Thursday, January 12, 2017



இன்று நம்மில் பலரது நிலைமை இப்படிதான் இருக்கிறது

ஒரு சிறு குருவிக்கு  ஒரு அழகிய கனவு வந்தது.  கனவில் மிக அழகான ஒரு உலகம் தெரிந்தது.

இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததில்லை.  , அழகான நதிகள், மரங்கள்,   செடி கொடிகள் எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சி என்று அந்த அற்புத உலகம் மயக்கியது.எப்படியாவது அந்த உலகத்துக்குப் போயே ஆக வேண்டும்.  அந்த சந்தோஷங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்று அந்த குருவி விரும்பியது.ஆனால் போகும் வழிதான் அதற்குத் தெரியவில்லை.

அது பறந்து போகும் போது ஒரு பிரபல ஜோதிடரைப் பார்த்தது..காலத்தையெல்லாம் கணிக்கும் ஜோதிடருக்கு அந்த அற்புத உலகத்துக்கான வழி தெரியாதா என்ன.  அவரிடம் குருவி வழி கேட்டது.எனக்கு முழு விபரம் தெரியாது.  தெரிந்த வரை சொல்கிறேன்.அதற்கு விலையாக நீ உன் றகுகளில் ஒன்றைத் தர வேண்டும் என்றார் ஜோதிடர்.


ஒரேயோரு றகுதானே என்று குருவியும் சரி என்றது.  குருவி அவர் சொன்ன வழியில் பறந்து சென்றது. குறிப்பிட்ட இடத்துக்கு மேல் அது வழி தெரியாமல் திகைத்து நிற்க,அந்த வழியே ஒரு பாம்பு வந்தது.  பாம்பிடம் குருவி தன் கனவு பற்றி சொல்லி, அந்த உலகத்தின் சந்தோஷங்களை அனுபவிக்க நான் அங்கே போகிறேன்.  எனக்கு வழி காட்டேன் என்றது.

பாம்பு  இங்கிருந்து அந்தப் பகுதிக்குச் செல்லும் வழி ஓரளவுக்குத் தான் எனக்குத் தெரியும்.  சொல்கிறேன்.பதிலுக்கு நீ எனக்கு என்ன தருவாய்.  உன் அழகான றகில் ஒன்றைத் தந்து விடு என்றது. இன்னொரு றகுதானே, தந்தால் போச்சு என்று குருவியும் சம்மதித்தது.பாம்பு சொன்ன பாதையில் குருவி பயணிக்க, அதுவும் ஓரளவுக்குத்தான் போக முடிந்தது.  அதற்குப் பிறகு வழி தெரியவில்லை.

இப்படியே அந்தக் குருவி, அங்கங்கே இருந்த சிலரிடம் வழி கேட்டு கேட்டு பறந்தது.அவர்களும் வழி சொல்லிவிட்டு குருவியிடம் இருந்து ஒரு றகை விலையாக கேட்டார்கள்.குருவியும் அந்த அற்புத உலகின் சந்தோஷங்களை அனுபவிக்கப் போகும் ஆசையில் வழி சொன்னவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு றகாக பிய்த்துக் கொடுத்தபடி சென்றது.

முடிவாக, அதோ....கனவில் கண்ட அந்த அழகான உலகம் அதன் கண் முன் தெரிந்தது.வந்து விட்டோம்.....வந்தே விட்டோம்......இன்னும் சில நூறடி தூரம் பறந்தால் அந்த அற்புத உலகம்.குருவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ஆனால், இதென்ன....ஏன் என்னால் பறக்க முடியவில்லை. ஐயோ, என் உடம்பெல்லாம் கனக்கிறதே.  கீழே இருந்து காற்றில் எழும்பவே முடியவில்லையே என்று கதறியது.

மெல்ல மெல்ல குருவிக்குப் புரிந்தது.  பறப்பதற்கான றகுகள் தன்னிடம் இப்போது இல்லை என்ற உண்மை விளங்கியது.குருவியால் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதோ கண் முன்னே தான் கனவில் கண்ட அந்த அற்புத உலகம். ஆனால் அதை அனுபவிக்க முடியாமல் கீழே கிடக்கிறேன். அந்த சோகமும் ஏக்கமும் தாங்க முடியாமல் எட்டாத உயரத்தில் தெரியும் அந்த மாய உலகின் வாசலை பார்த்தபடியே பரிதவித்துக் கொண்டிருந்தது. அந்தக் குருவி.



இன்று நம்மில் பலரது நிலைமை இப்படிதான்  இருக்கிறது நவீன ஆடமபர வசதிகளே சந்தோஷம் என்று கருதி வீடு கார் பைக் ஆடம்பர விழா என்றுமாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்று நம் நான் கஷ்டங்களை அனுபவத்து எதிர்காலங்களில் மிக சந்தோஷமாக இருப்போம் என்று நினைத்து நிகழ்காலத்தில் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் குடும்பத்துடன் வெளியே செல்வது, பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது, பிடித்த புத்தகம் படிப்பது, பிடித்த படம் பார்ப்பது, பிடித்த கோவிலுக்கு போவது, பிடித்த உடை உடுத்துவது, பிடித்த உணவு உண்பது என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசிக் கொண்டு டிவி ஸ்மார்ட் போன், பேஸ்புக் டிவிட்டர்  என்பதில் மூழ்கி .கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது வயதாகி உடலும் மனசும் தளர்ந்து போய்   எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைதான் ஏற்படுகிறது.

 அதனால் மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை என்பதை நாம் முழுமையாக உணர்ந்து அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும்தான் இருக்கிறது என்று நினைத்து.  ஒவ்வொரு நிமிடத்தையும் குடும்பதினருடன் சேர்ந்து அனுபவித்து வாழ்வோம்."

அன்புடன்
மதுரைத்தமிழன்
இணையத்தில் படித்ததில் பிடித்தது
12 Jan 2017

5 comments:

  1. இந்த நீதிக்கதை மிகவும் அருமை. அதுதான் உண்மை.

    உண்மையான மகிழ்ச்சி என்பது நம்மிடம் உள்ள வசதி வாய்ப்புகளில் இல்லவே இல்லை. நம் மனதின் திருப்தியில் மட்டுமே அது ஒளிந்துகொண்டுள்ளது. இன்று நம்மிடம் இருப்பதைக்கொண்டு + கண்டு, மகிழ்ந்து திருப்தியுடன் வாழ முயற்சிப்போம்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கதை முன்பு கேட்டிருக்கிறேன்....
    தாங்கள் சொல்லியிருப்பது உண்மையிலும் உண்மை....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. அருமையான கதை தமிழா! இதை ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் வாசிக்க இங்குப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! உண்மைதான் உங்கள் சிவப்பெழுத்துக்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பறவைகளுக்கு இருப்பது இரண்டு சிறகுகள். இறகுகள் என்ற வார்த்தை பொருத்தமானது.
    கதை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அறிவுரைப்படி மாற்றிவிட்டேன் சுட்டிக்காட்டியதற்கு நன்றி

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.