பெரியவர்களாகிய நாம் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசங்கள் பலவிதம்.
நிர்வாணம் ( NUDITY ) :
கோடைகாலத்தில் என் குழந்தையயும் என் நண்பர்களின் குழந்தைகளையும் காரில் அழைத்து சென்றேன். அடுத்த லேனில் ஒரு கன்வெர்டபல் காரில் ஒரு அமெரிக்க தம்பதியினர் வந்து கொண்டிருந்தனர். அதி வந்த பெண் எழுந்து நின்று கைகளை ஆட்டிக் கொண்டு வந்தார். அவளூக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை தான் அணிந்த டிரெஸ்களை களையத் தொடங்கி நிர்வாணமாகினார். எனக்கு உடனே ஷாக் அடித்தது குழந்தைகள் அவளை பார்த்து கொண்டிருந்ததாள். நான் உடனே காரை வேகமாக ஓட்டத் தொடங்கினேன். பின் சீட்டில் இருந்த என் குழந்தை சொன்னது டாடி டாடி அந்த காரில் பார்த்தாயா எந்த லேடி சீட் பெல்ட் அணியாமல் காரில் நின்று கொண்டு போகிறாள் போலிஸ் பார்த்தால் டிக்கெட் கொடுக்க போகிறான் என்றாள். அதன் பின் தான் நிம்மதி & புத்தி வந்தது. நாம் பார்க்கும் பார்வைக்கும் குழந்தைகள் பார்க்கும் பார்வைக்கும் உள்ள வேறுபாடு.
நேர்மை ( HONESTY ) :
என் குழந்தை அவளின் பாத்ருமிலிருந்து டாடி என்று கத்தினாள் . நான் ஒடி ட் ஸ் சென்று என்னவென்று பார்த்தேன். அவளின் டூத் பிரஸ் டாய்லெட்டில் விழுந்து விட்டது . நானும் அதை எடுத்து அது யக்கி என்று சொல்லி குப்பை கூடையில் போட்டு விட்டு புதியது ஓன்று தருகிறேன் என்று சொன்னேன். அவள் அதற்கு சரி என்று சொல்லிவிட்டு சில நிமிஷம் யோசித்து விட்டு என்னை பார்த்து சிரித்து கொண்டே சொன்னாள் உன் பிரஸையும் தூக்கி குப்பை கூடையில் போடு டாடி ஏனென்றால் இரண்டு நாளைக்கு முன்னாள் உன் டூத் பிரஸும் டாய்லெட்டிற்குள் விழுந்து விட்டது என்று சொன்னாளே பார்க்கலாம்.
டிரெஸ் அப் (DRESS-UP )
ஒரு குழந்தை அப்பா பார்ட்டிக்கு போவதற்க்காக டிரெஸ் அணிந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருந்தான் அப்போது அவன் டாடி டக்சிடோ ( tuxedo ) அணிந்து கொண்டிருப்பதை பார்த்த குழந்தை அவன் டாடியைப் பார்த்து வார்னிங் செய்தான் . டாடி அதை அணியாதை என்று அதற்கு டாடி கேட்டார் ஏன் என்று. அதரூகு அவன் சொன்னான். நீ எப்போது எல்லாம் அதை அணிந்து கொண்டு பார்ட்டிக்கு போகிறாயோ அடுத்த நாள் காலையில் நீ தலைவலிக்கு என்று கம்பெளையண்ட் பண்ணுகிறாய் என்றான்.
நிர்வாணம் (MORE NUDITY:
YMCA-யில் ஒரு சின்ன பையன் வழி தவறி பெண்களின் லாக்கர் ருமிற்குள் நுழைத்து விட்டான். அங்குள்ள பெண்கள் கூச்சலிட்ட வண்னம் அருகில் உள்ள துண்டை எடுத்து நிர்வாணமான உடம்பை மறைத்தனர். அதை ஆச்சிரியாமாக் பார்த்த் சிறுவன் அவர்களை பார்த்து கேட்டான் என்ன நீங்கள் இதற்கு முன் சிறுவனை முன்னே பின்னே பார்த்தது கிடையாதா ஏன் கத்தி கூச்சலிடுகிறீர்கள் என்று கேட்டான்.
ஸ்கூல் (SCHOOL)
ஒரு சின்ன பொண்ணு ஒருவாரமாக ஸ்கூலுக்கு போய்விட்டு வார இறுதியில் அவள் அம்மாவிடம் நான் வேஸ்டிங் மை டைம் என்றாள். ஏன் என்று அம்மா கேட்டதற்கு சொன்னாள். எனக்கு ரீடு பண்ண முடியல, எனக்கு எழுத தெரியல ஆனா எனக்கு நல்லா பேசத் தெரியும். ஆனா டீச்சர் எப்ப பார்த்தாலும் என்னை பார்த்து பேசாத என்று சொல்லிக் கொண்டே இருக்கிறாள் என்றாள்.
பைபிள் ( BIBLE )
ஓரு சின்ன பையன் வீட்டிலுள்ள பைபிளை திறந்து பார்த்து கொண்டிருந்த போது அதி இருந்து ஒரு காய்ந்த மர இலை ஒன்று உள்ளே இருந்து வெளியே விழுந்தது. அதை பார்த்த சிறுவன் அம்ம அம்மா இங்கே பாருமா நான் பைபிளிலிருந்து ஒன்று கண்டு எடுத்து உள்ளேன் என்று ஆச்சிரியமாக சொன்னான். அதற்கு அம்மா என்னவென்று கேட்டாள். அவன் சொன்னான் நான் நினைக்கிறேன் இது ஆடம்ஸின் அண்டர்வேர் என்று.
.
மேலே சின்னப்பசங்களின் நேர்மையை பாராட்டி விட்டு கீழே இருக்கும் படங்கள் எல்லாம் அதற்கு நேர்மாறாக காட்டியிருக்கிறீர்கள்....
ReplyDeleteஇருப்பினும் படங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
அழகி சொன்னதையே நானும் வழி மொழிகிறேன்...மெசேஜ்,ஜோக்ஸ் எல்லாமே நச்ச்..நச்சுனு கொடுத்துட்டு எதுக்கு இந்த மாதிரி படங்கள்..முடிஞ்சால் அந்த படங்கள் எல்லாம் எடுத்துட்டு அழகான குழந்தைகள் படங்கள் போட்டு பாருங்களேன்..
ReplyDeleteநல்லவைகள் யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்படும்
ReplyDeleteஅன்பின் அவர்கள் உண்மைகள் , எல்லாமே நச்சுன்னு இருந்திச்சி - சூப்பர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஜஸ்ட் ஃபாலோ அப்பிற்காக
ReplyDelete