Sunday, May 4, 2014




அந்த கால வழக்கப்படி இந்த கால மார்டன் பெண் பார்க்கும் படலம்


என்னங்க என்னன்னா மாப்பிள்ளை வீட்டில் இருந்து எதுவும் மெஜேஜ் வந்ததா? ஆமாம்டி இப்பதான் டெக்ஸ்ட் மெஜேஜ் வந்துச்சு இன்னும் 2 மணி நேரத்தில் வந்துடுவாலாம்.

சரி சரி அப்படி மசமசன்னு நிக்காமா சீக்கிரம் நீங்களும் ரெடியாகுங்கோ...முதலில் நீங்க போட்டு இருக்கிற பேண்டை கலட்டிட்டு சிக்கிரம் பெர்முடாவை மாட்டி நல்ல டீசர்ட்டா மாட்டிங்கோண்ணா.


ரேவ் ரேவ் (ரேவதியைதான் இப்படி செல்லமாக கூப்பிடுகிறார் ) என்னடி மாப்பிள்ளை வீட்டுகாரா வர நேரம் ஆச்சு இன்னும் ஜீன்ஸை போட்டுகிட்டு நிற்கிற. சிக்கிரம் மீனி ஸ்கர்ட் மாட்டின்டு.... லோ நெக் உள்ள டாப்ஸ் போட்டுக்கோடியம்மா.....

2 மணி நேரம் கழித்து...

மாப்பிள்ளை வீட்டார் வருகிறார்கள்...

வாங்கோ வாங்கோ ரொம்ப டிராபிக் ஜாம்ல மாட்டிகிட்டேங்க போலருக்குதே.....

அதை ஏன் கேட்குறேள் இந்த சமுகம் ரொம்ப கேட்டு போச்சுங்க.... தெருக்கு தெரு டாஸ்மாக் பக்கத்தில் கோயில கட்டிண்டு அவனவன் காவடி எடுக்கிறேன் அது பண்ணுறேன் இது பண்ணுறேன்ன்னு ரோடடை மறிச்சு டிராபிக்கை தடை பண்ணுறான்..

பொதுமக்கள் இருக்கிற இடம் டாஸ்மாக் இருக்கிற பக்கத்தில் கோயில் கட்ட கூடாது என்று சட்டம் இருந்தாலும் அதை அரசாங்கம் முறையாக செயல்படுத்தவில்லை.

சரி உட்காருங்கோ உட்காருங்கோ.....

இதுதான் எங்க ஆத்து வைபை ஐடி & பாஸ் வோர்டு நல்ல நேரம் முடிகிறதுக்குள்ள எல்லோரும் லாக் பண்ணிக்குங்கோ.....

இப்ப நான் பொண்ணுக்கு டெக்ஸ்ட் அனுப்புறேன். அவ வந்துடுவா...... என்று சொல்லி டெக்ஸ்ட் அனுப்புகிறார்.

டெக்ஸ்ட் கிடைத்ததும்.. பொண்ணு காதில் இயர் போனை மாட்டிக் கொண்டு மீயூஸிக்கை கேட்டவாறே சத்தமாக பாடியாவாரே விரித்த தலையை ஆட்டிக் கொண்டு கையில் உள்ள டிரேய்யில் டாஸ்மாக்கில் வாங்கிய சரக்கை எடுத்து வருகிறாள்

அவள் வருவதை பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அசந்து போய் இருந்தனர்..


அவள் அருகில் வந்ததும் பொண்ணின் தொப்பனார் ஸ்வீட்டி சரக்கை(காபி கொடுப்பதெல்லாம் அந்த காலம்) எல்லோருக்கும் கொடுத்து விட்டு மாப்பிள்ளைக்கு ஒரு பிரெஞ் கிஸ்ஸை (காலில் விழுவதெல்லாம் அந்த காலம்) கொடும்மா என்றார்


அதே நேரத்தில் சரக்கை குடித்த பெரிசுகள் பேஸ் பேஸ் சரக்கு மிகவும் அருமையாக இருக்கிறது யாரு கலந்தது என்றனர்.


இது என் பொண்ணு கலந்ததுதான் என்றார் பொண்ணின் தொப்பனார் ....

