ஜெயலலிதாவின்
ஆதரவை பெற பா.ஜ
கூட்டணியில் இருந்து விஜயகாந்த்
தூக்கி ஏறியப்படுவாரா?
இந்திய
பாராளுமன்ற தேர்தல் முடிந்த
நிலையில் ஊடகங்கள் தேர்தலுக்கு
பிந்தைய கருத்து கணிப்பை
வெளியிட்டு வருகின்றன.
இந்த
ஊடகங்களின் செய்திகளின் படி
தே.ஜ
கூட்டணி அதிகப்படியான இடத்தை
கைப்பிடித்து மோடி தலைமையில்
பிஜேபி பதவி ஏற்கும் என்று
செய்திகள் பரப்பபடுகின்றன.
ஆனால்
உண்மையான நிலவரம் என்று
சொல்லப் போனால் பிஜேபி அதிக
இடத்தை பிடித்தாலும் அது
ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு
பெறாது என்று பிஜேபி கட்சியினரே
நம்புகின்றனர்.
அப்படி
ஒரு சூழ்நிலை இருக்கும்
பட்சத்தில் அது மாநில கட்சிகளின்
ஆதரவை பெற இப்போதே நடவடிக்கைகளை
மேற்கொள்ள தொடங்கியுள்ளன.
இதைதான்
தேர்தலுக்கு பின்பான கூட்டணி
என்று ஊடக அரசியலார் கூறுகின்றனர்.
இந்த
கூட்டணிக்கான திறைமறைவு
வேலைகள் தொடங்கிவிட்டன.
அதன்படி
ஒரு குருப் ஜெயலலிதாவின்
ஆதரவை பெற முயற்சித்து
வருகின்றன.
இந்த
குருப்பிடம் அதிமுகவில் உள்ள
செல்வாக்கான ஆட்கள் கூறியது
இதுதான் பேச்சுவார்தைக்கு
வர வேண்டுமானால் முதலில்
விஜயகாந்தை கூட்டணியில்
இருந்து தூக்கி ஏறிந்துவிட்டு
வாருங்கள் அதன் பின் பேசலாம்
என்றும் இதன்படி ஒரு தொகுதியில்
வெற்றி பெற போகும் தேதிமுக
கட்சியின் ஆதரவு வேண்டுமா
அல்லது 30
க்கும்
மேல் வெற்றி பெறப் போகும்
அதிமுக வேண்டுமா....யோசியுங்கள்
என்று அறிவுறுத்தப்பட்டு
இருக்கிறது.
எப்படியும்
மோடியின் தலைமையில் ஆட்சியை
பிடித்துவிட வேண்டும் என்று
வெறியாக அலையும் பிஜேபி யின்
ஒரு குருப் இதற்கு ஒகே
சொல்லிவிடும் நிலமையில்தான்
இருக்கிறது இதற்கு ஆதரவு
தெரிவிக்கும் பிஜேபிகாரகள்
கூட தேர்தலுக்கு முன்பு பிஜேபி
தலைமையிடம் தண்ணி காட்டி,
கூட்டணிக்காக
அலைய வைத்த விஜயகாந்துக்கும்
பாடம் கற்பிக்கும் நேரம் இது
என்று எண்ணிக் கொண்டிருக்கிறது.
ஜெயலலிதாவின்
ஆதரவு தேவைப்படும் சமயத்தில்
விஜயகாந்தை தூக்கி ஏறிய பிஜேபி
ரெடி என்று அதிகாரப் பூர்வ
வட்டங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வைகோவை
தவிர அன்புமனியும் விஜயகாந்தோடு
வெளியேற்றப்படுவார்.
இப்படி
ஜெயலலிதா ஆதரவு தரும் பட்சத்தில்
அவருக்கு தேவையான முக்கியத்துவம்
பிஜேபியின் தலைமையில் அமையும்
அரசாங்கம் செய்து கொடுக்க
ரெடியாக இருப்பதாகவும்
ஜெயலலிதா மீது இருக்கும்
சொத்து குவிப்பு வழக்கு பிசு
பிசுத்து போகும் வகையில்
செய்து முடிக்கப்பட்டு
வழக்கில் இருந்து ஜெயலலிதா
விடுவிக்கப்படுவார் என்றும்
செய்திகள் கசிந்து கொண்டிருக்கிறது..
இதன் விளைவாகத்தான் அதிமுக கட்சித் தலைவர்களில் ஒருவரான மலைச்சாமி, இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கூறியுள்ளார்.
இதன் விளைவாகத்தான் அதிமுக கட்சித் தலைவர்களில் ஒருவரான மலைச்சாமி, இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், "ஜெயலலிதாவின் சிறந்த நண்பர்களில் ஒருவர் மோடி. அரசியல் ரீதியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மோடி பிரதமரானால் அவருடன் நெருக்கமான உறவை ஜெயலலிதா பேணுவார்" என்று கூறியுள்ளார்.
பாவம்
விஜயகாந்த அவரின் ஆட்டம்
இந்த தேர்தலோடு முடியப்
போகிறது.
அவருக்காக
இந்த பாட்டு
அன்புடன்
மதுரைத்தமிழன்
இது முன்பே தெரிஞ்சது தானேங்க? அதனாலதான அம்மா நாப்பதுலயும் போட்டி போட்டது? விஜயகாந்துக்கும் இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். அவருக்கு மட்டுமென்னா பாமக, மதிமுக இரண்டுக்குமே இதே நிலைதான் ஏற்படும்.
ReplyDeleteஉங்கள் கணிப்பு மிகச் சரி
ReplyDeletetha.ma 1
ReplyDeleteஇந்த பேட்டியினால மலைச்சாமியை கட்சியை விட்டு தூக்கிட்டாங்க! அம்மான்னாலே அதிரடிதான்! இன்னும் ரெண்டுநாள் நமக்கு நிறைய தீனி கிடைக்க போவுது!
ReplyDeleteபாவம்!
ReplyDeleteநான் பட்டது போதும். இந்தம்மாவ நம்பாதேன்னு வாஜ்பாய் சொல்லணும், மோதி அதக் கேக்கணும். இல்லேன்னா டென்சன்லயே மோதி தெனம் தண்ணியடிக்க ஆரம்புச்சிருவாரு. அப்பறம் விஜயகாந்த் அவருக்கு தோஸ்தாயிருவாரு. கேப்டனுக்கு ஒண்ணும் பிரச்னயில்ல.
ReplyDeleteகோபாலன்
நல்ல பாட்டாத்தான் போட்டிருக்கீங்க!!!!
ReplyDeleteதேர்தல் முடிவுகள் வந்து, யார் ஆட்சி அமைக்கப் போறாங்க வரைக்கும், உங்களிடமிருந்து சுடச்சுட அரசியல் செய்திகளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்...
நாளை மாலைக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும். பிறகு யார் எங்கே தாவுகிறார்கள், யாரை கீழே தள்ளி விடுகிறார்கள் என்பதெல்லாம் தெரிந்து விடும்....
ReplyDeleteகாத்திருப்போம்....
ஐயோ பாவம் தான்.
ReplyDeleteஅந்த வானத்தைப் போல மனம் படச்சது எல்லாம் நடிப்புக்காகத் தான்....
நல்ல கற்பனை. சும்மா கொளுத்திப் போடுங்க, காசா பணமா? :)
ReplyDeleteநகைச்சுவை சேனல்களுக்கு கொஞ்ச நாள் லீவு விட்டுடலாம்.
ReplyDelete