Saturday, February 25, 2017



ஆதி யோகி சிவன் சிலை திறப்பும் அதன்விளைவாக  ஏற்பட்ட 'கலக்கல்' சிந்தனைகளும்

இறைவன் பிரமாண்டமான உலகத்தை படைத்தான் என்ற நிலையில் இருந்து இறைவனை ஜக்கி வாசு பிரமாண்டமாக படைத்திருக்கிறார் என்று வரலாறு சொல்லும்

தமிழகத்தில் மத சம்பந்தமான பிஸினஸ் ஒன்றை ஆரமபிக்கலாம் என்று இருக்கிறேன் இன்னும் அழிக்கபடாத காடுகள் வளங்கள் இன்னும் மிச்சம் மீதி இருந்தால் எனக்கு தகவல் தரவும்.

நஷ்டம் அடையாமல் மிக அதிக அளவு லாபம் சம்பாதிக்க கூடிய ஒரு பிஸினஸ் மத சமபந்தப்பட்ட பிஸினஸ்தான் இந்த பிஸினஸிற்கு மட்டும் சட்ட திட்டங்களை பின்பட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை.


சட்டங்களை மீறி செயல்படுத்த படும் பிஸினஸிற்கு பிரதமரை தலைமைதாங்க வைத்துவிட்டால் அது சட்ட அனுமதி பெற்ற பிஸினஸாக மாறிவிடும்

இறைவனிடமும் பாலின இனப்பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. அதனால்தான் பெண் தெயவங்களுக்கு பிரபலமான வழிபாட்டுதடங்கள் இப்போது கட்டப்படுவதில்லை.

சிவனுக்கு பிரமாண்டமான சிலையை எழுப்பி வழிபடுவர்கள் அவரது துணைவியான பார்வதியை கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே...அதனால்தான் மோடி அதற்கு தலைமை தாங்கினாரோ என்னவோ

ஜக்கி வாசுவாக நீங்கள் மாற வேண்டுமா அதுமிகவும் எளிது போர்வையை தோளில் தொங்கவிட்டு ஷேவ் பண்ணாமல் நீங்கள் வலம் வந்தால் நீங்களும் ஜக்கி தேவனே

ஈஷா யோகா மையத்தை எதிர்ப்பவர்கள் காரூண்யாவை மட்டும் எதிர்க்கவில்லை  அது ஏன் என்று கேட்கும் இந்துவா அமைப்புகளே உங்களை காருண்யாவிற்கு எதிராக போராட கூடாது என்று யாரவது கட்டுபாடுவிதித்தார்களா  என்ன?நீங்கள் ஏன் இதுநள் வரை காரூண்யாவை எதிர்த்து  போராட்டங்களை நடத்தவில்லை ? வழக்கு தொடக்கவில்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. உங்க கண்ணை உம்மாச்சி குத்த போகுது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.