Friday, May 16, 2014





தேர்தல் முடிவுகளை ஒட்டி பேஸ்புக் மற்றும் டீவிட்டரில் வந்த எனது நக்கல்கள்


37/39....தி.மு.. முன்னிலை...மோடி அலை தமிழகத்தில் இல்லை. தளபதி மற்றும் கேப்டனை காணவில்லை

பிஜேபியின் வெற்றிக்கு மீடியா காரணம் அல்ல 10 வருடங்களாக மோடி வர மன்மோகன் சிங் கடுமையாக உழைத்ததுதான் காரணம்

தமிழக நீதி : திமுகவை தனியா நிக்க வைச்சா அதிமுக சுலபமா ஜெயிச்சிடலாம்

ஸ்டாலின் திண்டாட்டம் அழகிரி கொண்டாட்டம்

ஜெயலலிதாவை விட அதிக சந்தோஷத்தில் அண்ணன் அழகிரி

அழகிரி வெற்றி ஸ்டாலின் தோல்வி

தமிழகத்தில் திமுகவை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வந்த பெருமை அண்ணன் ஸ்டாலினுக்கே சேரும்

மோடிக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து வைகோவை தமிழக கவர்னராக நியமித்துவிடுங்கள்

தோற்றது திமுக அல்ல தமிழக மக்கள்தான் கலைஞர் சொல்ல நினைப்பது

தமிழகம் வந்த மோடி ரஜினியிடம் அரசியல் பற்றி பேசாததால்தான் தமிழகத்தில் பிஜேபி தோற்றது.

மோடி அலையை தமிழகத்தில் வாரவிடாமல் தடுத்தது இலைதான்


தமிழகத்தில் அலையை தடுக்கும் சக்தி இலைக்கு மட்டும்தான் உண்டு.


பிஜேபியின் வெற்றிக்கு காரணம் மோடி அல்ல மன்மோகன் சிங்குதான்

மக்கள் தீர்ப்பை ஏற்று மதித்து மோடி வேலை செய்வாரா அல்லது வேட்டை ஆடுவாரா?

கலைஞரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எப்படி அடி வாங்கினாலும் அழாமல் சிரிப்பது என்பதைதான்

நான் தோல்வியடைஞ்சாலும் வெற்றி பெற்றவர் எனது நண்பர் மோடி என்று நினைக்கும் போது இதயம்பனிக்கிறது

வெற்றி பெற்றது மோடியல்ல மீடியாதான்

திமுகவின் தோல்விக்கு யாரும் பொறுப்பு ஏற்காததால் மக்கள் தாங்களே அதற்கு பொறுப்பு என்று ஒத்துக் கொண்டனர்

வெற்றி பெற்றது மோடியல்ல மீடியாதான்

திமுகாவின் டவுசரை கிழி கிழி என்று கிழிக்கப்போவது காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன் பார்க்க தவறாதீர்கள்

என்னால் பிஜேபி ஜெயித்ததை கூட ஜிரணித்து கொள்ள முடிகிறது ஆனால் வைகோவின் தோல்வியைத்தான் ஜிரணிக்க முடியவில்லை

வைச்சா குடுமி செரச்சா மொட்டை என்பது போல ஜெயிக்க வச்சா எல்லா தொகுதியிலும் ஜெயிக்க வைப்போம் இல்லை என்றால் சுத்தமா கழுவி காயப் போடுவோம் என்பதுதான் இந்திய மக்களின் எண்ணம்

கலைஞரும் ஒட்டு எண்ணிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார். அதிமுகவைவிட திமுக எத்தனை சதவிகிதம் பெற்றது என்று இறுதியில் அவர் சொல்ல...


//மக்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சியே. மோடிக்கு வாழ்த்துகள் - மு. . ஸ்டாலின்//
எங்களை எப்படி அடிச்சாலும் நாங்கள் சிரித்து கொண்டே இருப்போம்ல... மிசா காலத்தில் விசா வாங்கி ஜெயிலுக்கு சென்றவன்ல நான்

மோடி அபார வெற்றி பெற்றது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.காரணம் ஆட்சி கவிழாமல் 5 ஆண்டுகளும் இவரேதான் ஆட்சி புரிவார்.அப்புறம் எப்படி நான் கழுவி கழுவி ஊத்தி பதிவு எழுதறது.அவனவனுக்கு அவன் கவலை

அடிக்கடி ஆட்சி கவிந்தால்தானே பிரியாணி தாயாரிப்பவர்களுக்கும் போஸ்டர் அடிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து மோடியை தூக்கி ஏறியும் முயற்சியில் இறுதியில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றுவிட்டது

மோடி பிரதமராக வந்தால் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாரான்னு சொன்னாங்க? அப்ப பேஸ்புக்கல பெண்களுக்கு விழும் லைக்ஸ் போல ஆண்களுக்கு விழமாட்டேங்குதே அதை தீர்த்து வைப்பாரா?

.

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. கருத்துகள் அனைத்தும் வெடிச்சரம்.... ரசித்தேன் மதுரைத்தமிழா!

    ReplyDelete
  2. எல்லாமே ரசிக்க வைக்கிறது. ஆனாலும் முதலிடம் 'அலையைத் தடுக்கும் சக்தி இலைக்குத்தான் உண்டு' .

    வைகோ மற்றும் ஜேட்லியின் தோல்வி கொஞ்சம் வருத்துகிறது.

    ReplyDelete
  3. இருந்தாலும் உங்களுக்கு குசும்பு அதிகம்தான் பாஸூ....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete
  4. மதுரைத் தமிழா தங்கள் குறு குறு குறும்புஸ் எல்லாவற்றையும் மிகவும் ரசித்தோம்!

    ஆமா அது என்ன எல்லா வி ஐ பி சும் இந்த செல்லத்ததான் வைச்சுப்பாங்களோ?!! .......சமீபத்தில் நடந்த செல்லங்களின் ஷோவில் இந்த வகை கொஞ்சம் நிறைய இருந்தது. கேட்டதற்கு அவை விஐபி க்களின் செல்லங்கள் என்றனர்.........அதான்......நாங்களும் ஒண்ணு வளர்க்கலாமோன்னுத்தான்.......

    ReplyDelete
  5. யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம் பாடல்தாம்ய்யா நியாபகத்துக்கு வருது !

    ReplyDelete
  6. "//அவனவனுக்கு அவன் கவலை//" - அடடா மோடி இப்படியா வெற்றி வாகை சூடனும். சரி, இனிமே உங்கக்கிட்டேயிருந்து எப்படி மோடியை தாக்கி பதிவு வருதுன்னு பார்க்கலாம்!!!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.