அலசி ஆராய்வது அப்பாடக்கர்
அல்ல மதுரைத்தமிழன்
டில்லியில் மின்
கட்டணம் 50 சதவீதம் குறைப்பு: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கினார் கெஜ்ரிவால்:
அண்ணே இது போல
தமிழக அரசு ஏதாவது செய்யுமாண்ணே
அடேய் மாங்கா இப்படி ஏதாவது
சத்தமா கேட்கதேடா. இங்குள்ளவங்க மின் கட்டணம்
குறைப்புக்கு பதிலாக மின் சப்ளையை பாதியா குறைச்சுடுவாங்கடா
அண்ணே இந்த கெஜ்ரிவால்
சொன்னதை செய்கிறார் ஆனா நம்ம மோடி சொன்னதை செய்யமாட்டேங்கிறாரே
அடேய் மாங்கா மோடியும் நல்லவருதாண்டா
அவரும் அவருக்கு வேண்டிய நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு சொன்னதை செய்து கொடுக்கிறார்டா?
அப்ப நமக்கு சொன்னதை
செய்யமாட்டாரா?
அடேய் அவர் நமக்கு சொன்னதை
செய்யமாட்டார் என்று எங்காவது சொல்லி இருக்கிறாரா என்ன.. அவருக்கு அதுகெல்லாம் நேரமே
கிடைக்கலடா பாவம் அவர் என்ன செய்வாரு ஒரு நாளைக்கு நாலு மணிநேரம்தான் அவரு தூங்குறாரு
அண்ணே இந்த கெஜ்ரிவால்
செயலைப் பார்த்த மற்ற தலைவர்கள் என்ன நினைப்பார்கள்
இந்த கெஜ்ரிவால் அரசியல்
தலைவர்களின் பொழப்பை கெடுக்க வந்தவர் என்று நினப்பார்கள். அரசியல் தலைவனாக இருக்க தகுதியில்லாதவர்
என்று நினைப்பாங்க
அண்ணே இவர் இப்படி
குறைச்சாருண்ணா அரசுக்கு வருமானம் குறையும்ல அதை எப்படி சமாளிப்பாருண்ணே?
டேய் நம்ம அரசாங்கம் இலவசமா எவ்வளவோ கொடுக்குறாங்க அப்ப அவங்களுக்கு வருமானம்
குறையத்தானே செய்கிறது .அப்ப அவங்க அதை எப்படி சமாளிக்கிறாங்களோ அப்படிதான் இவரும்
செய்வாரு
அடுத்த செய்தி :
தி.மு.க., பொருளாளர்
ஸ்டாலின், கட்சியினருக்கு அனுப்பியுள்ள தகவல் விபரம்: நீங்கள், என் மீது வைத்திருக்கின்ற
அளப்பரிய அன்பை நன்கறிவேன். அதுதான், பொது வாழ்வில் என்னை ஊக்குவிக்கின்ற உந்து சக்தியாக
இருந்து வருகிறது. இத்தருணத்தில், உங்கள் முன் ஓர் அன்பான வேண்டுகோளை வைக்கிறேன். மார்ச்,
1ம் தேதி, என் பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்த்து சுவரொட்டி, விளம்பர பலகை ஆகியவற்றிற்கு
பணத்தை வீண் செய்யாமல், பெண் குழந்தைகளின் கல்விக்கு, அந்தப் பணத்தை நீங்கள் செலவு
செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். அதுவே, நீங்கள் எனக்கு வழங்குகின்ற உள்ளார்ந்த
பிறந்த நாள் வாழ்த்தாக அமையும், என கூறியுள்ளார்.