குட் குட் பொண்ணுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து இருக்கீங்க் ஆமாம் பொண்ணுக்கு ஆட பாடத் தெரியுமா

என்ன இப்படி கேட்டுட்டேள் அவ 5 வருடமா போல் டாண்ஸ் கத்துகிட்டு இந்த வருஷம்தான் பிரபல போல் டான்ஸ்ர் முன்னிலையில் போல் டான்ஸ் அரங்கேற்றம் செய்தோம். நல்ல பாட்டுபாடுவா அவதான் விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் முதலிடத்தை பெற்றாள்


ரேவ் மாப்பிள்ளை வீட்டு பெரியவாள் உன் டான்சை பார்க்கனும்மாம்.. நம்ம ஹாலில் உள்ள போலில் டான்ஸ் ஆடி காண்பிம்மா..


அவளும் ஆடி பாடிக் காண்பித்த பின் மாப்பிள்ளை வீட்டார் எங்க பையன் பொண்னிடம் தனியாக சாட் பண்ணனும் என்று விரும்புகிறான் என்றதும்

பேஸ் பேஸ் அதுகென்ன அவங்க மொட்டை மாடியில் நின்னு சாட் பண்ணட்டும் அங்கதான் நெட்கனெக்ஷன் சூப்பர் பாஸ்டா வோர்க்காகும் என்று சொல்லி அனுப்புகின்றனர்..


அவர்கள் மாடிக்கு சென்றதும் ஒருவருகொருவர் டெக்ஸ்ட் மெஜேஜ் அனுப்பி இருவரின் பேஸ்புக்க்கில் ரிக்வெஸ்ட் அனுப்பி இணைத்து கொள்கிறார்கள்.. இருவரும் அதில் இருக்கும் ஸ்டேடசை படிக்கின்றனர்...

ரேவ் உன் பேஸ்புக்பக்கத்தில் ஒருவன் வேட்டி கட்டிண்டு இருக்கானே அவன் யாரு...ஓ அவன்னா அவன் பேரு மதுரைத்தமிழன் அவன் அவர்கள்...உண்மைகள் என்ற வலைதளத்தை நடத்தி வருகிறான் அவன் ரிக்வெஸ்ட் அனுப்பி இருந்தான் அதனால சேர்த்துகிட்டேன். ஆனா அவனை நான் நேரில் சந்தித்தது இல்லை அவன் கூட கோயிலுக்கு போனதில்லை..

ரேவ் உன்னை பார்த்தவுடனே எனக்கு உன்மேல் நம்ப்பிக்கை வந்துவிட்டது.. நீ இப்படி வேஷ்டி கட்டின பையங்கூட சேர்ந்து கோயில் குளம் என்று போகிற ஆள் இல்லை என்று...

ஆமாம் நான் உங்க பேஸ் புக்கை பார்த்த போது ஒரு பொண்ணு ஒருத்தி சேலைகட்டி இருந்ததை பார்த்தேன்

ஹே அவ என் கூட காலேஜ்படிச்சவள் என் பிரெண்டுதான் அதற்கு மேல் வேற ஒன்னும் இல்லை..

ஒகே ஒகேங்க ஆனா நம் கல்யாணத்திற்கு அப்புறம் அந்த மாதிரி சேலை கட்டி வரும் பெண்ணின் சகவாசம் எல்லாம் இருக்க கூடாது அதுக்கு ஒத்துகிட்ட நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்...

சரி ரேவ்...


எப்படிங்க உங்க பிரெண்டு கொஞ்சம் வெட்கம் கூட இல்லாம சேலைகட்டி அதையும் போட்டோவா எடுத்து பேஸ்புக்கல எடுத்து போடுறாங்க.. அவங்க பெற்றோர்களும் இதையெல்லாம் எப்படித்தான் அனுமதிக்கிறார்களோ?அப்புறம் அந்த போட்டோவை முதலில் டெலீட் பண்ணுங்க எங்க வீட்டு பெரியவா பார்த்தா உங்களை மோசமான ஆளு என்று நினைத்து கொள்வார்கள்


ரேவ் உனக்கு சமைக்க தெரியுமா?

இல்லைங்க...

அப்பாடி நல்ல வேளை தெரியும் என்று சொல்லி தினமும் சமைத்து போட்டுவிடுவாயோ என்று பயந்து இருந்தேன்..

ஆமாம் நீங்க காய்கறி எல்லாம் சாப்பிடுவீங்களா?

எப்போதவது நண்பர்கள் வற்புறுத்தினால் மட்டும் சாப்பிடுவேன்.

யாருக்கும் தெரியாம வேணா சாப்பிட்டுங்கோ....ஆனா எங்க வீட்டாள் முன்னால மட்டும் சாப்பிடாதீங்கோ...

