சசிகலா சமாதிக்கு சென்றது சபதத்தை நிறைவேற்றவா அல்லது ஆசிர்வாதம் வாங்கவா?
அக்கா நீ வேலைக்காரியாக இருக்கதான் லாயக்கு என்று சொல்லி ஏளனமாய் சிரித்தாயே.. இப்ப பார்த்தியா நான் உங்கிட்ட போட்ட சபதத்தின்படி பொது செயலாளர் ஆகி இப்ப முதலமைச்சாராகவும் ஆக போகிறேன். இந்த ஏமாளிமக்கள் நான் என்னமோ உங்கிட்ட ஆசிர்வாதம் வாங்க வந்த மாதிரி நினைச்சுகிட்டு இருக்காங்க ஆனால் என் சபதத்தில் நான் ஜெயிச்சுட்டேன் என்று உன்னிடம் சொல்லவே உன் சமாதிக்கு வந்து இருக்கிறேன்,
பேசாமல் நூறு பேர் வெள்ளை வேஷ்டி சட்டை போட்டுகிட்டு ஆளுநர்கிட்டபோய் நாங்க பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு என்று சொன்னாலே போதும் ஆளுநருக்கு என்ன எம்/எல்.ஏக்களை அடையாளம்வா தெரியப் போகுது
சசிகலா ஆளுநரிடம் கொடுத்த ஆதரவு கையெழுத்து பட்டியல் போலின்னு சொல்லி அதை விசாரிக்க மேலும் சில நாட்கள் ஆகுமென்று ஆளுநர் சொன்னா நல்லா இருக்குமே
தமிழ் பெண்களை கிச்சனில் இருந்து வெளியேற்றி டிவி பார்த்து கொண்டே பேஸ்புக்கில் அரசியல் பேச வைத்த ஒரு தலைவர் சசிகலாதான் ஹீஹீ
தமிழக ஆண்களே உங்களுக்கு வேளா வேளைக்கு உணவு வாராதற்கு உங்கள் மனைவியை திட்டாதீர்கள் அதற்கு காணம் சின்னம்மாதான் அவரால்தான் உங்கள் மனைவி டிவி முன்னால் உட்கார்ந்து இருக்கிறார்கள்
தமிழக ஆளுனாராக நியா நானா கோபிநாத் இருந்திருந்தால் பன்னீர் செல்வத்தை நன்றாக அழுக வைச்சு இந்நேரம் தீர்ப்பு வழங்கி சட்ட்புட்டுன்னு பரிசையும் கொடுத்து அனுப்பி இருப்பார்
பன்னீர் செல்வம் நம்பி இருப்பது வைக்கோவை மட்டுமே .வைகோ மட்டும் என் ஆதரவு சசிகலாவிற்கு என்று உணர்ச்சிகரமாக ஒரு பேட்டி கொடுத்தால் சசிகலா கதை ஒரு நொடியில் காலி.
சசிகலா முதல்வாராகி காவிரி பிரச்சனை காரணமாக பிரதமரை சந்தித்து அவர் பேச ஆரம்பித்து முடிப்பதற்குள் மோடி உலகத்தை இரண்டு தடவை சுற்றி வந்திடுவார்.
சசிகலாவின் பேச்சு செங்க்கோட்டை பாசஞ்சர் ரயில்விட மிக ஸ்லோவாக போகிறது
சசிகலாவின் பேட்டியை நீயூஸ் சேனல் 18 ல் முழுவதும் பார்த்தவர்களுக்கு உலகின் மிக பெரிய பொறுமைசாலி பட்டத்த கொடுக்கலாம்
தமிழக செய்தி சேனல்கள் BREAKING NEWS யை BREAK இல்லாமல் ஒளிபரப்பி கொண்டிருக்கின்றன
அன்புடன்
மதுரைத்தமிழன்
சசிகலா பேசுவதைக் கேட்க ஆர்வமும் இல்லை. பொறுமையும் இல்லை. நீங்கள் சொல்வதுபோல சபதத்தை நிறைவேற்றி விட்டேன் என்றே சுற்றியிருப்பார்களோ.. இருக்கலாம்.
ReplyDeleteநன்றாகப் புதைத்திருக்கிறோமா
ReplyDeleteஎழ வாய்ப்பில்லையே என
உறுதி செய்து கொள்வதற்காகவும் இருக்கலாம்
சசிகலா!!,, கூகுள் தேவன் சொடக்குப் போடும் நொடியில் கேட்பவர்களுக்கு எல்லாம் கொட்டிக் கொண்டிருக்கிறான். பாப்புலர்!! சரி விடுங்க அப்ப உங்களுக்குத்தான் பரிசு! நீங்க பொறுமையா கேட்டதுனாலத்தானே பதிவு போட்டீங்க...ஸோ உங்களுக்குத்தான் பொறுமைசாலி பரிசு. அதுல ஷேர் சசிகலாவுக்கும் வேணுமாமே!!!ஹிஹிஹி
ReplyDeleteகீதா
பொதுவாகவே டி.வி. பார்ப்பதில்லை. இணையத்தில் உலவும்போதும் தமிழக அரசியல் மட்டுமே இருப்பதனால் இணையத்தில் உலவுவதும் குறைந்திருக்கிறது! :) முகப்புத்தகம் முழுவதும் சசிகலாவும் பன்னீரும் தான்!
ReplyDelete