உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, February 2, 2015

பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்

பேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்டும் அப்பாவி ஆண்கள் படும்பாடும்

அப்பாவியான நான் பொழுது போக்கிற்காக வலைத்தளம் ஆரம்பிச்சு நடத்திகிட்டு இருக்கேன். எனது பதிவுகள் இன்னும் பலரை சென்று அடையவேண்டும் என்று பேஸ்புக்கில் ஒரு அக்கவுண்டை துவக்கி அதிலும் என் பதிவுகளை இட்டு வந்தேன். நாம என்ன சேலைகட்டியவங்களா ஒரே நாளில் நூற்றுக்கணக்காக வந்து சேருவதற்கு அதனால் அதில் ஒன்று இரண்டு ஆட்களாக இணைந்து வந்தனர். .சரி இப்படி ஆட்கள் சேர்ந்தால் நாம எப்படி பிரபலம் ஆகிறது என்று நினைத்து மற்றவர்கள் சேராவிட்டால் என்ன நாம மற்றவங்களை நம்ம நண்பர்களாக சேர்த்து கொள்வோம் என்று நினைத்து முதலில் ஆண் நண்பர்களுக்கு ரிக்வெஸ்ட் அனுப்பினேன் ஆனால் அங்கேயும் எனக்கு சோதனை நான் பெண் இல்லை என்பதால் அவர்கள் என் ரிக்வெஸ்டை மாதக்கணக்கில்  கண்டுகொள்ளவில்லை ஏதோ ஒரு சிலர் பாவப்பட்டு என்னை சேர்த்து கொண்டார்கள்


சரி இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து பெண்களுக்கு ரிக்வெஸ்ட் அனுப்பலாம் என்று நினைத்தேன். அப்படி நினைத்த நேரத்தில் உடல் எல்லாம் நடுங்கியது காரணம்  இதுக்கு முன்னால் நான் எந்த பெண்களிடமும்  நானாக போய்கூட பேசியது இல்லை மற்றொன்று என் மனைவி அவள் என்ன நினைத்து கொள்வாள் என்று.

இப்படி உடல் நடுங்கினாலும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் சில பெண்களுக்கு நட்பு ரிக்வெஸ்ட் அனுப்பினேன். அனுப்பிய அடுத்த நொடியில் உடனே பதில் வந்தது நட்புக்கு இடமில்லை வேண்டுமானல் பலோவர்களாக தொடருங்கள் என்று. இருந்தும் பலருக்கு அனுப்பியும் இப்படிதான் பதில் வந்தது. அதுக்கு என்னடா காரணம் என்று ஆராய்ந்த போதுதான் நமக்கு முன்னால் பல ஆண்கள் துண்டைப் போட்டு இடம் பிடித்து இருக்கிறார்கள் என்று மேலும் நான் ரொம்ப லேட்டு என்றும் புரிந்தது

சரி பலோவர்களாக சேரலாம் என்றால், என்னால் என் மனைவியின் முந்தானையை  தவிர வேறு யாரின் முந்தானையை பிடித்து ப்லோ செய்வது  முடியாது அப்படி மீறிச் செய்தால் பூரிக்கட்டை பறக்கும் என்பது தெரியும்.

எனக்கு அனைத்து பெண்களிடமும் நட்பு பாராட்டி நண்பர்களாக இருக்கதான் பிடிக்கிறது காரணம் அனைத்து பெண்களையும் நாம் பலோ செய்தால் இறுதியில் பைத்தியம் பிடிச்சு ஹாஸ்பிடலில்தான் இருக்கனும்

அதனால பேஸ்புக் பெண்களே என்னை உங்களின் நண்பராக ஏற்றுக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் உங்கள் அனைத்து பதிவுகளுக்கும் லைக்ஸும் கருத்துக்களும் கண்டிப்பாக இடுவேன். நீங்கள் போடும் காலை வணக்கத்தை ரீஷேர் செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன்

