Wednesday, February 15, 2017

நீதிபதி குமாரசாமி மீது நீதி விசாரணை கண்டிப்பாக ஏன் தொடுக்கப்பட  வேண்டும்


அளவீற்கும் அதிக மாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா மற்றும் சசிகலா & குடும்பதினர் மீது வழக்கு பதிந்து வழககு விசாரணை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு குற்றவாளி என்று குன்கா அவர்கள் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பு தவறனாது என்று அதை மேல் முறையீடு செய்த போது அதை விசாரித்த குமாரசாமி இவர்கள் குற்றமற்றவர்கள் என்று மறு தீர்ப்பு வந்தது

இந்த குமாராசாமியின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்ட போது அதை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்   குன்காவின் தீர்ப்பு மிகவும் சரிதான் என்று உறுதிபடுத்தி தீர்ப்பு வழங்கியது


இந்த நிலையில் குமாரசாமியின் தீர்ப்பை பார்க்கும் போது அவர் ஒரு தலைபட்சமாக , ஒழுங்காக பொறுப்பு இல்லாமல் ஏனோதானோ என்று  ஒரு முக்கிய வழக்கை கையாண்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது மேலும் அவர் அப்படி தீர்ப்பு வழங்க கையூட்டம் பெற்று இருக்கலாமோ என்ற சந்தேகம் வருகிறது. இப்படி ஒரு முக்கிய வழக்கையே அவர் கவனம் செலுத்தாமல் விசாரித்து நீதி வழங்கிய அவர் மற்ற வழக்குகளில் எப்படி பொறுப்பாக செயல்பட்டு தீர்ப்பு வழங்கி இருக்க முடியும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவது இயல்பே

இப்படி ஒரு பொறுப்பு அற்றவரை நீதிபதியாக வைத்திருப்பது நீதி துறைக்கு இழிவு என்பதோடு சரியான நீதி மக்களுக்கு கிடைக்காது என்பது உறுதியாகிறது நல்லவேளை இவர் எந்த வழக்கையும் விசாரித்து குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை தரவில்லை. அப்படி தந்து யாரவது தூக்கில் இடப்பட்டு இருந்து, அந்த வழக்கை மீண்டும் விசாரித்தால், அந்த தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளி, குற்றவாளி இல்லை என்று அறிவிக்கப்படுமானல் போன உயிரை மீட்டு கொண்டு வர முடியுமா என்ன?


எப்படி ஒரு டாக்டர் தவறான சிகிச்சை அளித்து. அதனால் நோயாளி பாதிக்கப்பட்டால் அந்த டாக்டரை விசாரித்து கோர்ட் தண்டனை தரும். அது போலத்தான் இந்த நீதிபதியையும் கோர்ட் விசாரித்து தண்டனை தரவேண்டும் அதுதான் நியாயம்.


இதை இந்திய கோர்ட் செய்யுமா? மக்களும் இதற்காக போராடுவார்களா? அல்லது ப்ரேக்கிங்க் ந்யூஸை மற்றும் படித்து சமுகவலைதளங்கில் ஸ்டேடஸ் மட்டும் போட்டுவிட்டு போவார்களா?


கோர்ட் ஒரு வழக்கை விசாரிக்க இருபது ஆண்டுகள் ஆகி இருக்கின்றன மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு இருக்கின்றன து மட்டுமல்லாமல் குமாராசமி போன்றவர்களின் தவறான தீர்ப்பால் குற்றவாளி ஒருவர் நாட்டை ஆண்டுவிட்டு மக்கள் வரிபணத்தில் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று தண்டனையை சிறிது கூட அனுபவிக்காமல் இந்த உலகை விட்டு சென்று இருக்கிறார் என்பது மிகவும் கேவலத்திற்குரியது


தாமதிக்கப்பட்ட நீதியும் சிகிச்சைகளும் என்றும் யாருக்கும் பயன் அளிக்காது


அன்புடன்
மதுரைத்தமிழன்
15 Feb 2017

9 comments:

