ஆண்கள்
படும்பாடு மதுரைத்தமிழன்படும்
பாடு அல்ல
ஒருத்தன்
கடுமையா உழைச்சா......
இவனுக்கெல்லாம்
எதுக்கு பொண்டாட்டி பேசாம
வேலையை கட்டி மாறடிக்க
வேண்டியதுதானே என்று சொல்லி
மட்டம் தட்டுவாங்க.
சரிடான்னு
பொண்டாட்டியை கண்ணும் கருத்துமா
கவனிச்சுக்கிட்டா..
பாருடா
இவனை பொண்டாட்டி முந்தானையையே
பிடிச்சுகிட்டு சுற்றி வரான்
இந்த பொண்டாட்டிதாசன் என்று
சொல்லி மட்டம் தட்டுவாங்க.
சரி
அதைவிடுங்க
ஒருத்தன்
தப்பி தவறி ஒரு பொண்ணைப்
பார்த்து அழகா இருக்கேன்னு
சொல்லிட்டா போதும் உடனே இவன்
என்ன அக்கா தங்கையோட பொறக்காதவனா
என்ன என்று அர்ச்சனை பண்ணி
ஈவ் டீசிங் அப்படி இப்படின்னு
சொல்லி நம்மை மிரட்டுவாங்க.
சரிடா
நமக்கெதுக்கு வம்புன்னு
கண்டுக்காம போனா அழகை
ரசிக்கத்தெரியாத ஜடம்..கல்லுளி
மங்கன்னு சொல்லுவாங்க
சரி
அதைவிடுங்க
நாம
தப்பி தவறி அழக்கூடாது தப்பி
தவறி அழுதோம் என்றால் பொம்பள
மாதிரி அழுகிறான் பாரும்பாங்க..
சரி
என்று அழுகாம திடமா இருந்தா
நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத
அரக்கன்னு வாருவாங்க..
சரி
அதைவிடுங்க
பொண்டாட்டியை
மதிச்சு அவளை கேட்டு முடிவெடுத்தா
பாருடா தானா முடிவெடுக்கத்
தெரியாத முட்டாள்..ன்னு
பட்டம் தருவாங்க.
சரின்னு
நாமளே ஒரு முடிவு எடுத்தா
பாரேன் இவனுக்குள்ள திமிரை
,ஆம்பிளைங்கற
அகங்காரத்தை என்று கரிச்சு
கொட்டுவாங்க
சரி
அதைவிடுங்க
சரி
மனைவிக்கு ஏதாவது பிடிச்சது
என்று வாங்கிட்டுப் போய்
கொடுத்தா என்னத்துக்கு இப்போ
காக்கா பிடிக்கிறீங்க..?
அப்படின்னு
ஒரு நக்கல பண்ணுவாங்க .ஒன்றும்
வாங்கிட்டுப் போகலேன்னா ஒரு
முழம் பூவுக்கு விதியத்துப்
போயிட்டேன்னு மூக்கை
சிந்திக்கிட்டு விக்கி விக்கி
அழுவாங்க..
சரி
அதைவிடுங்க....
திருமணநாள்,
மனைவியின்
பிறந்த நாளுக்கு பரிசு ஏதும்
வாங்கி கொடுக்கலைன்னா 'சனியன்'
இதை
போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதற்கு
பதிலாக பேசாம இருந்து இருக்கலாம்
என்று கரித்து கொட்டுவாங்க.சரிடான்னு
ஞாபகம் வைச்சு ஏதாவது பரிசு
பொருளை வாங்கி சென்றால்
'சனியன்'
இதை
வாங்கிட்டு வருவதற்கு பதிலாக
வாங்கி தராமல் இருந்து
இருக்கலாம் என்று கரித்து
கொட்டுவாங்க.
நமக்குதான்
வயசாச்சே அதனால் போட்ட சட்டையையே
அடிக்கடி போட்டால் என்னங்க
நாம என்ன பஞ்சத்திலா அடிபட்டு
இருக்கோம் என்று கிண்டல்
பண்ணுங்க.
