Wednesday, January 4, 2017




பல்கலைகழக பேராசிரியரான .ராமசாமி  அவர்கள் எழுதி வெளியிட்ட ஆள்காட்டி விரலின் அரசியல் என்ற பதிவு தமிழகத்தின் இன்றைய இரு பெரிய அரசியல் கட்சியின் செயல்பாட்டை தோல் உரித்து சொல்லி இருக்கிறார். மிகவும் மாறுப்பட்ட கோணத்தில் சிந்தித்து வெளியிட்ட பதிவு என்னை கவர்ந்தது அதனால் அவரின் அனுமதியுடன் இங்கே வெளியிட்டு இருக்கிறேன்...ராமசாமி அவர்களுக்கு எனது நன்றிகள்



ஆள்காட்டி விரலின் அரசியல்


தமிழ்நாட்டின் அரசியல் சமூகப் பொருளியல் பண்பாட்டுத்தளங்களின் இருப்புபற்றி இவ்விரு கட்சிகளுக்கும் வேறுபாடுகள் இல்லை.

இப்படி இருக்கும் தமிழகத்தை எப்படி மாற்றவேண்டும் என்பதைப் பற்றிய பார்வையிலும் வேறுபாடுகள் இல்லை.


மாற்றத்தைச் செய்யும்போது சந்திக்கும் தடைகள், அத்தடைகளை உருவாக்கும் எதிர்நிலைகள் பற்றியும் வேறுபாடுகள் இல்லை.

இரண்டும் தொடங்கிய இடம் ஒன்றுதான். இரண்டின் பேரமைப்புகளிலும் சிற்றமைப்புகளிலும் வேறுபாடுகள் இல்லை.

தேர்தலை அரசியலைச் சந்திக்கும் முறைகளிலும் இரண்டு கட்சிகள் பின்பற்றும் நடைமுறைகள் ஒன்றுதான்.
பிறகெப்படி இவ்விரு கட்சிகளும் எதிரிகள்? எதிர்மைகள்?

அதிமுகவிற்குத் திருமதி சசிகலாவும், தி,மு..விற்குத் திரு மு..ஸ்டாலின் அவர்களும் தலைமையேற்ற நிலையில் அரசியல்களம் போட்டிக்குத் தயாராகிவிட்டதாக நம்பத் தொடங்கிவிட்டோம். அவர்களும் ஒருவரையொருவர் எதிரியெனச் சுட்டிக்காட்டி அறிக்கைவிடத் தயாராகிவிட்டனர்.
ஜல்லிக்கட்டு நின்றுபோனதற்கு யார் காரணம்?
தஞ்சை விவசாயம் அழிந்ததற்கு யார் காரணம்?
இப்படியான கேள்விகளுக்குப் பதிலாக அடுத்தவரைச் சுட்டிக்காட்ட ஆள்காட்டிவிரலைப் பயன்படுத்துகிறார்கள். நீதான் காரணம்; நானில்லை. நான் காரணம் இல்லை; நீயே காரணம் எனச் சுட்டிக்காட்டிப் பேசும் பேச்சே அரசியல் பேச்சாகிவிட்டது. நீயிக்கும் நானுக்குமான அரசியல் பிம்ப அரசியல்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராகியிருக்கும் திரு மு..ஸ்டானின் வளர்ச்சிக்கு அவரது அரசியல் அனுபவம் மட்டுமே பயன்பட்டது என்று சொல்லமுடியாது. கடந்த தேர்தலைச் சந்திக்க அவருக்குப் பயன்பட்ட பிம்ப உருவாக்கத்தின் பின்னால் நவீனத்தொழில் நுட்பம் ஆழமாகப் பயன்பட்டது. இப்போது அதையே
சசிகலாவின் பிம்பத்தை உருவாக்க நினைப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். அவரது காட்சிகளும் பேச்சுகளும் கவனிக்கப்பட வேண்டியவை.
இருவரது அரசியலும் காட்சி அரசியல்; பிம்ப அரசியல். .தி.மு..X தி.மு.: எதிர்மைகள் இல்லை; ஒன்றுதான்

இதிலிருந்து தமிழகம் விடுபடும் சாத்தியங்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பதிவு எழுதியவர் .ராமசாமி



அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு : வழங்குபவர் உங்கள் மதுரைத்தமிழன்

ஸ்டாலின் செயல் தலைவர் என்று திமுக பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் மூலம் இன்று முதல் கலைஞர் செயல்படாத தலைவாரக ஆகிவிட்டார். அதாவது உப்புக்கு சப்பாணியாகிவிட்டார்

@mkstalin கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுகிறது: ஸ்டாலின் ///   ஸ்டாலின் சொல்ல மறந்தது தலமை எனக்கு தேவைப்படுகிறது என்று

 @mkstalin சூழ்நிலை என்னை செயல் தலைவராக்கிவிட்டது: ஸ்டாலின் /////  ஸ்டாலின் தனது அயராத உழைப்பால்தான் இந்த பதவி தனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லி பெருமை கூட அவரால் முடியவில்லையா என்ன?

8 comments:

  1. அருமையான பகிர்வு தமிழா..எல்லாம் நாடகம்...

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. நிறைய நாடகங்கள் தமிழ்நாட்டின் அரசியல் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!! பதிவர் சொல்லியிருப்பது போல் இவை இரண்டின் பிடியிலிருந்து விடுபடும் சாத்தியம் இல்லைதான்...தமிழ்நாட்டின் சாபக்கேடு.

    ReplyDelete
  3. எதிர் தரப்பில் இருக்கும் சின்ன அம்மையாரை விட, நம்ம இளைய தளபதிக்கு அரசியல் அனுபவம் அதிகம் அல்லவா நண்பரே? நிறைய பாலம் கட்டினார்; பூங்காக்கள் அமைத்தார்; வேளச்சேரி நாலுவழிச் சாலை, ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுர நால்வழிச் சாலை இதெல்லாம் அவரது பங்களிப்புதானே! 2 ஜி வழக்கில் சிறைக்குப் போகாதவர் அல்லவா? ....
    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete
  4. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்

    ReplyDelete
  5. அவர்களின் பலம் அவர்களுது கட்டமைப்பு ...
    பலமான கட்டமைப்பை அமைத்து காப்பது என்பதை நோக்கி நகரும் யாரும் இன்னொரு ஆறு ஆண்டில் அடையக்கூடிய இலக்குதானே இது..

    உண்மையில் இதைபோன்று சிந்திக்காத
    இதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிற சூழல்தானே நம்மை கையறு நிலைக்குத் தள்ளுகிறது

    ReplyDelete
  6. hi machaan
    why late where is the next post

    ReplyDelete
  7. எல்லாம் நாடகம்...
    நாமெல்லாம் எப்பவும் தலையாட்டிகளாய்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.