  1. திரு குமாரசாமி எப்படி இவற்றைப் படித்தும் கருத்தில் கொள்ளாமல் போனார் என்பது போல ஏதோ கேள்வி ஒன்று இருந்தது தீர்ப்பில் என்று நினைவு. இது மாதிரி விஷயங்களில் ஏதாவது சொன்னாலும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும் சாத்தியக்கூறுகள். ஒன்று யாராவது பொதுநல வழக்குப் போல போடவேண்டும்.. அல்லது நீதிமன்றமே முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நீதி மன்றம் நிச்சயமாக அவரை அழைத்து விசாரணை செய்ய வேண்டும் இது போல எத்தனை வழக்குகள் அவரால் தவறாக தீர்ப்பு கூறப்பட்டிருக்கும் அதனால் பாதிகப்பட்ட குடும்பங்களுக்குதானே அந்த வேதனை புரியும்

      Delete
    2. யெஸ் வழிமொழிகிறோம். இரு கருத்துகளையும். அதே சமயம் நீதிபதி குமாரசாமி போல வேறுநீதிபதிகள் இருப்பார்களா? ஏனென்றால் நமக்குத் தெரிந்தே இன்னும் சரியான தீர்ப்பு எழுதப்படாமல் பல நிலுவையில் இருக்கின்றனவே! மத்தி மற்று மாநிலங்களில்

      கீதா

      Delete
  2. எனக்கும் இப்படித்தான் தோன்றியது !வருமானத்துக்கு அதிகமாக நீதிபதி குமாரசாமி சம்பாதித்து உள்ளாரா என்பது விசாரிக்கப் படவேண்டும் :)

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதாவிற்கு இவர் தீர்ப்பு கூறிய நாளில் இருந்து இன்று வரை அவருக்கு வந்த வருமானத்த வருமான அதிகாரிகல் சோதனை செய்ய வேண்டும்

      Delete
  3. நீங்கள் சொல்வது மிகச் சரி
    அவரால் எவ்வளவு கால விரயம், பணவிரயம்
    நிச்சயம் விசாரிக்கப்படவேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இளைஞர்களும் சமுகநல ஆர்வம் கொண்ட பொதுமக்களும் நிச்சயம் போராடி இதில் அடங்கி இருக்கும் உண்மையை வெளிக் கொணர வேண்டும்

      Delete
  4. நச் பதிவு! என் மனதில் எழுந்த அதே கேள்விகள்! அதே கருத்துகள்.ஓரிரு தளங்களில் பதிந்திருந்தேன் இத்தனை வருடங்களாக இதே வழக்கு நடந்தது ஆனால் இப்போது இவ்வளவ்ர் சட்டென்று தீர்ப்பு வழங்கப்படுமாயின் ஏன் இதற்கு முன்னரே அந்தத் தீர்ப்பு வழங்க முடியாமல் ஆனது அப்போ நீதித்துறையிலும் ஊழல் மற்றும் யார் எப்படி எழுதச் சொல்லுகிறார்களோ அப்படித்தானே தீர்ப்பு என்பது மக்களுக்கு எப்படி நீதித் துறையில் நம்பிக்கை வரும். சட்டம் ஓர் இருட்டறை என்பது எவ்வளவு உறுதியாகிறது??!!

    சரி இப்போது எல்லோரும் சொல்லுவது போல் உறங்கிக் கிடந்த நீதி விழித்தெழுந்துள்ளது என்பது மத்திக்கும், எல்லா மாநிலத்திற்கும் பொருந்தும் தானே? அப்படியேனும், "ஜி" வழக்கும், எல்லா "ஜி"க்களின் மீதான வழக்குகளும் உயிர்பெற்று, இது வரை தப்பித்தவர்கள், ஓடி ஒளிந்துள்ளவர்கள் எல்லோருக்கும் தீர்ப்பு வழங்கப்படுமா? இல்லை மீண்டும் நீதி ஹபெர்னேஷனுக்குப் போய்விடுமா? ஏனென்றால் நீங்கள் சொல்லும் மக்களின் வரிப் பணம், இன்னும் பலரின் வழக்குகளில் வீணாகிக் கொண்டுதான் இருக்கிறது.

    சிவப்பு வரிகள் நச்

    கீதா

    ReplyDelete
  5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதியும் தண்டனை பெறக் கூடாது என்பதாய் நினைத்து விட்டாரோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.