சரிடான்னு
தினம் தினம் மார்டனா ஒரு
சட்டையை போட்டுப் போனால்
மனசுல மன்மதன் என்று நினைப்போ
என்று நக்கல் பண்ணுவாங்க
சரி
விடுங்க இன்னும் நிறைய
சொல்லிக்கிட்டே போகலாம்
அதனால இத்தோட நிறுத்திகிறேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
நான்
படித்து ரசித்த சிறு துணுக்கை
எனது வழியில் மாற்றி அமைத்து
எழுதி இருக்கிறேன்
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஆண்கள் படும் பாட்டை மிக அழகாக நேர்த்தியாக தங்கள் பாணியில் எழுதி விட்டீர்கள். ரசிக்கும்படி இருக்கிறது.
ரசிப்புக்கு மிகவும் நன்றி. நீங்கள் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக் கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்... ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் இன்று நீங்கள் ரசித்ததை உங்கள் வாழ்வில் அனுபவ பாடமாக கற்றுக் கொள்வீர்கள் .ஹீ.ஹீ
Deleteஆமாங்க எனக்கொரு சந்தேகம்! இது எல்லாம் அனுபவித்து எழுதுன மாதிரியே இருக்கே. எங்கேயோ படித்த துணுக்குகள் என்று தப்பித்துக் கொள்ள பார்க்கிறீர்களோ! விட மாட்டோம்ல. அப்படி நாங்க விட்டாலும் வலையுலக சகோதரிகள் விட மாட்டாங்க. (பத்த வச்சுட்டுயே பறட்டைனு சொல்ற உங்க மைண்ட் வாய்ஸ் இங்க கேட்குது பாஸ்).
ReplyDeleteவீட்டில் நடக்கும் விஷயம் வெளியே தெரியக் கூடாது அல்லது சொல்லக் கூடாதுன்னு வூட்டுஅம்மா உத்தரவு அதனாலதான் இப்படி
Deleteஇன்னொரு சந்தேகம்!
ReplyDeleteநாம என்னமோ பொண்டாட்டி கிட்ட திட்டு மட்டும் வாங்கிட்டு இருக்கிற மாதிரி இல்ல இருக்கு. வாங்கின அடி உதையில ஒன்னைக் கூட இங்க எடுத்து விடலயே! அடிச்சு அடிச்சே பூரிக்கட்டை டேமேஜ் ஆன கதை எல்லாம் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டிருக்கோ!
பாண்டிய மன்னரே உங்களுக்கு சந்தேகம் மிக அதிகமாகத்தான் வருகிறது வேண்டுமென்றால் உங்கள் சந்தேகங்களை தீர்ப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்குவதாக அறிவித்து விடலாமா?
Deleteபட்ட அனுபவம் அத்தனையையும் பிச்சுப் பிச்சு உதறீட்டீங்க சகோதரா
ReplyDeleteவாழ்த்துக்கள் :))))))))))))
நான் கஷ்டப்படுவதை அழுது சொல்லியும் அதற்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி போய் இருக்கீங்க..என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் பார்க்காமலா போய்விடுவேன் அப்ப இருக்கு.... உங்களுக்கு
Deleteசரி அதை விடுங்க
ReplyDelete
Deleteமனைவியை விட சொல்லுறீங்களா அது மட்டும் என்னால் முடியாது காரணம் எனக்கு இருப்பது என்னவோ ஒரு பொண்டாட்டி அவளையும் விட்டு தள்ளிட்டா வேற ஏமாளி பொண்ணு ஊரில் யாரும் இல்லைங்க
//ஏமாளி பொண்ணு//
Deleteசிஸ்டர், பூரிக்கட்டை பூரி உருட்டறதுக்கு மட்டும் இல்லை ங்கறது தெரியுந்தானே.
சரி விடுங்க.. நமக்கு இதெல்லாம் சகஜம் தானே
ReplyDeleteநமக்கு என்று சொல்லி நம்ம கட்சியில் நீங்களும் இருக்கீங்க என்று சொல்லி என் மனதிற்கு ஒரு ஆறுதலை தந்து இருக்கீங்க
Deleteகல்யாணம் ஆகப் போற ஒரு பச்சப் புள்ளைய (பாண்டியன்) இப்படி பதற வைச்சிட்டீங்க ம.த..ன்..!
