Sunday, February 8, 2015



சமுக வலைத் தளங்கள் உறவுகளையும் வாழ்க்கையும் பாதிக்கிறதா?


பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் இண்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இன்றைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே ஆகிவிட்டன  பலருக்கு இதுவே வாழ்க்கையாகவும் ஆகிவிட்டது. இதன் மூலம் நாம் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை மிக எளிதாக நமது தொடர்புக்குள் வைத்திருந்து, அவர்களின் சுக துக்கங்களில் பங்கு பெறமுடிகிறது. அது மட்டுமல்லாமல் சமுக பிரச்சனைகளில் நமது குரலை ஓங்கி ஒலிக்க செய்து, அதில் மாற்றங்களை கொண்டு வர முடிகிறது. இப்படி பட்ட மாற்றங்கள் பல நாடுகளிலில், ஊர்களில் , சிறு சமுகங்களில் ஏற்பட்டு இருக்கிறது.


இப்படி பல நல்ல பயனுள்ள மாற்றங்களை ஏற்படுத்திய இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் பல உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, வாழ்க்கையை சீர் குலைத்ததும் இருக்கிறது என்று சொன்னால் அதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதும் இல்லை என்பது உண்மையே..

சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு பலரும் அடிமையான சூழ்நிலை உருவாகியுள்ளது. எவ்வளவுதான்  கூறினாலும் மீண்டும் மீண்டும் இந்த கால மக்கள் அந்த தளத்திலேயே வீழ்ந்துகிடக்கின்றனர்  விபரீதத்தில் போய் மாட்டுகின்றனர். பள்ளி மாணவர்களில் இருந்து திருமணமான பெரியவர்கள் கூட இந்த தவறைதான் செய்கின்றனர் இது அவர்களின் குடும்ப வாழ்க்கையே சீரழித்து விடுகிறது

சோஷியல் நெட்வொர்க் தளங்கள் பளபளக்கும் கண்ணாடியை  போன்றவை அதை ஜாக்கிரைதையாக கையாளவில்லை என்றால் காயத்தை ஏற்படுத்திவிடும்

எப்படி இந்த சோஷியல் நெட்வொர்க் தளங்கள் நம்மை பாதிக்கின்றன என்பதை நாம் சுருக்கமாக பார்ப்போம்

போதை  பொருட்களுக்கு அடிமை ஆவது  போலத்தான் இந்த இன்டர்நெட்  போதையும். எவ்வளவுதான் வேண்டாமென்று மனம் மறுத்தாலும் இந்த சைட்டுகளுக்கு மனது தானாகவே போக ஆரம்பிக்கும். நேரடியாக பார்க்காத, பழக்கமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவதும், அதன் பின் சொந்த பெயரிலோ அல்லது திருட்டு பெயரிலோ ஐடி க்ரியேட் பண்ணி, பல நபர்களுடன் எல்லை மீறிய உறவு பாராட்டி, அந்தரங்க விஷயங்களை பறிமாறுவதும் இந்த போதையின் அறிகுறிகள். தாங்கள்  அடிமை ஆகிவிட்டனர் என்பதை அவர்களால் உணர முடியாது

இதை ஆரம்பத்திலே உணர்ந்து அதை மேலும் வளரவிடாமல் செய்வது தான் மிக சிறந்த வழி. இதற்கு அடிமையானவர் சுயபுத்தியை உபயோகித்து இதிலிருந்து வெளிவர வேண்டும் அல்லது மனநல மருத்துவரிடம் சென்று அவரது அறிவுரைப்படி நடப்பது  அவசியம்.

சோஷியல் நெட்வொர்க் தளங்களில் நாம் அதிக நேரம் செலவிடும் போது நாம் நம்மை அறியாமலே நமது குடும்பதினருடன் செலவழிக்கும் காலம் குறையத்  தொடங்குகிறது. இதனால் காலப் போக்கில் இல்லற வாழ்க்கையில், உறவுகளில், விரிசல் விழ ஆரம்பித்து உறவு பாதிக்கிறது, மனம் பாதிக்கிறது. உறவுகளோட ஒட்டி உறவாட வேண்டிய மக்கள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போனோடு ஒட்டிக் கொண்டு இருக்கிறார்கள்

