தமிழக நிலவரமும் நையாண்டி கருத்துகளும்
ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்தால் கிடைக்கும் பலன்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மிக்சர் தின்னு கொண்டிருக்கிறார் என்று தமிழக மக்களால் கேலி செய்யப்பட்ட பன்னீர் செல்வம் இறுதியில் மனமுடைந்து ஜெயலலிதா சமாதியில் 40 நிமிடங்களுக்கு மேல் தியானம் செய்து ஜெயலலிதாவை வழிபட்டார். அதன் பின் ஜெயலலிதாவின் பரிசுத்த ஆவி அவரை ஆசிர்வதித்ததால் அன்று இரவில் இருந்து அவர் தமிழக மக்களால் ஹீரோவாக ஆக்கப்பட்டு புன்னகையுடன் வலம் வருகிறார்.
கலைஞர் மட்டும் நல்ல உடல்நிலையில் இருந்திருந்தால் இந்நேரம் பதவி ஏற்பு விழாவை நடத்திவிட்டு நடிகர் சங்கம் நடத்தும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பார். ஹும்ம்ம்
ஜெயலலிதாவும் சரி கலைஞரும் சரி தாங்கள் இரண்டு பேரும் எப்படி வேண்டுமானாலும் அடிச்சிகிட்டு சாவுவாங்க ஆனால் அவர்களை தவிர வேறு யாரவது புதிதாக தலையெடுத்தால் அவர்களை நசுக்கிவிடுவார் அப்படிதான் ஸ்டாலுனும் சசியும் இருந்திருக்க வேண்டும் ஆனால் இருவருக்கும் அனுபவம் பத்தாது என்பதினால் ஒரு புதிய தலைவர் உருவாகிவிட்டார்...
முன்பு மாமியார் மருமகள் பற்றிய தொடர் சீரியல்களை தமிழக மக்கள் பார்த்து ரசிப்பார்கள் ஆனால் அவற்றை எல்லாம் பின் தள்ளிவிட்டது சசிகலா பன்னீர் செல்வம் நடிக்கும் அரசியல் சீரியல்கள் மக்களை இதை ராப்பகலாக பார்த்து ரசிப்பதோட பல்வேறு விமரசனமும் செய்கிறார்கள்
என்னடா தமிழக மக்கள் திருந்திவிட்டார்களா என்ன? சசிகலா முதல்வராக வேண்டுமென்றுஇன்னும் யாரும் தீக்குளிக்கவில்லையே
பன்னீர் கைவிட்ட பெண் என்று ஏதாவது ஒரு பெண் படத்தை போட்டு யாரும் ஏன் இன்னும் நீதி கேட்கவில்லை. என்ன தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் திருந்திட்டாங்களா?
சிங்கம் 3 பார்த்ததனால்தான் பன்னீர் இப்படி பொங்குகிறாரா?
செய்தி :பன்னீர்செல்வம், சசிகலாவை விட்டு பிரிந்த பிறகு உத்தமர் வேடம் போட முயற்சி செய்கிறார் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆமாம் ஜெயலலிதா உங்களை தூக்கி ஏறிந்த பின் நீங்கள் உத்தமர் வேடம் போட்டது ஐயாவிற்கு ஞாபகம் வந்துடுச்சு போல இருக்கே
ரயில்வே நிலையம் விமான நிலையம் மற்றும் அரசு அலுவலங்களில் உள்ள பொதுக் கழிப்பறையை உபயோகப்படுத்த ஆதார் அட்டை அவசியம் என்ற சட்டம் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை
சசிகலாவிற்கு ஆதரவு தரும் எம்.எல்,ஏக்கள் வீடுகளில் விரைவில் வருமான வரி சோதனை நடத்தப்படும். இதுவரை சம்பாதித்த பணம் விரைவில் பறி போகப்போகிறது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் மக்களிடமும் செல்ல முடியாது பாவம் இருந்தது போச்சு நொள்ள கண்ணா கதைதான்
போனவாரம் மிக்சர் தின்னவர் இந்த வாரம் தமிழகத்தின் ஹீரோ...
அன்புடன்
மதுரைத்தமிழன்
பாவம்பா சசி.
ReplyDeleteசிறப்பாக அலசியுள்ளீர்கள்
ReplyDeleteதங்கள் கருத்தை வரவேற்கிறேன்
இது இப்படி என்றால் ஒரு சிலர் சசிக்கு ஆதரவாக அல்லது முழு ஆதரவு இல்லை என்றாலும் சப்போர்ட்டின் பாயின்ட்ஸ் எடுத்துச் சொல்லி வருகின்றார்களே. என்னவோ போங்க....பேசாம சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் வந்தாத்தான் நல்லாருக்கும்னு தோனுது.
ReplyDeleteகீதா
யோவ் தமிழா... நான் வந்துட்டேன்னு சொல்லு. தமிழ்நாட்ல இருந்து இல்லே தன்மானத் தலைவன் பன்னீர் செல்வத்தின் பிரஜை வந்துட்டேன்னு சொல்லு... முக்யமா அந்த ட்ரம்ப் கிட்ட சொல்லு
ReplyDeleteஏங்க எங்கள பாத்தா உங்களுக்கு பாவமா தெரியலையா
ReplyDeleteஹல்லோ டொனால்ட் டிரம்ப் கிட்ட நாங்க மாட்டிகிட்டு கஷ்டப் படுகிறப நீங்க மட்டும் சந்தோசமா இருக்கலாமா
Deleteம்ம்ம்.... நேற்று கிண்டல் இன்றைக்கு ஹீரோ! :) அனைத்தையும் மறக்கும், அதிவிரைவில் மறக்கும் திறமை உள்ளவர்கள்....
ReplyDelete