ReplyDeleteஇனிமே ஒரு எச்சரிக்கை கொடுத்துதான் பதிவே போடனும் அதாவது இது பச்சைபுள்ளைங்களுக்கான அல்லது கல்யாணம் ஆகப் போகிறவர்களுக்கான பதிவு அல்ல. இல்லைன்னா இதை படிச்சுட்டு கல்யாணம் பண்ணாம போயிட்டா நாம் கஷ்டப்படுவது போல அவர்களும் கஷ்டபடாமல் போய்விடுவார்கள் அல்லவா என்ன நான் சொல்வது சரிதானே
Deleteஇதென்னங்க. சப்ப மேடரு. அக்கம் பக்கத்ல இருக்கற அளகான பொம்பங்களாப் பாத்து இவல்லாம் என்ன பொம்பளயா, நல்லாவா இருக்கா, என்ன திமிரு அப்டீன்னு சம்சாரம் காதுல விளராப்ல எடுத்து வுடுங்க. வெற்றி நிச்சயம்.
ReplyDeleteகோபாலன்
அட போங்க கோபாலன் சார் நீங்க சொன்ன மாதிரி எங்க வூட்டுகாரம்மாவிடம் சொன்னாலும் அடிவிழுமுங்க.ஏனுன்னு கேட்கிரீங்களா? பக்கத்துவீட்டு காரி அசிங்காம திமிரா இரூபது உங்களுக்கு எப்படி தெரியும் அவளை நீங்க வாட்சு பண்ணி பாத்ததினாலேதானே தெரியும். அப்ப நீங்க அவளை பார்த்து இருக்கீங்க என்று வாயிலே அடி விழும் அழகோ அசிங்கமோ வேற எந்த பெண்களையும் ஏறெடுட்து பார்க்க கூடாதுன்னுதான் எங்க வூட்டுகாரம்ம உத்தரவு
Deleteசரி விடுங்க.
ReplyDeleteஇதெல்லாம் ஆண்களுக்குச் சகஜமுங்க.
ஈஸியாக விடுங்க என்று சொல்லி போயிட்டீங்க....ஹும்ம்ம்ம்ம் அடிபட்டவனுக்குதானே வலி தெரியும்
Deleteசரி விடுங்க.... உங்க அனுபவம் பேசுகிறது............
ReplyDelete
Deleteஎன் அனுபவத்தை அதாவது கல்யாணம் பண்னியவர்களின் அனுபவத்தை உங்களைப் போல இளைஞர்கள் எங்கே கேட்கிறீங்க. நாங்கள் சொல்லியதை நம்பாம நீங்களும் கல்யாண வலையில் அல்லவா சிக்கி கொள்கிறீங்க
ஆண்கள் படும் கஷ்டத்தைப் படிச்சதும் என் கண்களில் நீர் வழிகிறது! :(
ReplyDeleteஒரு பெண்ணின் பிரசவ வேதனை, மாதாமாதம் வரும் "வயிற்று வலி" இவைகளை எல்லாம் ஆண்கள் படும் இக்கஷ்டங்களோட "கம்ப்பேர்" பண்ணிப் பார்த்தால் அதெல்லாம் ஒண்ணுமே இல்லை!
பெண்ணின் வயிற்று வலி,பிரவச வேதனை அதற்க்காத்தானே நாம் என்ன பாடுபட்டாலும் அவர்களை வணங்கி சென்று கொண்டிருக்கிறோம்
Deleteஆண்கள் படும் கஷ்டமா, இல்லை மதுரைத் தமிழன் படும் கஷ்டமா???
ReplyDeleteதலைப்புலேயே இது மதுரைத் தமிழன் படும்பாடு அல்லன்னு சொல்லிட்டீங்க.. இருந்தாலும் சந்தேகமா இருக்கு.
அட, சந்தேகம் தெளிவாயிடுச்சு.
இது ஆண்கள் படும்பாடு தான், மதுரைத் தமிழன் படும் பாடாக இருந்தால், "பூரிக் கட்டை" என்ற வார்த்தை கணிக்கில்லடங்காமல் அல்லவா இருந்திருக்கும்...
வலப்பக்கம் போனா உதை.... இடப்பக்கம் போனா அடி.....
ReplyDeleteஎன்ன தான் செய்யறது.... நியாயமான கேள்விகள் மதுரைத்தமிழன்.
அதனால தான்
Delete"வலைப்பக்கம்" வந்துட்டார்.