சில நேரங்களில் நாம் எடுக்கும் சிறிய முடிவுகள் நமது வாழ்க்கையைஅப்படியே நம் வாழ் நாள் முழுவதும் திசை திருப்பி போட்டுவிடும்,பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொருளுக்கும்( பணம்,தங்கம்) அதிக ஆசைப் பட்ட மன்னர்களும், அரசியல் வாதிகளும் பிசினஸ் மேன்களும் ,உலக தலைவர்களும், மக்களும் எடுத்த சிறிய முடிவினால் அழிந்த உண்மை கதைகள் அநேகம் உள்ளதை நாம் அறிவோம்.
உதாரணத்திற்கு கோயம்புத்தூர் டிரைவர்கள் பணத்திற்க்காக எடுத்த தவறான முடிவு என் கவுண்டரில்தான் முடிந்தது. அமெரிக்க தலைவர்கள் ,பிசினஸ் மேன்கள் எடுத்த தவறான முடிவுகளால் அமெரிக்க பொருளாதாரம் கடலில் முழ்கிய கப்பல் போல தத்தளித்து கொண்டிருக்கிறது.
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நாம் நமது பள்ளி புத்தகத்தில் படித்து முடித்து மறந்தும் போனோம்.இப்போதைய பள்ளி புத்தகத்தில் இது போன்ற வரிகள் இன்னும் உள்ளதா என்று தெரியவில்லை.
இந்த வரிகளை மறந்த ஒருவன் எடுத்த முடிவு அவனை எங்கே கொண்டு சென்றன என்பதை கிழேயுள்ள வீடியோ க்ளிப்பை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
மனித மனம் பலவினமானதுதான் ஆனால் நாம் அதை நல்லபண்புகளாலும் , எண்ணங்களாலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகள் நம்மால் எடுக்க முடியும்.
எந்த முடிவு எடுத்தாலும் அந்த முடிவால் மற்றவர்கள் சிறிதும் பாதிக்காதபடி முடிவு எடுங்கள்.
மத்திய அமைச்சர் ராஜா எடுத்த முடிவால்தான் அவர் பதவி இழந்தார்..யாரு கண்டது அவர் உயிர் இழந்தால் கூட அதிசியம் கிடையாது.(அவரால் மிகப் பெரிய பலன் அடைந்தவர்கள் தங்கள் பெயர் வெளியே தெரியாமல் இருக்க என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.பலன் அடைந்தவர்கள் தவறான முடிவு எடுக்காமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை)
இதை படிப்பவர்கள் யாரேனும் அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருந்தால் இதை ஒரு முறையாவது பார்க்க சொல்லுங்கள்.
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்
// மனிதமனம் பலவீனமானதுதான் நாம் அதை நல்லபண்புகளாலும் எண்ணங்களாலும் பல்ப்படுத்திக்கொண்டே
ReplyDeleteஇருந்தால் எந்த இக்கட்டான நேரங்களிலும் நல்ல முடிவுகளை நம்மால் எடுக்கமுடியும்//
நிஜமான வார்த்தைகள்.