Thursday, May 8, 2014
கடவுளுக்கும் ஞாபக மறதி உண்டா என்ன?

கடவுளே..

எனக்கு அன்பான தாத்தாவை கொடுத்தாய்...அவரை நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு அன்பான பாட்டியை கொடுத்தாய்...அவரையும் நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு அன்பான அம்மாவை கொடுத்தாய்...அவரையும் நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு அன்பான அப்பாவை கொடுத்தாய்...அவரையும் நீ எடுத்துக் கொண்டாய்.
எனக்கு அன்பான ஆசிரியரையும் கொடுத்தாய்...அவரையும் நீ எடுத்துக் கொண்டாய்.

இறுதியாக அன்பான அழகான அறிவான மனைவியை கொடுத்தாய்.........ரொம்ப வருஷம் ஆயிடுச்சு


வேறு ஒன்றும் இல்லை... சும்மா உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டு ஞாபகப் படுத்தினேன்... அவ்வளவுதான்...


மக்களே இதை சும்மா ஜாலிக்காக எழுதினேன் உடனே என் மனைவிக்கு இமெயில் அனுப்பிடாதீங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

13 comments:

 1. ஜாலிக்காகன்னாலும் உங்களை சும்மா விடக்கூடாது... உங்க ஹவுஸ் பாஸுக்கு பத்த வைக்காம விட மாட்டேன்...

  ReplyDelete
 2. ஹா... ஹா... ஹா... என்னமோ ஏதோ தத்துவம் சொல்லப் போகிறீரென்று நினைத்துப் படித்தால் நிஜமாகவே எதிர்பாராத பன்ச்சில் வெடித்துச் சிரித்து விட்டேன். நெடுநாளைக்குப் பின் வாய்விட்டுச் சிரிக்க வைத்த உமக்கு நன்றி. (இந்த கமெண்ட்டை என் மனைவிக்கு யாரும் மெயில் அனுப்பிராதீங்க பிரதர்ஸ்/சிஸ்டர்ஸ்!)

  ReplyDelete
 3. இந்த மனைவியை எடுத்துக்கிட்டு புதுசா ஒண்ணு தருவார். ஓக்கேவா!?

  ReplyDelete
 4. ஆஹா! ம.த! (அதாங்க மதுரைத் தமிழன்....மகபா ந்னு சொல்லலாம்னா ஏன் ம த நு சொல்லக் கூடாதுனு தோணிச்சு அதான்...) அதுக்குள்ள உங்க மனைவிக்கு email எல்லாம் ராக்கெட் வேகத்துல பறந்திருக்கும்.....அதான்...உங்கள் அன்பு சகோதரிகளிடமிருந்து.......ஹாஹாஹாஅ.....

  ReplyDelete
 5. சும்மாவா...? இதோ வருவார்கள்...

  ReplyDelete
 6. நீங்கள் பூரிக்கட்டையால் அடி வாங்கும் அழகை, கடவுளும் ரசிக்கிறார் போல!!!!!!

  அவருக்கு தெரியும் நீங்க ரொம்ப நல்லவருன்னு, இன்னும் எவ்வளவு வருசத்துக்கு வேண்டுமானாலும் மனைவி கொடுக்கும் பூரிக்கட்டை அடியை நீங்கள் தங்குவீர்கள் என்று.

  ReplyDelete
 7. ஹாஹாஹா....அங்கும் பூரிக்கட்டை பறக்காமல் இருந்தால் சரி! ஓ! சாரி இது ஹாஸ்பிட்டல் இல்லையா.....அப்போ ட்ரிப் இடும் ஸ்டாண்ட்தான் பறக்கும்........

  ReplyDelete
 8. வேண்டாம் இந்த சோதனை மதுரை தமிழா.... இதை விட மோசமாக அடிக்கும் மனைவி வாய்த்துவிடப் போகிறார்! ......

  ReplyDelete
 9. ஒண்ணுமில்லைங்க, உங்க மனைவியையும் எடுத்துக்கொண்டால் எங்க்ளையெல்லாம் போட்டு இன்னும் கொல்லுவீங்கனு ஒரு முட்டுக்கட்டை போட்டு இருக்காரு உங்க "பகவான்". உங்களுக்குத்தான் முதல் டிக்கட்! உங்க மனைவிக்கு ரெண்டாவது டிக்கட்தான். உங்களை பத்திரமா பாஸ் போர்ட் டிக்கட் எல்லாத்தையும் வச்சு8 பாக் பண்ணி அவங்கதானே அனுப்பி வைக்கமுடியும்? அதனால்தான் உங்களுக்கு முதல் டிக்கட்! இதெல்லாம் எப்படி அதிகப் பிரசிங்கி வருணுக்குத் தெரியும்? பகவானை உருவாக்கிய மனுஷ சென்மாம், இந்த வருண்! :) My analysis tells me, if you are still married, your better-half is not "fan of your blog" and she reads more important stuff instead of wasting her time here (in the blog world) and that she does not care what the other half thinks about her! :)

  Or she takes the opposite of what you "pretend". I mean if you say, "you hate her", she knows, you actually mean, YOU LOVE HER with all your heart (if you have one) Now what your "request to God" means to her is "NEVER LEAVE me sweetheart. NOBODY loves me but YOU!" That's what this post means to her! :)))

  ReplyDelete
 10. காமெடின்னாலும் கொஞ்சம் ஓவராத்தான் தெரியுது

  ReplyDelete
 11. கடவுள் இந்த விசயத்தில் மறதி உள்ளவராகவே இருக்கட்டும்.

  “ஒன்றின் அருமை தெரியாதவரையில் நம் கையை விட்டு அது போகாது.“  ReplyDelete
 12. நிச்சயமா கடவுளுக்க ஞாபக மறதி அதிகம்தான். மதுரையில மீனாட்சிக்கு பல வருடத்துக்கு கலயாணம் ஆனது தெரியாமலே இந்த வருடமும் கல்யாணம் நடக்குதுன்னா பாருங்க ....ஞாபக மறதிதானே ....

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.