இப்படிதானுங்க ஒரு பெண்ணிடம் நான் லைக்ஸும் கருத்துக்களும் கண்டிப்பாக இடுவேன் என்றேன் அதுக்கு அந்த பொண்ணு ஏலேய் மதுர உன் லைக்ஸும் கருத்துக்களும் யாருக்குல வேண்டும் அதைத்தான் அவனவன் க்யூவில் நின்று போடுறான் அது மட்டுமல்ல அவனவன் என் பேங்க் அக்க்வுண்டல் பணம் போடுறான் ஒருத்தன் என் போனுக்கு ரீஜார்ஜ் பண்ணிதருகிறான் இன்னொருத்தன் எனக்கு வேண்டியதை வாங்கித்தருகிறான் அதை விட்டுட்டு நீ என்னமோ கருத்து போடுறேன் லைக்கு போடுறேன் என்று சொல்லிக்கிட்டு என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்

இப்படி அலட்டுகிற பெண்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன் நான் படத்தில நடிச்சு சூப்பர் ஸ்டாராகி அதுக்கு அப்புறம் பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒப்பன் பண்ணிவிட்டு வந்து உங்களை கவனிச்சுகிறேன்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. தாத்தாக்கள்லாம் ஹீரோவா நடிச்சதுலாம் அந்தக் காலம் சகோ .

  ReplyDelete
  Replies

  1. என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை.....கமெண்ட் போட்டது நீங்கள்தானா? இல்லே ஏதாவது ஹேக்கர்களா?

   Delete
  2. நானேதான் நானேதான் சகோ. ஹேக் பண்ணுமளவுக்குலாம் உங்க சகோ ராஜி வொர்த் இல்ல சகோ.

   Delete
  3. ராஜிம்மா!
   நீ இல்லாம உங்க அண்ணனுக்கு விட்டுப் பூச்சு. என் பூரிக்கட்டைக்கு கூட இப்போலாம் பயப்படுறது இல்ல. அதனால வாம்மான்னு அமெரிக்கால இருந்து அண்ணி போன் செஞ்சு ஒரே அழுகாச்சி. அதான் ரீ என்ட் ரி கொடுக்க வேண்டியதாகிடுச்சு.

   Delete
  4. welcome back....... என்று சந்தோஷமாக சொல்லுவதை தவிர வேறு என்ன சொல்ல என்பது கூட தெரியாமல் நிற்கிறேன்...மகிழ்ச்சியில் ...

   Delete
  5. அதான் ரஜியக்கா !!! சூப்பர் அக்கா! நானும் நீங்க ஆன்டி-ஹீரோவா?? ஆண்ட்டி-ஹீரோவா ?? னு கேட்கலாம்னு நினைத்தேன்:))))

   Delete
 2. hahaha..வாழ்த்துக்கள் தல..

  ReplyDelete
 3. ஹஹஹ்ஹ ..ஆஹா மதுரைத் தமிழனுக்கு வந்த சோதனை!! உங்களுக்கா?! ம்ம் காந்துங்கள்லாம் ஹீரோவா நடிக்கும் போது...உங்களுக்கென்ன.....நீங்க காந்தமாக வந்து கலக்குங்க ...தமிழா...ஒரே படத்துல ஆட்சிய கூட பிடிக்கலாம்....நம்ம மக்கள் எல்லாம் வரவேற்பாங்க...

  ReplyDelete
 4. செம்ம கடுப்பாக்கிட்டாங்க போல

  ReplyDelete
 5. பூரிக்கட்டைக்கு வேலை குடுக்கிறதையே வேலையா வச்சிருகிறீங்களா என்ன ?

  ReplyDelete
 6. சூப்பர் ஸ்டாராக ஆனபின்பு துவக்குவது நலம். ஆக, யோசித்துப் பின்னர் செய்யுங்கள். நட்பு வளையம் பெரிதாகும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog