Wednesday, May 21, 2014


மோடிக்கு பின் சமுக தளங்களில் இவர் அலைதான் மிக அதி வேகமாக வீசுகிறதாம் ?

மோடி அலைக்கு பின் சமுக தளங்களில் அதி வேகமாக இவர் அலைதான் இப்ப வீசுகிறதாம். அந்த அலையில் வந்த ஸ்டேடஸ்களில் சில உங்கள் பார்வைக்கு. இதை பார்த்த பின் அவர் யார் என்று உங்களால் ந கண்டு பிடிக்க முடியும் என்றால் நீங்கள் ரொம்ப ஸ்மார்டான ஆள்...


பொண்டாட்டி வருவா பின்னே பூரிக்கட்டை பறந்து வரும் முன்னே. மதுரைத்தமிழனின் புதுமொழி

பெண்கள் வீரமான ஆண்களை விரும்புவது கல்யாணத்திற்கு பிறகு தங்களிடம் நிகருக்கு நிகராக சண்டை போட ஆள் வேண்டும் என்பதாலா?

மனசுக்கு அழகானவனாக பார்த்து கல்யாணம் பண்ணுவதை விட மன அழுக்கு இல்லாதவனை கல்யாணம் செய்து கொண்டால் வாழ்க்கை கடைசிவரை இனிக்கும்


பொண்டாடிக்கு நாம் அறிவுரை சொன்னால் நமக்கு திருப்பி கிடைப்பது செவிட்டில் அறை மட்டும்தான்..


கலைஞர் ராஜினாமா கடிதத்தை ஏன் ஏத்துக்கல? ஸ்டாலின் பிள்ளையார் சுழி போடாம எழுதியிருந்தாரு அதனாலதான்

தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வி வாய்ப்பை மிக துல்லியமாக கணித்தது மீடியா அல்ல அண்ணன் அழகிரி மட்டும்தான்

ஸ்டாலினின் ராஜினமா கடிதத்தை கலைஞர் ஏற்றுக் கொள்ளாதற்கு காரணம் ஸ்டாலின் வெற்று பேப்பரை கவரில் வைத்து கொடுத்ததுதான்

திமுக தோற்றதற்கு அழகிரி காரணமில்லை...பாருடா ஸ்டாலின் தான் காரணம் என்பதை சாணக்கியர் எப்படி சொல்லுகிறார்


அதிமுகவில் உள்ள அடிமைகளுக்கு ஒரு கால கட்டத்தில் அமைச்சர் பதவியாவது கிடைத்துவிடுகிறது. ஆனால் திமுகவில் உள்ள கொத்தடிமைகளுக்கு எப்போதும் அல்வாதான் கிடைக்கிறது

காதலனுக்கும் உடன் பிறப்பு(திமுக)களும் உள்ள ஒற்றுமை இரண்டு பேரும் வாயாலே வடை சுடுவதுதான்

நாட்டுக்கு சேவை செய்ய மோடியை தேர்தெடுத்தா அவர் என்னவோ டிவிட்டரில் மெஜேஜ் போடுவதுதான் சேவை என்று நினைத்து அதேயே செய்து கொண்டிருக்கிறார்

மோடி சிவகார்த்திகேயன் நடித்த மான் காராத்தே படத்தை பார்த்து அந்த பார்முலாவை பின்பற்றியதால்தான் அவ்ருக்கு வெற்றி கிடைத்தது

மானம் கெட்ட அமெரிக்க அரசு இப்போது மோடியை தன் நாட்டிற்கு அழைக்கிறது என்று கூறும் மானமுள்ள பிஜேபியினரே மோடிக்கு மானம் இருந்தால் வரும் ஐந்து ஆண்டுகள் முழுவதும் அமெரிக்க வாராமல் இருப்பாரா என்று தெரிந்து கொண்டு கூவுங்கள்

செய்தி :வெற்றிக்கு காரணம் தொண்டர்களே: தலைநகரில் நரேந்திர மோடி பேச்சு
தலைவா இப்படி மொட்டையா சொன்னா எப்படி? வெற்றிக்கு காரணம் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே என்று இப்போதாவது தைரியமாக சொல்லுங்கள்

தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த முயற்சிப்போம்! - ஞானதேசிகன் ஆமாங்க ஆளுக்கு 2 மூட்டை சங்கர் சிமிண்ட் வாங்கி கொடுங்க

மோடியின் அலையால்தான் பிஜேபி வெற்றி பெற்றது. அடேய்ய்ய்ய் இன்னும் எத்தனை நாளுக்குதான் இப்படி சொல்லி ஏமாற்றுவீங்க... அலையால் அல்ல மக்களின் வோட்டால்தான் வெற்றி பெற்றது

பிரியாணி சரக்கு பணம், கிடைக்க இன்னும் 5 வருஷம் ஆகும்... ம்ஹும்....எங்க ஊர்ல எலக்ஷன் முடிஞ்சிருச்சு...... இப்படிக்கு இந்திய குடிமகன்

பெண்ணை காதலிச்சாலும் பெண் முதலமைச்சர்கிட்ட அமைச்சாராக இருந்தாலும் ஒண்ணுதான். எப்ப கழட்டிவிடுவாங்கன்னு தெரியாதுப்பா


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

 1. வணக்கம் சகோதரர்
  அரசியல் பஞ்ச்களும் அதிரடி புதுமொழிகள் அசத்தலாக இருக்கிறது. குறிப்பாக கடைசி பஞ்ச் கலைகட்டுகிறது போங்கள். அடிக்கடி இது போன்ற பதிவுகளைத் தாருங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 2. சாம்ய்யோவ் பூரிக்கட்டையால அடி வாங்கியும் லொள்ளு போகல.

  ReplyDelete
 3. சீக்கிரம் இந்த பஞ்ச் வசனங்களுக்கெல்லாம் காப்புரிமை சீது கொள்ளுங்கள். இல்லையென்றால், ஏதாவது ஓரிரு படங்களில் இந்த வசனங்களை எல்லாம் ஒலிக்கப்போகிறது!!!!!

  ReplyDelete
  Replies
  1. என் உயிருக்குதான் காப்புரிமை செய்து வைக்கனும் முதலில்

   Delete
 4. காதலர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பிரார்த்தனை : கடவுளே முதுகுவலி மட்டும் வந்திரக்கூடாது.

  கோபாலன்

  ReplyDelete
 5. கலக்கல் ட்வீட்ஸ்! நன்றி!

  ReplyDelete
 6. பிரியாணி குவாட்டர் வேணும்ன்னா ஒவ்வொரு தொகுதிக்கும் போயி சம்பந்த பட்டவனை போட்டு தள்ளிட்டு பை எலக்ஷன் வச்சிர வேண்டியதுதான்.

  ReplyDelete
 7. பிரியாணி குவாட்டர் வேணும்ன்னா ஒவ்வொரு தொகுதிக்கும் போயி சம்பந்த பட்டவனை போட்டு தள்ளிட்டு பை எலக்ஷன் வச்சிர வேண்டியதுதான்.

  ReplyDelete
 8. அலை பயங்கரமாக (பகிரங்கமாக) தான் அடிக்கிறது.

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.