக்கவும் ஒரு நிமிடம் போதும் ((இன்பாக்ஸில் பெண்களை வறுத்து எடுப்பது போல பண்ணினால் மாவு கருத்துவிடும் அதனால் அப்படி செய்யக் கூடாது)


அப்படி செய்யும் போது ,பக்கத்து அடுப்பில் ஒரு சட்டியை வைத்து சுகரை போட்டு அதில் ஒரு கிளாஸ் தண்ணி ஊற்றி அதை ஒரு கம்பி (அதாவது என் உடம்பு சைஸ்க்கு )பதம் வரும் வரை காய்ச்சவும்.

இப்படி செய்யும் போதே வறுத்து வைத்த கடலைமாவில், நாம் அளந்து வைத்திருக்கும் எண்ணெய்யை விட்டு அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

கரைத்த மாவை காய்ச்சி கொண்டிருக்கும் சுகர் பாகில் கொட்டி , விடாமல் கிண்டவும், அப்படி கிண்டும் போது நெய்யை தாராளமாகவிட்டு கிண்டிக் கொண்டே வரவும்.

இப்படி செய்யும் போது அருகில் அடுத்த அறையில் இருந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்த என் பெண் டாடி சூப்ப்ர் ஸ்மல் மைசூர் பாகு ரெடியா என்று கேட்டாள் நான் இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் அதன் பின் ஆறிய பின்தான் சாப்பிட முடியும் என்றதும் அவள் முகம் வாடிவிட்டது அதை பார்த்த நான் ஒரு கிண்ணத்தை எடுத்து கிளறி கொண்டிருந்த மைசூர் பாகை எடுத்து அதில் போட்டு இந்தா இந்த அல்வாவை சாப்பிடு அதற்குள் மைசூர் பாகு ரெடியாகிவிடும் என்று சொன்னதும் அவள் முகம் மலர்ந்தது .. )

இந்த கலவை மிக கெட்டியாகும் போது  நாம் ஊற்றிய நெய்/ஆயில் எல்லாம் கொப்பளிக்க ஆரம்பிக்கும் அது சிறிது கொப்பளித்தவுடன் நாம் கிளறுவதை நிறுத்தி அந்த கலவையை நெய்தடவிய ட்ரெய்யில் கொட்டி அதை சமப்படுத்தவும் .அது சிறிது சூடு ஆறிய பின் அதை கத்தியால் நமக்கு வேண்டிய வடிவத்தில் டைமண்ட் சேப்பிலோ அல்லது சதுர நீள் சதுர சேப்பிலோ வெட்டிக் கொள்ளவும். அது சிறிது ஆறிய பின்  சுகரை அதன் மேல் சிறிதளவு தூவவும்.

அவ்வளவுதான் மைசூர்பாகு ரெடி. இப்படி செய்தால் பல்லு இல்லாதவர்கள் கூட மைசூர் பாகு சாப்பிட முடியும். சுகர் உள்ளவர்களும் தைரியமாக சாப்பிடலாம் அப்படி சாப்பிட்டா என்ன? கொஞ்சம் சுகர் அதிகமாகும் அவ்வளவுதான். அதற்காக நாம் சாப்பிடாமல் இருந்து என்ன சாதிக்க போறோம்.

வெளியே போன என் மனைவி வீட்டிற்கு வந்ததும் நான் செய்த மைசூர் பாகை ரசித்து சாப்பிட்டுவிட்டு நெய் அதிகம் போட்டீங்களா என்று நெய் பாட்டிலை பார்த்தாள். நான் இல்லைம்மா கால் கப்புதான் போட்டேன் வேண்டுமானால் நெய் பாட்டிலை பாரேன் என்றேன். அவளும் அதை பார்த்துவிட்டு அது எப்படி நானும் அதே அளவு நெய்தான் சேர்க்கிறேன். ஆனால் இப்படி சாப்ட்டாக டேஸ்டாக வரமாட்டேங்கிறதே என்று ஒரு வித குழப்பத்தோடு சென்றாள்.

அவளுக்கு தெரியுமா என்ன நான் இன்னொரு நெய்பாட்டில் அவளுக்கு தெரியாமல் வாங்கி வைத்து அதில் இருந்து ஒரு கப் நெய் எடுத்து இதற்கு பயன்படுத்தியது என்று...ஹீஹீ ஒரு மைசூர் பாக் நல்லா வர என்னவெல்லாம் திருட்டுதனம் பண்ண வேண்டியிருக்கிறது.

