Tuesday, January 17, 2017


avargal unmaigal
அலங்காநல்லூர் போராட்டகாரர்களுக்கு ஆதரவாக  வர அரசியல் தலைவர்களுக்கு மனம் இல்லையா?


அலங்காநல்லூரில்  நடை பெறும் ஜல்லிகட்டு போராட்டாத்திற்கு தலைவர்கள் ஆதரவு இல்லை போலிருக்கிறதே முக்கியமாக ஸ்டாலின் திருநாவுகரசு தமிழிசை?
மதுரைத்தமிழன் பதில்: அலங்காநல்லூருக்கு சென்று போராட்டகாரர்களுக்கு ஆதரவு தராமல சென்னையில் இருந்து கொண்டே பேட்டி தரும் தமிழக அரசியல் தலைவர்களை இனம் கண்டு கொண்டு அவர்களை புறக்கணிக்க கற்றுக் கொள்ளுங்கள். போராடும் உங்களுக்கு துணை நிற்காதவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் உதவ முன் வரமாட்டார்கள்
#AmWithAlanganallur #supportjallikattu


கேள்வி: சுப்ரீம் கோர்ட் என்பது வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல; எங்கள் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது பற்றி?
மதுரைத்தமிழன் பதில் :தீர்ப்புக்கள் காமெடியாக ஆகும் போது அதை ஜோக் கோர்ட்டாகத்தான் ஆகிறது அது உங்களுக்கு புடிக்கவில்லை என்றால் பதவியை ராஜினமா செய்துவிட்டு வடிவேலை அங்கு அமர்த்துங்களேன்


கேள்வி: அலங்காநல்லூரில் தடியடி பற்றி உங்கள் கருத்து என்ன?
மதுரைத்தமிழன் பதில் : மாடுகளை துன்புறுத்துகிறார்கள் என்பது மாறி மனிதர்களையும் துன்புறுத்த ஆரம்பித்துவிட்டது இப்போதைய மாநில மற்றும் மத்திய அரசுகள்
#AmWithAlanganallur #supportjallikattu


கேள்வி அலங்கானல்லூரில் போராடும் மக்களுக்கு குடிநீர் உணவு வழங்குவதை தடை செய்துள்ளதாம் போலீஸ் ?
மதுரைத்தமிழன் பதில் : சின்னம்மாவின் ஆர்டரை நிறைவேற்றுவதுதானே போலீஸாரின் செயல்.
#AmWithAlanganallur #supportjallikattu


ஏன் ஓ.பி.எஸ்ஸின் அரசு ஜல்லிகட்டை  இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டிருக்கிறது..?
மதுரைத்தமிழன் பதில் :பன்னீர் செல்வத்தை டம்மியாக்கவே போலீஸ்  இந்த அளவுக்கு இரும்புக் கரம் கொண்டு தடுக்கிறது அதுவொன்றும் நாட்டையே அழிவுக்குக் கொண்டு செல்லும் விஷயமில்லை என்றாலும்  சின்னாமாவின் திட்டமாக இது செயல்படுகிறது இப்படி செய்வதன் மூலம் பன்னீர் மேல் மக்களுக்கு வெறுப்பு ஏற்ற செய்யப்படுகிறது, பாவம் பன்னீர் இப்போது பலி ஆடாக மாட்டிக் கொண்டிருக்கிறார்


அலங்காநல்லூரில் மக்கள் நடத்து போராட்டம் பற்றி?


மதுரைத்தமிழன் பதில் : தமிழகத்தில் எப்போது மாற்றம் வந்தாலும் அதில் மதுரையின் பங்கு சற்று அதிகம் அது இப்போது ஜல்லிகட்டு வடிவில் வந்து இருக்கிறது#AmWithAlanganallur #supportjallikattu


தமிழக பாஜக தலைவர்களின் நிலை எப்படி இருக்கிறதது?
மதுரைத்தமிழன் பதில் : ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சுக்கு செவி சாய்க்கும் மோடி அதில் ஒரு சதவிகத்தை கூட பொன்.ராதாகிருஷ்ணனுக்கோ,  ஹெச்.ராஜா  மற்றும் தமிழிசையின் பேச்சுக்கோ செவி சாய்பதில்லை


