Wednesday, February 11, 2015


 
@avargal_unmaigal

ஒரு மனைவியின் "அந்தரங்க' டைரி

இன்றைய இரவு பொழுதில் எனது கணவரின் செயல்பாடுகள் மிக விநோதமாக இருக்கின்றன.  அதனால் இன்று முழுவதும் நடந்த செயல்களை நினைத்து பார்க்கிறேன். காலையில் என் கணவர் ஆபீஸுக்கு போகும்  இன்றைய இரவு உணவு  ஹோட்டலில்தான் என்று  அதற்கு அவரும் சம்மதம் சொல்லி சென்றுவிட்டார்,அவர் வேலைக்கு சென்றதும் குளித்துவிட்டு தோழிகளுடன் ஷாப்பிங்க் சென்றுவிட்டு மணியை பார்த்தால் இரவு ஏழு ஆகிவிட்டது ஒ... அவர் நாம் சொன்ன   ரெஸ்டாரண்டிற்கு வந்து காத்து இருப்பாரே நாமோ லேட் அவர் என்ன சொல்லப் போகிறறோ என்று நினைத்து அவருக்கு இன்னும் அரை மணிநேரத்தில் அங்கு வந்துவிடுவேன் என்று டெக்ஸ்ட் அனுப்பிவிட்டு அங்கு சென்றேன்.


அவர் நான் லேட்டாக வந்ததற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டார். அந்த சூழ்நிலை மனதிற்கு கஷ்டம்கொடுத்ததால் என்னங்க நாம் பீச்சிற்கு போய் காலாற நடந்தவாறே பேசலாமா என்று கேட்டேன். அதற்கும் அவர் சம்மதித்தார். அங்கு சென்றும் நான்தான் பேசிக் கொண்டே இருந்தேன் ஒழிய அவர் ஏதும் பேசாமல் மெளனமாகவே வந்தார்.

உடனே  என்னங்க நான் ஏதும் தப்பு பண்ணிடேனா? ஏன் நீங்க இவ்வளவு அப்செட்டாக இருக்கிறீங்க? நான் ஏதும் தவறாக சொல்லி இருந்தால் என்னை மன்னிச்சுடுங்க என்றேன் .அதற்கு அவர் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்னார். நான் உடனே ஐ லவ் யூ என்று சொன்னேன், வழக்கமாக பதிலுக்கு ஐ லவ் யூ டூ என்று சொல்லும் அவர் ஒன்றும் சொல்லாமல் ஸ்மைல் மட்டும் பதிலுக்கு செய்தார்.

அதன் பின் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம் அவரை நான் இழந்தது போல உணர்ந்தேன் அவருக்கு என்மேல் கொஞ்சம் கூட இன்ரெஸ்ட் இல்லாதது போல இருந்தது. அது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது அவர் வீட்டிற்கு வந்தத்தும் டிவியை ஆன் செய்து  அதனை பார்க்க ஆரம்பித்தார்.

அதன் பின்  நான் குளித்துவிட்டு அவருக்கு மிகவும் பிடித்த ஸீத்ரு நைட்டியை போட்டு அவர் முன்னால் வந்து நின்று உங்களுக்கு குடிக்க டீ வேண்டுமா என்று கேட்டேன். ஒகே என்று தலையாட்டினார். அவருக்கு சூடான டீ போட்டு  கொடுத்தேன். அதை வாங்கிய அவர் தாங்க்யூ என்று கூட சொல்லாமல் அமைதியாக டீவியை பார்க்கலானார்.

நான் பேசாமல் குட்நைட் என்று சொல்லி பெட் ரூமிற்கு சென்று படுத்தேன். 15 நிமிடம் கழித்து வந்த அவர் டைரியில் ஏதோ எழுதிவிட்டு படுத்தார். நான் அவரை அணைத்து தூங்க சென்றேன் அவரோ என் கையைவிலக்கிவிட்டு தூங்கிவிட்டார்.

அதன் பின் என் கண்களோ குளமாகின. எனக்கு என்ன செய்வது என்று கூட புரியவில்லை. ஒன்றுமட்டும் புரிந்தது அவருக்கு வேறு ஏதோ சிந்தனைகள். என்னை மறக்கும் அளவிற்கு. அப்படி நான் வேண்டாதவளாக ஆகிவிட்டதற்கு என்ன காரணம் என்று கூட புரியவில்லை. வேறு எந்த பெண்கூட அவருக்கு புதிதாக காதல் மலர்ந்துள்ளதோ என்று மனம் பதபதைத்து. அதன் பின அழுதவாறே அப்படியே தூங்கி போனேன்.

அடுத்த நாள் காலையில் நான் எழுவத்ற்கு முன்னால் அவர் எழுந்து ஆபிஸிற்கு சென்று விட்டார்.

அவர் சென்ற பின் கண்முழித்த நான் மிகவும் வேதனையுடனும் மனவருத்ததுடனும் இருந்தேன். அதன் பின் தான் ஞாபகம் வந்தது இரவு படுக்கும் முன் அவர் டைரி எழுதியது. அதில் அப்படி என்ன எழுதி இருக்கிறார் என்று நினைத்து திறந்து பார்த்தேன் .அதில்  அவர் ஒரே ஒரு வரிதான் எழுதியிருந்தார். அது கீழே.


கணவரின் டைரியில் :
இந்தியா இன்று நடந்த கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தழுவியது புல் ஷீட்!!!!!!!!
அல்லது
மோடி டில்லியில் தோல்வி

( இதில் உங்களுக்கு எது பிடித்ததோ அதை  செலக்ட் செய்து படித்து கொள்ளுங்கள் )


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : நான் ஆங்கிலத்தில் படித்த துணுக்கை என் வழியில் மாற்றி இங்கு பதிவாக இட்டு இருக்கிறேன் படித்து ரசிக்க அல்லது தலையில் அடித்து கொள்ள

11 Feb 2015

8 comments:

  1. இதுக்கு பூரிக்கட்டை எல்லாம் பத்தாது.. அம்மிக்குழவிதான் சரியா வரும்....

    ReplyDelete
  2. மேலே சொல்லியிருக்காரே அது ரொம்ப சரி....

    ReplyDelete
  3. இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வந்த பின்னாடி செத்தாண்டா சேகரு....

    ReplyDelete
  4. ஹா... ஹா...
    அன்னைக்குச் சாயந்தரம் பூரிக்கட்டை ரெடியா இருந்திருக்குமே...

    ReplyDelete
  5. ஒரு செய்தியை அட்டகாசமான சிறுகதையாக்கிட்டீங்களே . சூப்பர்

    ReplyDelete
  6. எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டீர்கள். என்னவாகத்தான் இருக்கும் என எதிர்பார்த்து ஏமாந்தோரில் நானும் ஒருவன்.

    ReplyDelete
  7. பூரிக்கட்டை கேரண்ட்டி!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.