ஹலோ மக்களே இதை படித்துவிட்டு நான் செய்யும் தகிடு தத்தங்களை என் மனைவியிடம் சொல்லிடாதீங்க...... ப்ளீஸ்

வயசு ஆகிட்டே இருப்பதால் இப்ப எல்லாம் பூரிக்கட்டையால் அடிவாங்க முடியலை..


http://avargal-unmaigal.blogspot.com/2015/01/blog-post.html








அன்புடன்
மதுரைத்தமிழன்

24 comments:

  1. மதுர ரெண்டு மூணு விஷயம்.. தனி தனி கம்மெண்ட்டில் சொல்றேன்.

    முதலில்... நீ அறிவாளி, பாராட்டியாகவேண்டும். இந்த மாதிரி தான் போன வருஷம் என் பொண்ணு கேட்டான்னு நானும் செஞ்சேன். அங்கே மாதிரியே இங்கும் நெய் போடாத.. சக்கரை போடாத .. மாவு போடாதன்னு ஒரே அறிவுறை. அவங்க இல்லாத நேரத்தில் செஞ்சேன். நெய் அதிகம் போட்டா கண்டுபிடிச்சிடுவாங்களேன்னு சொல்லி அதுல நிறைய நல்லெண்ணெய் ஊத்தி வைச்சேன். வந்தவுடன் கெட்டியாக ஆறி கொண்டு இருந்த பாகுவை சாப்பிட்டு இவ்வளவு மென்மையா இருக்குதே ..எம்புட்டு நெய் போட்டீங்கனு பாட்டிலை பார்த்து.. ..பரவாயில்லை கொஞ்சம் தான் போட்டது இருக்கீங்கன்னு சொன்னாங்க..

    ரெண்டு வாரம் கழிச்சி பாயாசத்துக்கு முந்திரியை வறுக்க நெய் பாட்டில் திறந்து ஊத்த.. கிட்ட தட்ட அடுப்பே பத்திக்கிச்சி. நல்லெண்ணெய் பாட்டிலில் வினிகர் ஊத்தி வைச்சி இருக்காங்க..

    ReplyDelete
    Replies
    1. என்னை அறிவாளின்னு என் வாழ்க்கையில் முதன் முதலாக சொன்னது நீங்கள்தான் அடுத்த தடவை வரும் போது உங்களுக்கு சிக்கன் பிரியாணி கண்டிப்பாக உண்டு

      Delete
  2. அடுத்து அந்த பாகு கெட்டியாவே ஆகல. பிள்ளை வீட்டுக்கு வந்தவுடன்.. என்ன மைசூர் பாகு வாசனை வருதேன்னு சொல்ல.. நானோ.. இல்லை இல்லை.. இது வேற.. துபாயில் இருக்கும் போது என் பாகிஸ்தான் நண்பன் சொல்லி கொடுத்தான்.. இதுக்கு பேர் "காஷ்மீர் இஸாலா" ன்னு சொல்லி ஒரு ஸ்ட்ரா போட்டு கொடுத்தேன்.. குடிச்சிட்டு நல்லா இருக்குனு சொல்லிட்டு போனா.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா மைசூர்பாகை ஸ்ட்ரா போட்டுக் குடித்த முதல் ஆள் உங்கள் ராசாத்தியாகத்தான் இருக்கும் ஹாஹாஹ் தாங்கலைப்பா உங்க லொள்ளூ!! நாங்க சிரிச்சுக்கிட்டேஇருக்கோம் விசு

      Delete
  3. அம்மணி ஹோம் ஒர்க் பண்றங்களா? ஏதாவது கல்லூரியில் சேர்ந்துட்டாங்களா? On a serious note, if so, vaalthukkal and all the best.

    ReplyDelete
    Replies
    1. இது எங்கவீட்டு சின்ன அம்மணி அவங்கதான் என் சமையலுக்கு ரசிகை

      Delete
  4. நான் வந்த போது ஒரு கேசரி கொடுத்தீங்களே.... அப்ப இந்த நெய் ட்ரிக் தெரியாதா? கொஞ்சம் கம்மியா இருந்தது...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு கேசரி பண்ணும் போது மாமி பக்த்தில் இருந்ததால் டயட் கேசரி அதனால நெய் கம்மியாகத்தான் இருக்கும்

      Delete
  5. பதிவு எழுத கை கொடுக்கும் சமையல் குறிப்புகளுக்கு நன்றி கள்

    ReplyDelete
    Replies
    1. எதுவும் எழுத தோனாத நேரத்தில் கைகொடுக்கும் இந்த சமையல் குறிப்புக்கள்

      Delete
  6. ஆவ்வ்வ்வ்வ் ஓஷம் ட்றுத் ஓஷம்... இவ்ளோ ஒயில் சேர்த்தாமைசூப்பாகு செய்வார்கள்...
    இருப்பினும் நீங்க மாமிக்கு இவ்ளோதூரம் பயப்பிடுவீங்க என்பது இப்போதான் தெரியும் எனக்கு:).. ஹா ஹா ஹா ரொம்ப தைரியசாலி எண்டெல்லோ நினைச்சிருந்தேன்...

