Monday, May 19, 2014


இணையதள உறவுகள் தடுமாறுகிறதா அல்லது தடம் மாறுகிறதா?



அகம் தெரியாதவர்களின்
முகம் மட்டும் அறிந்து
அரட்டை அடிக்க
ஆரம்பமாகிறது
இணையதள உறவுகள் !

நிழற்படங்களின்
நிஜ முகம் காணாமல்
நிறம் தரம் கண்டு
நிரந்தரம் இதுவென
நினைக்கின்ற மனது இது!

விழிப்புணர்வு இல்லா
வளராத சிந்தனைகளால்
வளர்ச்சி காணும் சர்ச்சைகள்
இங்கு ஏராளம்!

உறவுகளை சீர்குலைக்க
உணர்வுகள் தூண்டும்.
தவறுகள் இங்கு
சாதுர்யம் எனப்படும்!

அரட்டை அடிக்கும்
வார்த்தை ஜாலங்களில்
விழிகள் சிரிக்கும்
அகம் மகிழ்வு கொள்ளும்.

உண்மை அன்புகள்
ஊமையாய் ஓய்வெடுக்கும்
உறவுகளுடன் இல்லத்தில்!
உலவுவார்கள் இணையத்தில்
போலி அன்பைத் தேடி!

மனம் ஒன்றை கண்டதாய்
மணம் முடிந்ததை மறப்பர்
மறப்பது இயல்பாகும்
மணம் கண்ட மனதினை!
மல்லு கட்டும் நீதிமன்றம்
மனதையும் மணத்தையும் பிரிக்க!

உணர்சிகளின் உந்துதலால்
நட்பு என்ற முன்னுரை
காதலாக நகரும்
இரண்டு தினங்களிலே!

முடிவுரை என்னவோ
உயிர் உருகுலைந்திருக்கும்
இல்லையேல் இதயம் ஒன்று
அங்கே உடைந்து இருக்கும்!

உறவுகளை சீர்குலைக்கா
உணர்வுகளை பாதிக்கா
வதந்திகள் பரப்பா
வன்முறை உண்டு பண்ணா
நல்ல சிந்தனை
நமக்கு வேண்டும்!

சமுக வலைத்தளங்களை
சரியாக பயன்படுத்துவோம்!



அவர் அனுமதியுடன் இங்கே பதிவிடப்படுகிறது

அன்புடன்
மதுரைத்தமிழன்
தலைப்பும் ரீமிக்ஸ் கிராபிக் மட்டும் நான். படித்ததில் பிடித்ததால் எழுதியவர் அனுமதியுடன் இங்கு பதிவிடப்படுகிறது

14 comments:

  1. இதே தலைப்புடன் ஒரு பட்டிமன்றம் வைத்து விடலாம்...! இந்த முறை மதுரையில் நாம் சந்திக்கிறோம்... விவரம் விரைவில்...!

    ஷீபா அவர்களுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான படைப்பு. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  3. அருமையான கவிதை
    அனைவரும் அறிந்திட தங்கள் தளத்தில்
    பதிவாக்கித் தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. Depends upon people, and their surrounding

    ReplyDelete
  5. சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு

    ReplyDelete
  6. மனம் விட்டுப் பேசுவோர்
    வரவேண்டிய இடத்தில்
    தரங்கெட்டுப் பேசுவோர்
    வந்ததால் வந்த வேதனை
    பெண்கள் படிப்பார் என்று தெரிந்தும்
    எல்லா மொழிகளிலுமுள்ள
    எத்தனை கெட்ட வார்த்தைகளும்
    உள்ளடக்கி வெளிவரும்
    தடங்களைக் கண்டறிந்து
    தூக்கி எறிவதுதான் ஒரே வழி.

    நன்றி,

    கோபாலன்

    ReplyDelete
  7. மிக மிக அற்புதமாய் இணையத் தள நட்பின் நிலை குறித்து அழகிய கவிதையால்
    அகம் தொட்டு நிற்கும் கவிஞருக்கும் இக் கவிதையைப் பகிர்ந்துகொண்ட எங்கள்
    மதுரைத் தமிழனுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க
    நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
  8. ஆஹா, நம்ம மதுரைத் தமிழனும் கவிதையில கலக்க ஆரம்பிச்சுட்டாரேன்னு நினைச்சேன். என்ன, இப்படி பண்ணிட்டீங்க?

    இணையத்தள நட்பினை அழகான கவிதை கொண்டு விளக்கியிருக்கிறார்கள். கவிஞருக்கு வாழ்த்துக்களும், அதனை எங்களுக்காக பகிர்ந்து கொண்டதற்காக உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. பாட்டு ஒன்றினைப் பகிர்ந்துள்ளேன் அதை ஓடிப் போய்ப் படிக்கிறீங்க
    அல்லது உருட்டுக் கட்டைக்கு வேலை வச்சிருவன் ஆமா சொல்லிப் புட்டன் :))))

    ReplyDelete
  10. மிக அருமையான கவிதை சகோ .
    ஷீபா அவர்களுக்கு பாராட்டுக்கள் ..அதை இங்கே பகிர்ந்ததற்கு உங்களுக்கு double பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  11. வணக்கம் சகோதரர்
    மிகச் சிறப்பான கவிதை. உண்மையாக மிக எதார்த்தமாக சொல்லிச் செல்கிறது. படிக்கும் நீங்க எழுதினீங்களானு புருவம் தூக்கித் தான் படித்தேன். ம்ம் கடைசியில தெரிந்தது. கவிஞர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து விடுங்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

    ReplyDelete
  12. நல்ல கவிதை....... இப்போதைய தலைமுறைக்கு தேவையான ஒன்று....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.