சமிபத்தில் நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைபற்றி சிந்தித்த போது ...
நல்ல இதயமுள்ளவர்களுக்கு வலிகள் வரும் அது ஆண் பெண் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் பெண்கள் வலியை வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் வெளிப்படுத்துவதில்லை. சினிமாவில் வந்த இந்த பாடல் வரிகள் ஆண்களுக்கு பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். வெளியில் சிரிக்கிறேன் உள்ளே அழுகுறேன் நல்ல வேஷம்தான் இருந்து வெளுத்து வாங்குறேன்,
ஆண்களுக்கு எப்போது எல்லாம் வலி வரும் என்பதை யாராவது கவனித்து இருக்கிறீர்களா?
ஆண்களூக்கு சிறுவயது முதலே வலி வர ஆரம்பிகின்றன. சிறு வயதில் தன் அம்மாவை தன் அப்பா காரணமில்லாமல் திட்டும் போது பதிலுக்கு அப்பாவை எதிர்த்து கேட்க முடியாமல் அமைதியாக இருக்கும் போது முதலில் வலி தோன்றுகிறது.. அதன் பிறகு பள்ளிக்கு போகும் தன் தங்கையை அல்லது அக்காவை யாராவது கேலி செய்தால் வலி வருகிறது. அதன் பின் தன் தங்கை அல்லது அக்கா யாரையாவது காதலிக்கிறாள் என்று தெரியவரும் போது அந்த பையன் நல்லவனா கெட்டவனா என்று தெரியாமல் இருக்கும் போது வலி வருகிறது. பின் அந்த சகோதரிகள் காதலித்தவனை விட்டுவிட்டு வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டு கணவரின் வீட்டுக்கு செல்லும் போது மீண்டும் வலி வருகிறது.
இதற்கிடையில் அவனுக்கு தான் விரும்பும் பெண் தன்னை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் போதும். அதன் பின் ஒருவழியாக ஒரு பெண்னை காதலித்து அவளின் பிறந்த நாளுக்கும் , வேலண்டைன்ஸ் டே பரிசு வாங்க கையில் காசு இல்ல்லாமல் தவிக்கும் போதும் அதற்க்காக அம்மாவிடம் பொய் சொல்லி பணம் வாங்கும் போதும். அவன் காதலி அத்தனையும் வாங்கி கொண்டு சில ஆண்டுகள் கழித்து நாம் நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணும் போதும் வலி வரும்.
கூட படிக்கும் நண்பர்கள் நம் கூட சேர்ந்து சினிமா பார் என்று ஆட்டம் போட்டுவிட்டு நமக்கு தெரியாமல் படித்து விட்டு ஒன்றுமே படிக்கவில்லை இந்த தடவை எக்ஸாமில் அவுட்டுதான் என்று சொல்லிவிட்டு ஃப்ர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகும் போதும். சிபாரிசில் வேலைக்கு சேர்ந்துவிட்டு நாம் எந்த வித சிபாரிசுமில்லாமல் நம் திறமையை நம்பி வேலை தேடி வேலை கிடைக்காமல் இருக்கும் போது மச்சி ரொம்ப கடினமா முயற்சி செய்யவேண்டும் என்று நமக்கு அட்வைஸ் பண்ணும் போதும் வலி வரும்.
(அம்மா ; டேய் கடவுள்கிட்ட என்ன வேண்டிகிட்ட? மகன் ; எனக்காக ஒன்னும் வேண்டிக்கிடலம்மா....என் அம்மாவுக்கு கொள்ளை அழகோட ஒரு பெண் கிடைத்தால் போதும் என்றுதான் வேண்டிக்கிட்டேன் )
ஒரு வழியாக வேலை கிடைத்து கல்யாணம் பண்ணு நேரம் வரும் போது நமக்கு பிடித்த பெண்ணைவிட அவர்களுக்கு பிடித்த பெண்ணை நம் தலையில் கட்டும் போதும்,கல்யாணம் ஆன புதிதில் நம் மனைவியின் பெற்றோர்களையும் உறவினர்களையும் இழிவாக பேசும் போதும். கல்யாணத்திற்கு அப்புறம் நமக்கு பிடித்த அம்மாவும் மனைவியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி சண்டை போடும் போதும், இதற்க்காக உள்ளுர் வேலையை விட்டு வெளிநாட்டில் வேலை தேடி பெற்றோர்களையும் , உறவினர்களையும், நண்பர்களையும் பிரியும் போதும் வலி வரும்.
வெளிநாட்டிற்கு நம்முடன் வந்த மனைவி போன் முலமாக அவளின் அம்மாவிடம் சமையல் செய்வது எப்படி என்று அரை குறையாக கற்றுக் கொண்டு அதற்க்காக வரும் போன் பில்லை பார்த்ததும் வலி கண்டிப்பாக வரும்.. அப்படி கற்று மனைவி சமைத்ததை சாப்பிட்டாலும் கண்டிப்பாக அடுத்த நாள் வயிற்று வலி வரும். கோபத்தில் பூரி கட்டையால் மனைவி அடிக்கும் போதும் வலிக்கும்.
இப்படி அப்படினு இருந்து விட்டு உண்மையிலேயே நாம் நமது மனைவியை காதலிக்கும் போது குளிர்காலத்தில் இங்கே ரொம்ம போர் அடிக்குது அம்மாவையும் தேடுது என்று நம்மை விட்டு இரண்டு மாதங்கள் பிரியும் போதும் வலி வரும். இந்த நேரத்தில் நீயூயார்க்கிற்கு ரயிலில் செல்லும் போது நமக்கு எதிரே உள்ள சின்னம் சிறியதுகள் கொஞ்சி குழாவுவதை பார்க்கும் போது நாம் ஏதையோ இழந்த உணர்வு வரும் போது வலி வரும்.
பிரிந்த மனைவி வந்தவுடன் கொஞ்சிய கொஞ்சலால் கருவுற்ற மனைவி 10 மாதம் படும் கஷ்டத்தை நினைத்து நாம்மால் அந்த வலியை பகிர்ந்து கொள்ளமுடியவில்லை என்று நினைக்கும் போது வலி வரும். மருத்துவமனையில் பிரசவத்தின் போது மனைவியின் கையை பிடித்து நிற்கும் போது அவள் வலியினால் நம் கையை பிடித்து அமுக்கும் போதும் நமக்கு வலி வருமுடோய்ய்ய்ய்...
தாய்ப்பால் கொடுக்க கஷ்டப்படும் மனைவியை பார்க்கும் போது வலி வரும். அந்த கஷ்டத்தை பார்த்து போதும் தாய்பால் கொடுப்பதை நிறுத்திவிடு என்று சொல்லிய பின் குழந்தை எதிர்காலத்தில் பாதிக்கப்படும் என்று நினைக்கும் போது வலி வரும். இருவரும் வேலைக்கு போகும் போது ஆசை குழந்தையை டேய் கேரில் விட்டு செல்லும் போது வலி வரும். குளிர் நேரத்தில் ஸ்கூல் பஸ் ஸ்டாப்பில் குளிரில் பஸ்ஸுக்காக காத்திருப்பதை பார்க்கும் போதும், அதன் பின் சிறிது வளர்ந்த குழந்தை காரத்தே ஸ்கூலில் மற்ற குழந்தைகளுடன் பயிற்ச்சியின் போது அடி வாங்கும் போது மனதில் வலி தோன்றும். வளர்ந்த குழந்தை காலேஜுக்காக வெளி ஊருக்கு பிரிந்து செல்லும் போது வலி வரும். தன் மகள் விரும்பிய பையன் அவளை ஏமாற்றி செல்லும் போது அதனை சொல்லி அழுகும் போதும் வலி வரும். அதை ஒருவழியாக மறந்து நல்ல பையனை கல்யாணம் செய்து பிரிந்து போகும் போது வலி வரும். வளர்ந்த பொண்னை அவள் கணவன் நம் முன்னால் திட்டும் போது வலி வரும்.பேரக் குழந்தை பிறந்த போது அதை மற்றவர்கள் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது குழந்தைக்காக வெயிட் பண்ணும் போது வலி வரும்......