    அதிரா:- சிங்கம் போல வெளியே போகும்... ஆடு போல உள்ளே வரும் அது என்ன???:)

    ட்றுத் ட மகள்:- அதுவா அது எங்க அப்பா:) ஹா ஹா ஹா:).

    ReplyDelete
    Replies

    1. நெய்யி
      நெய்யிற்கு பதிலாக ஆயில் சேர்த்து இருக்கிறேன். நெய்யை விட ஆலிவ் உடம்புக்கு நல்லது என்பதால்...

      அதிரா நீங்க நிறைய ஸ்பெலிங்க் மிஸ்டேக் பண்ணுறீங்க... இப்ப பாருங்க அடிப்பாவி அதிரா என்பதற்கு பதில் அப்பாவி அதிரா என்று உங்கள் பெயரை எழுதி இருக்கீங்க ஒரு லெட்டர் மிஸ்ஸிங் அதனால அர்த்தமே மாறுது பாருங்க... சரி சரி சிக்கிரம் டி சேர்த்துகுங்க

      நான் வீட்டுல ஆடு வெளியில சிங்கம் என்று நானே சொன்னால் அது அசிங்கம் ஹீஹீற்கு பதிலாக ஆயில் சேர்த்து இருக்கிறேன். நெய்யை விட ஆலிவ் உடம்புக்கு நல்லது என்பதால்...

      அதிரா நீங்க நிறைய ஸ்பெலிங்க் மிஸ்டேக் பண்ணுறீங்க... இப்ப பாருங்க அடிப்பாவி அதிரா என்பதற்கு பதில் அப்பாவி அதிரா என்று உங்கள் பெயரை எழுதி இருக்கீங்க ஒரு லெட்டர் மிஸ்ஸிங் அதனால அர்த்தமே மாறுது பாருங்க... சரி சரி சிக்கிரம் டி சேர்த்துகுங்க

      நான் வீட்டுல ஆடு வெளியில சிங்கம் என்று நானே சொன்னால் அது அசிங்கம் ஹீஹீ

      Delete
    2. அதிரா இங்கும் பலர் ஓல்ட் காலத்து மைசூர்பாகிற்கும் சரி, கிருஷ்ணா ஸ்வீட் மைசூர் பாகிற்கும் சரி... நெய்யும், சமையல் எண்ணையும் சேர்த்துத்தான் செய்யறாங்க. அது என்னனா சமையல் எண்ணெய் சேர்த்தா கொஞ்சம் நல்லா சீக்கிரம் கொஞ்சம் பொற பொறனு ஹோல்ஸ் ஓட வரும்னு.

      கீதா

      Delete
  7. ஹலோவ் ப்ரண்ட் :) நேத்து நான் மனசுக்குள்ள நினைச்சேன் ரொம்ப நாளாச்சே நீங்க சமையல் குறிப்பு போட்டுன்னு அதுக்குள்ள காதில் விழுந்திருச்சா :)

    மைசூர்பாகும் தேன்குழலும் சூப்பரோ சூப்பர் ..
    ஒரு சந்தேகம் இந்த ஆலிவ் ஆயில் சேர்த்தா கசக்காதா ???

    நான் வாழ்க்கையில் ஒரேயொரு தரம் தான் மைசூர் பாகு செய்யப்போனேன் அது கடலை மாவு பேயாசம் நோ :) பாயசம் ஆச்சுதா அதோட கைவிட்டுட்டேன் ..
    எங்காத்துக்காரருக்கு ஸ்வீட்ஸ் ரொம்ப பிடிக்கும் எங்க வீட்ல குட்டி ஏஞ்சலுக்கு ஸ்வீட்ஸில் இஷ்டமில்லை :)
    அதனால் இந்த மைசூர்பாகை செய்ய போறேன் ஆசீர்வாதம் பண்ணி அனுப்புங்க :)என்னை

    ReplyDelete
    Replies
    1. ஆலிவ் ஆயிலில் பல வகை உண்டு நான் கசக்காத பொறிப்பதற்கும் வருப்பதற்கு உள்ள ஆலிவ் ஆயிலை பயன் படுத்துகிறேன் அது கசப்பதில்லை. நீங்க வேண்டுமானால் கனோலா ஆயில் உபயோகப்படுத்துங்கள் அல்லது முழுவதுமாக நெய்யை உபயோகிங்கள் இது மிக மிக எளிதான் ரிசிப்பி இதை சொதப்பவே முடியாது