ரேவ்வ். கல்யாணத்திற்கு பின் செக்ஸ் பற்றி என்ன நினைக்கிறீங்க...

அது ரொம்ப மோசமுங்க...எதற்கும் அனுபவம் இருக்கனும் அப்படி இல்லாததால் நமது பழைய கலாச்சார படி நடந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கை சந்தோஷமில்லாமல் சண்டையோட முடிந்தது என்று கேள்விங்க. எனக்கு செக்ஸில் மிக அனுபவம் இருக்குங்க அது மாதிரி உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன்.


எனக்கும் நல்ல அனுபவம் இருக்குங்க...


அப்புறம் கல்யாணத்திற்கு அப்புறம் என்னை குழந்தை பெற்றுக்க சொல்லி வற்புறுத்தக் கூடாது அப்படி பெற்றுக் கொண்டால் என் அழகு குறைந்துவிடும்

எனக்கும் அப்படிதான் குழந்தை பிறந்தால் அதை கவனிப்பதற்கு நேரம் செலவாகும் கவலைகள் பெருகும்.. வேண்டவே வேண்டாம் வேண்டுமானால் நாம் தத்து எடுத்துக்கலாம்....


ஆகா நமக்குள் நிறைய ஒற்றுமை இருக்கு... உங்களுக்கு ஒகே என்றால் எனது பெற்றோர்களுக்கு நான் மாப்பிள்ளை ஒகே என்று டெக்ஸ்ட் அனுப்பிடுறேன்.

எனக்கு டபுள் ஒகே.....

பெற்றோர்களுக்கு டெக்ஸ்ட் கிடைத்ததும் அதை பார்த்த பின் அப்ப சரி நாம் எல்லோரும் நைட்கிள்ப்புக்கு போயி நிச்சயம் பண்ணிக்குவோம் என்று சொல்லி செல்கின்றனர்...

இதுக்கு மேல அவங்க குடும்ப விஷயத்தில் நாம் காதை நுழைப்பது சரி இல்லை என்பதால் நாம் இதோட நிறுத்தி கொள்வோம்

மாற்றி யோசிச்சு நகைச்சுவைக்காக எழுதப்பட்டது யாருடையை மனம் புண்பட எழுதப்படவில்லை
 

அன்புடன்
மதுரைத்தமிழன்.

13 comments:

  1. இதைவிட மோசமாக நடந்தாலும் நடக்கலாம்...

    இன்றைக்கு இரு வீட்டார் நேரில் சந்திக்காமலே, இணையம் மூலம் பொருத்தங்கள் முடிகிறது... சில மாதங்களிலும் வாழ்க்கை தொடராமலும் "முடிகிறது..."

    ReplyDelete
  2. ஹா ஹா செம மாடர்ன் குடும்பமா இருக்கும் போலிருக்கே...

    ReplyDelete
  3. நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
    சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
    (பண்பட்ட மனங்கள் மதுரைத் தமிழனின்
    பதிவுகளைப் படித்து நிச்சயம் புண்படாது )
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Un veetla ippaditha acha.....Nalla gnyabaga sakthi (idu nagaichuvaikkaga ezhudiyadu....yaar manadayum punpadutha alla...)

    ReplyDelete
  5. நல்லாவே சிரிச்சேன்... எப்படித்தான் யோசிக்கிறீங்களோ...?

    ReplyDelete
  6. நீங்கள் உண்மையிலேயே ரூம் போட்டுத்தான் யோசிக்கிறீங்கன்னு தெரியுது.
    (வீட்டில இருந்தால், அடி வாங்கிக்கிட்டு இப்படியெல்லாம் யோசிக்க முடியுமா என்ன????)

    ReplyDelete
  7. இப்படி நடந்தாலும் வியப்பதற்கில்லை... ஆனா அந்தப் புகைப்படம் கொஞ்சம் ஓவராப் பட்டது..

    ReplyDelete
  8. லொல்லு ஜாஸ்தியாகி போச்சு!!!!

    ReplyDelete
  9. அடடா.... இதுவல்லவோ நாகரீகமான குடும்பம்....

    ReplyDelete

  10. வணக்கம்!

    எண்ணத்தில் கூட இதுவேண்டாம்! இன்டமிழ்
    வண்ணத்தில் வேண்டும் வலை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  11. கல்யாணத்திற்கு அப்புறம் மாமனார், மாமியார் தொல்லை இருக்கக் கூடாது. அதனால அவங்கள போட்டு தள்ளிரணும்னு யாருமே சொல்லலியே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.