இப்படி எலக்ட்ரானிக்ஸ் டிவைஸ்களுடன் நாம் அதிக நேரம் செலவழிக்கும் போது  நமது மைண்ட்  அதிக அளவு என்ர்ஜியை செலவிடுகிறது அதன் பின் அதில் இருந்து வெளியேறும் போது ஒரு விதமான அயற்ச்சி உருவாகி அது நமது வாழ்க்கையை பாதிக்கிறது

அடுத்தாக இந்த சோஷியல் நெட்வொர்க் மூலம் நாம் நமது நண்பர்களின் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு நல்ல பகுதியை மட்டும் அறிய முடிகிறது. காரணம் பொதுவாக மக்கள் தங்களைப் பற்றிய நல்ல செய்திகளை மட்டும் அதிகம் பகிர்கிறார்கள். உதாரணமாக வெளிநாட்டு பயணம் & வாழ்க்கை,விலை உயர்ந்த பொருட்களை வாங்கியது, ஹோட்டல்களில் சாப்பிட்டது, வெகேஷன் சென்றது. தன் பிள்ளை அவார்ட் வாங்கியது, முதல் நிலைக்கு வந்தது, நல்ல கம்பெனியில் வேலை செய்வது, புது புது கார் மற்றும் வீடு வாங்கியது போன்ற செய்திகளைதான் அதிகம் பகிர்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் யாரும் தாங்கள் கஷ்டப்படுவது, அவமானப்பட்டது தன்னால் ஏதும் வாங்க முடியவில்லை என்பதான செய்திகளை பகிர்வது கிடையாது அதனால் பலர் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்த்து தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக மாறுகின்றனர். பொறாமையிலும் விழ்ந்து குதர்க்க எண்ணங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் பல வீபரித சம்பவங்கள் ஏற்படுகின்றன. உறவுகள் பாதிக்கின்றன. மேலும் அடுத்த வீட்டுகாரன்,  தோழிகள் வாழ்க்கையில் பலதும் பெற்று. அதை சந்தோஷமாக இப்படி சோஷியல் நெட்வொர்கில் பகிரும் போது தானும் அப்படி பெற வேண்டும் என்று எண்ணி குறுக்கு வழியில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கையையே அழித்து கொள்கின்றனர்


நமது உறவுகளை, நட்புக்களை நமது தொடர்பு எல்லைக்குள் வைத்திருக்க நம்மால் ஆரம்பிக்கபட்ட இந்த தளங்களில் சிறிது சிறிதாக அந்நியர்கள் நட்பு போர்வையில் உள்ளே வருகின்றனர். இவர்கள் நாம் போடும் பதிவுகளையோ கருத்துக்களையோ பாராட்டும் போது அவர்கள் மீது ஒரு வித இனம்புரியாத அன்பு படருகின்றது. நமது குடும்ப ஆட்கள் பாராட்டாமல் இருக்கும் நிலையில் அந்நிய ஆட்கள் பாராட்டும் போது அவர்களின் மீது நமக்கு ஒரு வித மரியாதை ஏற்பட்டு, காலப்போக்கில் நாம் நம் அந்தரங்கங்களை, ஆசை பாஷைகளை பறிமாறும் போது,  அது நம்மை அங்கு ஒரு தவறான உறவிற்கு இழுத்து சென்று இறுதியில் வாழ்க்கையை சின்னா பின்னாமாகிறது..


அதுமட்டுமல்ல இந்த சோஷியல் நெட்வொர்க் மற்றும் இப்போதைய மிடியாக்களினால் நமதுவீட்டு குழந்தைகளின்  ஆரோக்கியமான வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இப்போது நாலு குழந்தைகள் சேர்ந்து தெருவில் அல்லது மைதானத்தில் விளையாடுவது என்பது அறவே இல்லாமல் போய்விட்டது. இது ஒட்டுமொத்தமாக சிறுவர்களின் எதிர்காலத்தை அப்படியே மாற்றிபோட்டு விட்டது.