அண்ணே இந்த செய்தியை
படித்தீங்களா அண்ணே
மாங்கா படிசேன்னடா கலைஞராக
ஆக முயற்சித்த ஸ்டாலின் அது முடியததால் எம்ஜியாராக ஆக முயற்சிக்கிறார். பாரேன் இன்னும்
கொஞ்ச நாளுக்கு அப்புறம் எம்ஜியார் போல மேடையில வயதான பெண்மணிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம்
பண்ண ஆரம்பிப்பார்
அண்ணே புதியதலைமுறைப்
போல விஜய்டிவியில ஏன் அண்ணனே பாலிடிக்ஸ் நீயூஸ் போடமாட்டேங்கிறாங்க
டேய் மாங்கா விஜய்டிவியில
உள்குத்து பாலிடிக்ஸ்ல ஈடுபட்டு இருக்கிறதலா மற்ற பாலிடிக்ஸ் பற்றி பேச அவங்களுக்கு
டைம் இல்லடா
விகடன் குழும
இதழில் படித்து ரசித்தது
மிஸ்டு கால் கொடுங்க,
மிஸ்டு கால் கொடுங்க’னு ஊரெல்லாம் விளம்பரம் பண்ணிக்கிட்டிருக்கு பா.ஜ.க. ஆனா கூட்டணியில்
இருக்கிற கட்சிகள் 'இந்த சந்தாதாரர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்’ மாதிரி
போய்க்கிட்டிருக்கு.
அன்புடன்
மதுரைத்தமிழன்
================
.
அரசியல் நையாண்டி நல்லாத்தான் இருக்கு.....
ReplyDeleteதமிழ்நாட்டுக்காரனுக்கு நையாண்டி கை வந்ததுதானே
Deleteநல்ல கற்பனை. உண்மைகளும் உள்ளன. நன்றி.
ReplyDeleteநமது கற்பனைதிறனை நம்ம தலைவர்கள்தான் அழகாக வளர்த்துவிடுகிறார்கள்
Deleteநல்லா அலசி ஆராயிந்து தான் பதிவையும் போட்டு இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteமலர்
துணியை அலசினதுமாதிரி அலசிட்டேனா? நன்றிங்க படித்து ரசித்து கருத்துக்கள் இட்டதற்கு
Deleteதங்களைத் தொடர்கிறேன்.
ReplyDeleteஇது வருகைப் பதிவு மட்டுமே!
மாங்கா என்றாலும் நடை இனிக்கிறது.
த ம 2
( இது நீங்கள் என் தளத்திற்கு வந்து கருத்திட்டதற்காக இல்லை.
ஏதோ என்மேல் கோபமாய் இருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்.)
உங்கள் நடைபற்றிச் சொன்ன செய்தி, ஒவ்வொரு முறை தங்களுடைய தளத்திற்கு வரும் போதும் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தது.
நன்றி
நண்பரே உங்கள் மீது எனக்கென்ன கோபம் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்? என் நடையைப்பற்றி எழுதியிருக்க்கிறீர்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள் எங்கே எப்பொழுது எழுதி இருக்கிறீர்கள் அதற்கு லிங்க் கொடுங்களேன்.. நான் யார் மீது எதற்காகவும் கோபபடுவதில்லை... நான் கோபபடுவதெல்லாம் என் மகள் மற்றும் மனைவி மீதுதான் அவர்களை தவிர வேறு யாருமீது கோபம் கொள்வதில்லை. அதனால் உங்கள் மனதில் சொல்ல நினைப்பதை தைரியமாக சொல்லாம்
Deleteஹா ஹா ஹா.... மனைவியும் மகளையும் தவிர
Deleteவேற யார் மீதும் கோபம் கொள்ள உரிமை கிடையாதே....
உங்களை மாதிரி உள்ளவர்களிடம் கோபத்தை காண்பிக்கலாமே
Deleteசூப்பர் பஞ்ச்! நடக்கட்டும்!
ReplyDeleteஹ்ஹஹ செம...சட்டைரிக்கல்....
ReplyDeleteசெம... செம... மிகவும் ரசித்தேன். குறிப்பாக டெல்லி - தமிழகம் மின் கட்டணக் குறைப்பு.
ReplyDeleteஉண்மைகளைக் கலந்து கற்பனையோடு கலக்கல்.
ReplyDelete