Sunday, May 18, 2014


கலைஞரை ரஜினி கை கழுவி விட்டாரா ?


குஜராத்தில் வாழும் மோடியை திடீர் நண்பாரக்கி தேர்தல் நேரத்தில் தன் வீட்டிற்கு அழைத்து டீ கொடுத்த ரஜினி. மோடி அமோக அளவில் வெற்றி பெற்றதும் வாழ்த்து தெரிவித்தார்

ஆனால் அதே நேரத்தில் தமது பழைய நண்பர் மிகப் பெரிய தோல்வியை தழுவியதும் அவரைச் சந்தித்து ஆறுதல் சொல்லாதது ஏன்?

தோல்வி அடையும் நண்பருக்கு தோள் கொடுப்பதுதான் நல்ல நண்பருக்கு அடையாளம். தனது நண்பர் மிகப் பெரிய தோல்வியை தழுவியதும் உடனே ஒடோடி சென்று அணைத்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டாமா என்ன?


நடிகர்களின் நட்பே இப்படிதானா? கூடா நட்பா?

அன்புடன்
மதுரைத்தமிழன்


கோச்சடையான் துணுக்குகள் :

செய்தி :கோச்சடையான் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால் அதை தான் நடிக்கும் லிங்கா படத்திற்கு கிடைக்கும் சம்பளத்தில் இருந்து அந்த நஷ்ட ஈடை சரி செய்வதாக வாக்குறுதி.

அப்ப படம் வெளி வருவதற்கு முன்பே அந்த படம் தோல்வி படம் என்பதை ரஜினியே முடிவு கட்டிவிட்டாரா

6 comments:

  1. இருவரும் ரீ குடிக்கும் போது அதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா ?...
    அவர்கள் ரீ குடிக்கவில்லை கோப்பி தான் குடித்தார்கள் உருட்டுக்
    கட்டையால எத்தனை முறை அடி வாங்கினாலும் திருந்தவே
    மாட்டேங்குறீங்களே அது ஏன் சகோ ?...:)))))))))

    ReplyDelete
  2. "தோல்வி அடையும் நண்பருக்கு தோள் கொடுப்பது தான் நல்ல நண்பருக்கு அடையாளம்//" - அதே மாதிரி வெற்றிப்பெற்ற விரோதியை பாராட்டுவதும் நல்ல பண்பு.

    ReplyDelete
  3. மோடி வாழ்க!! வாழ்க வாழ்க!!

    அட வெற்றி பெற்றவரின் பின்னால் இருந்தால் தான் நாமும் வெற்றி பெற முடியும் தமிழா.

    ReplyDelete
  4. உண்மையில் நடந்தது இதுதான். கெட்டவங்கள கடவுள் காப்பாத்தாட்டாலும் கைவிட மாட்டரு அப்டீன்னு ரஜனி பேச ஆரம்பிச்சிட்டு, சரி சரி நேர்ல வந்து பேசறேன்னாராம். அப்பறம் இவரும் போகல அவரும் கூப்டல.

    கோபாலன்

    ReplyDelete
  5. என்னமா யோசிக்கறீங்க மதுரைத் தமிழா! :)))

    ReplyDelete
  6. உங்கள் தன்னிலை விளக்கமே சொல்கிறது நீங்கள் சொல்லுக்கு பயந்தவர் என்று........... பின்னர் ஏன் மற்றவர் கருத்தை எதிர்பார்க்கிரிர்கள்..................................

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.