மேலும் சமுகப் பிரச்சனைகளை பற்றி பேசும் போது பல சமயங்களில் அது திசை மாறி கருத்து மாறி அது உங்களையே தாக்கிவிட்டு போய்விடும் அதானல் நாம்தான் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

இறுதியாக சொல்ல விரும்புவது வீட்டுக்கு வீடு வாசப்படி அதனால் பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த பிரச்சனைகளை யாரும் சொல்லுவதில்லை பகிர்வதில்லை .நீங்கள் உங்களின் சோஷியல் தளப் பக்கத்தை மட்டுமல்ல உங்களை சுற்றியுள்ளவர்களின் பக்கத்தில் உள்ள செய்திகளை  நன்று உற்றுப்  கவனித்து பாருங்கள் அதில் எல்லோரும் சந்தோஷமான செய்திகளை மட்டுமே அதிகம் பகிர்ந்திருப்பார்கள் பாராட்டி இருப்பார்கள். ஆனால் அதை விட்டுவிட்டு  நிஜவாழ்க்கையை பார்க்கும் போது அதற்கு எதிராகவே இருக்கும். படிக்கும் போது பாசிட்டிவாக இருக்கும் இந்த பாராட்டுக்கள் நிஜவாழ்க்கையில் அப்படி தோன்றாமல் எதிர்மறையாகவே தோன்றும் என்பதுதான் உண்மை

இந்த சோஷியல் நெட்வொர்க் மிடியாக்கள் பயனுள்ளவைகளாக இருக்கும் அதே நேரத்தில் கேடு விழைக்கவும் செய்கிறது .அதனால் நாம்தான் அதை எப்படி பயன்படுத்தினால் நமக்கு மிக பயனாக இருக்குமோ அப்படி பயன்படுத்தி பலன் பெற வேண்டும்



நேரம் இருந்தால் இதையும் படிக்கவும் இல்லை என்றால் பிறகு வந்து படிக்கவும்















அன்புடன்
மதுரைத்தமிழன்
Avargal_unmaigal@yahoo.com

8 comments:

  1. 50 : 50

    காயம் ஏற்படும் என்று தெரிந்தும்... அது விடாது...

    ReplyDelete
  2. மிகக் கவனமாகக் கையாளப்படவேண்டும் என்பதே உண்மை. தங்களது இவ்விவாதம் தேவையானதே.

    ReplyDelete
  3. சமூகவலைத் தளங்களை வைத்து இருப்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு இது.
    த.ம.3

    ReplyDelete
  4. ஆம். தமிழா மிகவும் கவனமாகக் கையாள வேண்டியவை. அது நம் கையில் தான் இருக்கின்றது.

    ReplyDelete
  5. மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமே.....

    மலர்

    ReplyDelete
  6. நிறைய யோசிக்க வைக்குது உங்க பதிவு ..கம்பேரிசன் மனப்பான்மை வரக்கூடாதுதான் :( ஆனா சில விஷயங்கள் நம்மை பார்த்தும் பிறர் கற்றுக்கலாம் இல்லையா நண்பரே ..நான் சமீபத்தில் ஆட்டோக்ராப் பற்றி பிளாக்கில் பதிவிட்டேன் அது பார்த்து பெற்றோர் பிளைங்கள என்கர்ரெஜ் செய்வார்கள் என தோணிச்சு .சிறுவயதில் ஊக்குவிப்பது நல்லது .நான் நிறைய தவற விட்ருக்கேன் .மதிப்பெண் கிரேட்ஸ் பற்றி போடுவதை தவிர்ப்பது நல்லதே ..

    நெக்ஸ்ட்...நம்மை சுற்றி நிறைய கெட்டது நடக்குது ..சொந்த கஷ்டங்கள் இதெல்லாம் பகிர்வது நல்லதில்லை ..எதிர்மறை தோற்றத்தை நாமே உருவாக்க கூடாது ..

    FB சாட்டிங் ..அனைத்தையும் பொதுவில் பேசுவது நல்லது ..பெண்கள் சாட் தவிர்ப்பது மிக நல்லது

    ReplyDelete
  7. இது ஒரு மீள் பதிவோ என யோசிக்கத் தொடங்கினேன். பின் இதேபோல மற்றொரு பதிவு இருப்பதும் பார்த்தேன்.சகா !! இன்றைய சூழலுக்கு மிகவும் அவசியமான பதிவு தான். இந்த பதிவுக்கும், out of mind என லாங் லீவ் எடுக்காததற்கும் சேர்த்து ஒரு பொக்கே பார்சல்:)

    ReplyDelete
  8. அருமையான பதிவு மதுரைத் தமிழன். பலரும் இதற்கு அடிமையாகி விட்டனர்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.