Tuesday, May 20, 2014




மோடி பிரதமராக வர ஒட்டு போட்டவர்களின் கனவுகள்



1. இந்தியாவுக்கு எல்லா நாடுகளும் பயப்படும்...( ஒரு வேளை இந்தியாவிற்கு வருவதற்கே எல்லோரும் பயப்படுவார்களோ)

2. இலங்கை பிரச்சனைக்கு முடிவு காணப்படும் ( ஒரு வேளை இலங்கையை மிரட்டி இந்தியாவோடு இணைத்து இன்னொறு மாநிலம் ஆக்கி விடுவாரோ மோடி?

3. பாகிஸ்தானின் வாலை ஒட்டாக நறுக்கிவிடுவார் ( ஆமாங்க பாகிஸ்தானின் வாலை நறுக்கி அங்கே ராமர் கோயில் கட்டினாலும் கட்டுவார் )

4. சீனர்களுக்கு தூக்கம் வரமால் செய்துவிடுவார் ( ஆமாம் சீனா இந்தியாவிற்கு பயந்து அமெரிக்காவிடம் பாதுகாப்புக்கு கெஞ்சும் )

5. இந்தியார்கள் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணத்தை அழித்துவிடுவார் ( அதாவது இனிமேல் கறுப்பு பணத்தை காவி பணம் என்று அழைக்க வேண்டும் சொல்லி அழித்துவிடுவார்)


6. இந்தியாவை இந்துத்துவா நாடாக்கிவிடுவார் ( ஆமாங்க காவியை தேசிய கலராக்க்கி எல்லோரும் காவி உடைதான் உடுத்த உத்தரவு இடுவார் )

7. வேலை வாய்ப்பை அதிகரித்து வேலையின்மையை இல்லாமல் ஆக்கிவிடுவார் ( ஆமாங்க இந்தியர் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு தடை போட்டுவிடுவார் அது மட்டும்ல்லாமல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களை இந்தியாவிற்கு வர வழைத்து விடுவார் அதிலும் அரபு நாடுகளில் இருந்து திரும்ப அழைத்து விடுவார்.

8 சென்னையில் உள்ள கூவத்தை சுத்தமாக்கிவிடுவார் ( ஆமாங்க அதை சுத்தம் செய்து தெப்ப திருவிழா நடத்துவார்)


இப்படியெல்லாம் மோடி செய்துவிடுவார் என்று கனவு கண்டுதானே ஒட்டு போட்டீங்க...


பாருங்க மக்களே ஒரு வேளை மோடி பிரதமாரானால் மோடியும் மற்ற அரசியல் தலைவர்களை போலத்தான் என்று உணர்வீர்கள் அந்த நாள் வெகுதூரம் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : தமிழகத்தில் தேர்தல் முடிந்ததும் எழுதப்பட்ட பதிவு. அவர் மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிப்பாரா இல்லையா என்ற நிலையில் எல்லோரும் நினைத்து கொண்டிருந்த நேரத்தில் அவர் பிரதமாரனால் என்று யோசித்து எழுதப்பட்டது.

இப்போது அவர் முழு ஆதரவுடன் பிரதமராக அமர்கிறார். அதனால் அவர் நினைத்தால் நாட்டுக்கு நல்லது பல செய்வார் என்று நம்புவோம். அந்த நம்பிக்கை விதையை எல்லோர் மனத்திலும் விதைப்போம். அதன் பின் பொறுத்து இருந்து பார்ப்போம்






20 May 2014

7 comments:

  1. பொறுத்திருந்து பார்க்கலாம்...

    ReplyDelete
  2. Maduraikara Anna Adangamatenkiriye.. Abb Ki Baar Modi Sarkar...

    ReplyDelete
  3. நல்லாவே (நக்கலாக!!!) தான் மனசுல விதைச்சுட்டீங்க.

    ReplyDelete
  4. சிறந்த கருத்துப் பகிர்வு.

    ReplyDelete
  5. படம் ஒங்களது. தலப்பு என்னது.

    பாய்ந்து வரும் கேடிகளை பறந்து அடிக்கும் மோடி

    கோபாலன்

    ReplyDelete
  6. “கனவுகள்“ விழித்ததும் கலைந்துவிடுமே தமிழா!

    ReplyDelete
  7. ஹாஹஹா கூவத்தை சுத்தம் செய்து தெப்பத்திருவிழா நடத்துவார்.......செம ஜோக்!

    எல்லா கனவுகளுமே அருமைதான்!!!! மோடி கேடியாகாமல் நல்லது செய்தால் நல்லதே! பார்ப்போம்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.