வயதான காலத்தில் பாசமுள்ள மனைவி நோய்வாய் பட்டு கஷ்டப்படும் போதும், மனைவி தன்னைவிட்டு மறைந்து போகும் போதும் வலி வரும். ஆண்களுக்கும் இதயமிருப்பதால் அவர்களுக்கும் வலியும் வேதனைகளும் அழுகைகளும் வரும். ஆனால் அதை வெளிக்காட்டாமல் வெளியே சிரித்து கொண்டும் உள்ளே அழுது கொண்டும் இருப்பவர்கள்தான் ஆண்கள். இதில் சில ஆண்கள் விதி விலக்கு அவர்களைப் பற்றி இங்கே கூறவில்லை.
வலிகள் இல்லாமல் வாழ்க்கையில்லை. இந்த பதிவை நீங்கள் படித்தும் கமெண்ட்ஸ் ஏதுவும் போடாமல் போனாலும் வலிக்கும்..
ஏகப்பட்ட வலிகளைப் பற்றி படித்து உங்களுக்கு வலி வந்தாலும் வந்திருக்கும். அதனால் உங்கள் வலியை போக்க ஒரு நல்ல ஜோக் படித்து சிரித்து செல்லுங்கள்.
ஏண்டா.......அம்மா அடித்ததுக்கு போய் இப்படி அழுகுற?
போங்கப்பா உங்களை மாதிரி எல்லாம் என்னால் வலி (அடி) தாங்க முடியாது.
உங்களுக்கு வந்த வலிகளையும் பின்னுட்டமாக இங்கே சொல்லலாம்.
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்
நிஜமாய் இதை படிச்சுட்டு ஜோக் எல்லாம் தோணலை...ரொம்பவே உணர்வு பூர்வமா இருந்தது...வலிகள் ஆண்கள் பெண்கள் ரெண்டுபேருக்குமே சொந்தம் தான்...என்ன ஆண்கள் அதை அவளவு சீக்கிரம் எக்ஸ்பிரஸ் பண்ணிக்க மாட்டங்க...ஆனால் இந்த போஸ்ட் இல் இன்னும் கொஞ்சம் ஆண்களில் வலியை புரிஞ்சுக்க முடிஞ்சது...நல்லா இருந்தது தமிழ் guy அவர்களே...
ReplyDeleteஅப்படி கற்று மனைவி சமைத்ததை சாப்பிட்டாலும் கண்டிப்பாக அடுத்த நாள் வயிற்று வலி வரும். கோபத்தில் பூரி கட்டையால் மனைவி அடிக்கும் போதும் வலிக்கும்.//
ReplyDelete:))
சிரிக்க வைத்தாலும் சீரியஸால்ல சொல்லிருக்கீக. வலி பற்றி நெசமா..
இதயமுள்ள ஆண்களைப் பற்றி பெண்கள் சிறிது புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சிறிது நகைச்சுவையுடன் கொடுத்துள்ளேன். இதில் வந்த பல வலிகளை வாழ்க்கையில் அனுபவித்தவன் & அனுபவிக்க போறவன்.இதுவரை பூரிக்கட்டையால் அடி வாங்க்கியதில்லை. கருத்துக்கள் கூறிய ஆனந்தி & சாந்தி அவர்களுக்கு நன்றி
ReplyDeleteவலிகளில் ஆணென்ன பெண்ணென்ன?
ReplyDeleteneenga sonna pala vishayangaloda oppukkuren. sariya than solli irukkenga. aana neenga visu sarukku doorathu urava.. he he jokku!sasisuga.
ReplyDelete