Monday, February 23, 2015



avargal unmaigal
எனது கிறுக்கல்கள் (விஜய் டிவியினரின் கவனத்திற்கு)


விஜய் டிவியிலே ஒரு புரோகிரோமில் அல்லது சீரியலில் நடிப்பவர்களையே மற்ற புரோகிரோமில் மீண்டும் மீண்டும் நடிக்க வைக்கிறீங்களே ஆனால் கோபிநாத் மனோ, சித்ரா சுபா, ராதா,ப்ரியங்கா மற்றும் கிச்சன் ப்ரோகிராம் ஜட்ஜுக்களை மட்டும் கண்டுக்கவே மாட்டேன் என்கீறீர்களே அது நியாமா?


முடிஞ்சா இவங்களை அடுத்து வரப் போகும் ஒல்லி பெல்லி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைச்சா உங்க டீவியின் டிஆர்பி ரேட்டும் அதிகம் எகிருமே, அதுமட்டுமல்ல உங்கள் வளர்ச்சிக்காக உதவும் இவர்களின் உடல் நிலையும் ஆரோக்கிய நிலைக்கு வருமே அதை செய்வீங்களா?

அப்புறம் மாகாபா ஆனந்த் என்பவரை சூப்பர் சிங்கர் ஷோவிற்கு ஆங்கராக போட்டு இருக்கிங்க சரி .ஆனா அவருக்கு நகைச்சுவையாக பேச ஏதாவது கத்து கொடுங்கப்பா அல்லது நாலு நகைச்சுவை புக்காவது வாங்கி கொடுங்கப்பா. இல்லைன்னா சூப்பர் சிங்கர்ல யாரவது ஒரு சிங்கர் குண்டா வருவான் அந்த சிங்கர்கிட்ட நீ எத்தனை ப்ஜ்ஜி சாப்பிட்ட ப்க்கோடா சாப்பிட்ட எத்தனை இட்டலி சாப்பிட்ட என்று அவங்க உடல் அமைப்பை வைச்சே காமெடின்னு பல வருஷமா ஒட்டிக்கிட்டு இருக்கிறார் எதிர்காலத்திலும் அப்படி இருப்பாருங்க. அதெல்லாம் காமெடியா. ஆமாம் அதுதான் காமெடி என்றால் கோபிநாத்தை பார்த்து அது மாதிரி ஒரு காமெடியை விருதுவிழாவில் பேச சொல்லுங்க

அப்புறம் மாகாபா நடத்தும் அதுஇதுஎது என்ற நிகழ்ச்சிகளில் ஆண்களை பெண்கள் வேஷம் போட வைத்து காமெடி என்ற பெயரில் நடத்தும் கொடுமையைவிடச் சொல்லுங்கப்பா. இப்படி மாற்றுவேஷம் போடுவதில் என்ன காமெடியை கண்டுவீட்டீர்கள். வேணும் என்றால் மாகாபா பாவனா கோபி போன்றவர்களை இப்படி ஆள்மாற்றி வேஷம் போட்டு ஷோ நடத்த சொல்லுங்க:

அடுத்து நவீனகால டிவி என்று சொல்லிக்கிட்டு ஒரு லூசைக் கொண்டு பாட்டி வைத்தியம் என்று இந்த காலத்திற்கு ஒத்துவாராத அல்லது கிடைக்காத பொருளை கொண்டு வைத்தியம் செய்ய சொல்லுறீங்களே அதை நிறுத்துங்கப்பா?

ஒரு நாள் இந்த லூசு பாட்டி வைத்தியம் என்ற பெயரில் ஏதோ உளரிச்சு என்னான்னு காது கொடுத்து கேட்டா அது சொல்லுது விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குதான் அதன் பிறகு அது கூடாதாம்.அடி லூசு இந்த காலத்துல அவன் அவனுக்கு சுகர் பிரஷர் கேன்ஸர் என்று பல நோய்கள் இருக்கிறது அதுக்கெல்லாம் தினசரி மருந்து சாப்பிடனும் அதை மூன்று நாளுக்கு அப்புறம் அவர்கள் அதை சாப்பிடாவிட்டால் சீக்கிரம் பரலோகம் போய்விடுவார்கள்/ இந்த மாதிரி லூசுதனமான டிவி நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு அதுக்குபதிலாக உபயோகமான நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யலாமே.. உதாரணமாக துணியில் பட்ட கறைகளை களைவது எப்படி சாயம் போகாமல் துணிகளை பாதுகாப்பது எப்படி. சாம்பார் பொடி அரைப்பது எப்படி ஹெல்தியான டிபன் செய்வது எப்படி. கணனியில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது எப்படி?  என்று  எவ்வளவோ சொல்லிப் போகலாம். இது போன்ற பயனுள்ள டிப்ஸ்களை சொல்லிச் சென்றால் இக்கால நவீன பெண்கள் மற்றும் ஆண்களுக்கு உபயோகமாக இருக்குமே.

என்னடா இவன் நம்ம டிவியையே எப்பவும் குறைகூறுகிறான் மற்ற டிவியைகளை குறை சொல்ல மாட்டானா? அல்லது இவனுக்கு பாராட்டவே  தெரியாதா என்று கேள்வி  எழுகிறதா?

அப்படி என்றால் அதற்கு என் பதில் நான் பார்க்கிற டிவியை & நிகழ்ச்சிகளை மட்டுமே விமர்சிக்க முடியும்.  பாராட்டக் கூடிய நிகழ்ச்சி என்றால் நேற்று நான் பார்த்த நீயா நானா திருக்குறள் பற்றிய நிகழ்ச்சியை மனதார பாராட்டுகிறேன். அந்த நிகழ்ச்சியை பார்த்தது மனம் நெகிழ்ந்து மகிழ்ந்தது. நாம் தமிழன் என்று பெருமை கொள்ள வைத்தது . மகிழ்ஸ்வரன், செந்தில்நாதன் வெண்ணிலா மற்றும் அவர்கள் பக்கத்தில் இருந்த நபர் மற்றும் பரிசு பெற்ற பெண் அனைவரும் மிக அருமையாக பேசினார்கள்.

அதிலும் வெண்ணிலா பசி பற்றிய குறளுக்கான விளக்கத்தை கேட்கும் போது என் கண்ணிலும் என் மனைவியின் கண்ணிலும் கண்ணீர் துளிகள் உருண்டன.

அது போல தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்ற ஒரு நல்ல நிகழ்ச்சியும் ஒரு காலத்தில் வந்தது அதுவும் மிக அருமையே. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை இதற்கும் கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


5 comments:

  1. எப்போதாவது டி.வி. பார்ப்பதோடு சரி. பல சமயங்களில் இந்த டி.வி. நிகழ்ச்சிகள் கொடுமை - கொஞ்சம் நேரம் கூட பார்க்க முடிவதில்லை!

    ReplyDelete
  2. அருமையான ஆலோசனைகள்! விஜய் டீவி ஏற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
  3. மதுரைத் தமிழரே...... விஜய் டீவியிடம் ஏதாவது வாங்கிக் கொண்டு
    அவர்களை விளம்பரப் படுத்துகிறீர்களா?

    ReplyDelete
  4. ஏன் உங்களுக்கு விஜய் டிவி மேல் இவ்வளவு அக்கறை!

    மலர்

    ReplyDelete
  5. ஒல்லி பெல்லி நிகழ்ச்சி..ஹஹஹ நல்ல யோசனை.....

    டிவி நிகழ்ச்சிகள் பார்ப்பதே அரிதாகிப் போனது.....பார்த்தாலும் எப்போதாவது படங்கள்தான்..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.