      குழந்தைக்கு தேன் குழலும் வூட்டுகாரருக்கு மைசூர் பாகும் உங்களுக்கு ஏதாவது இலைகொலைகளை போட்டு ஒரு ஜூஸ் பண்ணி சாப்பிடுங்கள்

      Delete
    2. ஏஞ்சல் என்னப்பா நீங்களுமா விசு மாதிரி மைசூர் பாயாஸம் செஞ்சீங்க! ஹாஹாஹா

      கீதா

      Delete
  8. //கம்பி போல //
    இது கொஞ்சம் அதிகமா இல்லை :) கோடு போலன்னு சொல்லிக்கோங்க :)

    ReplyDelete
    Replies

    1. கம்பின்னு சொன்னதற்கு காரணம் ஒல்லியானும் ஸ்ட்ராங்கான பாடி அதனாலதான் மாமி எத்தனை தடவை பூரிக்கட்டையால் அடித்தாலும் இந்த பச்ச உடம்பு தாங்குது

      Delete
  9. நெய்க்கு பதில் ஆலிவ் ஆயிலா? முயற்சித்தது இல்லை. எங்கள் இல்லத்தில் நான்தான் மைசூர் பாகு செய்வேன்.அது எப்படி வருகிறதுஎன்று பார்த்தபின் அது கிருஷ்ணா ஸ்வீட்ட்டா, செங்கல் ஸ்வீட்ட்டா என்று முடிவு செய்துகொள்வோம்! தனியாக ரகசியமாக ஒரு நெய் பாட்டில் வாங்கி வைத்திருந்த அறிவை வியக்கிறேன். நமக்குத் தோணாமப் போச்சே....!

    ReplyDelete
  10. என் அண்ணி சரியில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறாள். இப்படியா நெய் வாங்குமளவுக்கு அவளுக்கு தெரியாம பைசா சேர்க்குமளவுக்கு இருப்பா?! இன்னொசண்ட் லேடி

    ReplyDelete
  11. நான் பெரும்பாலும் நெய் மட்டுமே சேர்த்துத்தான் செய்வேன் மதுரை அப்படியே எண்ணை சேர்த்தாலும் நெய் கூடுதலாகவும், எண்ணை கொஞ்சமாகவும் சேர்த்துக்குவேன் மதுரை சகோ...உங்கள் ரெசிப்பியும் செய்து பார்க்கறேன் ஆனா எங்களுக்கு இம்புட்டு ஆலிவ் ஆயில் எல்லாம் கட்டுபடியாகாது...ஸோ சமையல் எண்ணெய்தான்...ஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  12. நீங்க நெய்ய அப்படியே வா விடுவீங்க? ஓ! நான் நெய்ய இன்னொரு பக்கத்துல சூடு பண்ணி நல்லா சூடு ஆனதும் மைசூர்பாகு கிளறி நல்லா வரும் போது கொஞ்சம் கொஞ்சமா சேர்க்கும் போது நுரைத்து நுரைத்து வரும்....அது நல்லா pOres வரும் ஆனால் வாயில் போட்டால் கரையும்.

    தில்லி சென்ற போது எண்ணெய், நெய் என்றால் பல மைல் தூரம் ஓடும் என் தங்கை வீட்டவர்களுக்காக நெய் ரொம்ப சேர்க்காமல் ட்ரெடிஷனல் ஸ்டைலில் செய்தேன்...அதையே தான் வெங்கட்ஜி கக்கும் கொடுத்தேன்..கடிக்க முடியாமல் எல்லாம் இல்லை. ஸாஃப்ட் தான ஆனால் கிருஷ்ணா ஸ்வீட் போல எல்லாம் இல்லை.....பாவம் அவர்...ஹாஹாஹா..மறு முறை தில்லி சென்றால் நன்றாக என் ஸ்டைலில் வாயில் போட்டால் கரையும் படி செய்து கொடுக்கணும்....ஹிஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
  13. மதுரைத்தமிழரின் மதுர மைசூர்பாகுவின் மணம், குணம் வாசிக்கும்போதே நாசிக்குள் நுழைகின்றன.

    அருமை, but my My favourite is பாதுஷா.....

    கோ

    ReplyDelete
  14. என்ன இது?? குண்டு ஒன்னு வச்சிருக்கேன் வெடி குண்டு ஒன்னு வெச்சிருக்கேன் சொல்லிப்புட்டு தீபாவளிக்கு
    மைசூர்பா செஞ்சாச்சா.... ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணியா இது கேள்வி பட்டதில்லை செஞ்சிட வேண்டியதுதான் நான் செய்யலாமா நானும் என் பொண்ணுகிட்ட சொல்லி அவங்க அப்பாவை செய்ய சொல்லாம யோசிச்சிட்டு இருக்கேன் ரொம்ப கஷ்டமில்லைனு வேற சொல்லிட்டீங்க

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.