மோடியின் திட்டங்கள் எப்படி இருக்கின்றன?மதுரைத்தமிழன் பதில் :மோடி ஆட்சியில் அவர் போடும் திட்டங்கள் எல்லாம் சந்தி சிரிப்பவையாக மட்டும் இல்லாமல் அவர் ஆட்சி காலத்தில் நீதிபதிகளின் தீர்ப்புகளும் சட்டங்களும் சந்தி சிரிக்கின்றன


கொசுறு : வங்கிகளில் பத்தாயிரம் எடுக்கலாம் மோடி அரசு சட்டம் ஆனால் உங்கள் பணம் வங்கியில்  டெபாசிட் பண்ணி இருந்தாலும் வங்கிக்கு ரிசர்வ் பேங்க்  தேவையான அளவு பணம் அன்ப்பி இருந்தால்தானே எடுக்க முடியும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. அரசியல் தலைவர்கள் வராதவரை வீரியத்துடன் கூடிய போராட்டமாக இருக்கும். அந்த விசர்நாய்கள்(I'm sorry for the language) உள்ளே நுழைத்தால் போராட்டம் அரசியலாகிவிடும்.

    ReplyDelete
    Replies

    1. உங்களின் கோபம் புரிகிறது நண்பரே

      Delete
  2. அண்ணே.. உங்கள மாதிரி வெளிநாட்டு ஆளுங்க, இந்தியாவைக் காப்பத்தறேன்னு, மிருகத்தை காப்பாத்தறேன்னு ஆரம்பிச்சு செய்யற தொல்லைன்னால தான், ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. போதும்.. நீங்களும் உங்க அக்கறையும். இந்தியா வேணாம்னுதானே அமெரிக்காவில குடியுரிமை வாங்கினீங்க.. செட்டில் ஆனிங்க.. அப்புறம் எதுக்கு இந்தியா பத்தி கவலை? உங்க போதைக்கு இந்தியாதான் ஊறுகாயா?

    "ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
    (உங்களைப் போன்ற) அன்னியர் வந்து புகல் என்ன நீதி?"

    ReplyDelete
    Replies
    1. நான் அன்னிய நாட்டு குடியுரிமை பெற்றாலும் நான் தமிழண்டா? அது புரிஞ்சுக்கோ தம்பி

      Delete
    2. நீங்க அமெரிக்கர். ஆனா, தமிழர்.
      அட.. அட.. அண்ணே.. அரசியல்வாதிகள் தோத்தாங்க போங்க..

      Delete
    3. இலங்கை மலேசிய சிங்கப்பூர் ஆஸ்திரேலியா கனடா சுவிஸ்சர்லாண்ட் இங்கிலாந்து போன்ற நாட்டு குடியுரிமை பெற்ற தமிழர்களை தமிழனாக பார்க்கும் போது அமெரிக்க குடியுரிமை பெற்றவர் மட்டும் தமிழனாக இருக்க முடியாதா அல்லது கூடாதா கொஞ்சம் சிந்திச்சு பதில் சொல்லுங்க அதுக்கு அப்புறம் அரசியல் வாதி தோத்துட்டான போன்ற கமெண்ட் போடுங்க சகோதரரே அப்புறம் கூகுல் நிறுவன் தலைவராக பிச்சை முத்து வந்தது அப்புறம் ஏன் தமிழன் அமெரிக்க கம்பெனியை தலைமை தாங்கி நடத்துகிறான் இந்திரா நூயி என்ற தமிழச்சி பெப்ஸிக்கு தலமை தாங்கி நடத்துகிறால் என்று பெருமை பேசுறீங்க அவங்க என்னைப் போல அமெரிக்க குடியுரிமை வாங்கி இங்கே வாழ்பவர்கள் தானே. யோசிங்கப்பு யோசிங்க

      Delete
    4. ஜல்லிகட்டு தடை பெற்றதற்கு அமெரிக்கனை குறை சொல்ல வேண்டாம் அதற்கு நீங்கள் தேர்தெடுத்த பிரதமரையும் சட்டத்தை நிலைநாட்டும் நீதிபதிகளையும் குற்றம் சொல்லுங்கள் இந்தியாவிற்கான சட்டங்கள் அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.