ஈரான் அதிபர் கமேனியைத் 'தியாகி' எனக் கொண்டாடும் தமிழகப் படித்த வர்க்கத்தின் முரண்பாடான போக்கை தோலுரிக்கும் பதிவு.
ஈரானின் கமேனியைப் புனிதராக்கும் முட்டாள்தனம் - ஒரு சாட்டை அடி!
தமிழகத்தில் இருக்கும் சில 'படித்த' மேதாவிகளைப் பார்க்கும்போதுதான் வியப்பாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும் மனித உரிமை பேசும் இவர்கள், ஈரான் அதிபர் கமேனியை ஏதோ உலக மகா தியாகி ரேஞ்சுக்கு கொண்டாடுவது வேடிக்கையிலும் வேடிக்கை. ஒரு நாட்டின் தலைவரை விமர்சிப்பதற்கும், அவரை புனிதராகச் சித்தரிப்பதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஆனால் இங்கு நடப்பதோ அப்பட்டமான முட்டாள்தனம்.
கடந்த காலங்களில் ஈரானில் என்ன நடந்தது என்று இந்த அறிவுஜீவிகள் வசதியாக மறந்துவிட்டார்களா? 22 வயது பெண் மஹ்சா அமினியின் மரணத்தில் தொடங்கிய போராட்டம், ஈரானின் அடிப்படை உரிமைகளுக்கான போராக மாறியது. ஆனால் கமேனி அரசு அதற்கு என்ன பரிசு கொடுத்தது?
போராடிய மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். கமேனியின் பாதுகாப்புப் படைகள் உடனடியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் 70-க்கும் மேற்பட்டோர் அப்பாவிச் சிறுவர்கள்! அதன் பிறகு தொடரந்து போராடிய போராட்டக்காரர்களை அச்சுறுத்த நடுரோட்டில் கிரேன் மூலம் இளைஞர்களைத் தூக்கிலிட்டது கமேனி அரசு. இப்படி இறந்தவர்கலின் எண்ணிக்கை 7000க்கும் மேல் என்று செய்திகள் கூறுகின்றன. இவர்கள் ஆயுதங்களை ஏந்தி போராடியவர்கள் அல்ல. இது பற்றி சிறிய புரிதல்கள் கூட தமிழகத்தில் படித்தவர்கலிடம் இல்லை. அல்லது இவையெல்லாவாற்ரையும் சுத்தமாக மறந்துவிட்டார்களால் என்ன?
படித்த மேதாவிகளேஅமெரிக்காவையோ அல்லது மேற்கு நாடுகளையோ எதிர்ப்பது உங்கள் அரசியல் நிலைப்பாடாக இருக்கலாம். அவர்கள் செய்யும் தவறுகளைத் தாராளமாக விமர்சியுங்கள். ஆனால் அதற்காக, தன் நாட்டு மக்களின் ரத்தத்தை ஓடவிட்ட ஒரு சர்வாதிகாரியை 'தியாகி' வேடத்தில் அமர வைப்பது எவ்வளவு பெரிய அறியாமை?
எதிரியை வெறுப்பதற்காக, ஒரு கொலையாளியை அரவணைப்பது அறிவுள்ள எவருக்கும் அழகல்ல. கமேனியைத் தியாகியாகச் சித்தரிப்பது வெறும் அறியாமை மட்டுமல்ல, அது மனிதாபிமானமற்ற ஒரு முட்டாள்தனம்.
தன் நாட்டு மக்கள் அடிப்படை உரிமைக்காக வீதியில் இறங்கிப் போராடியபோது, அவர்களைக் கருணையின்றி ஒடுக்கி, ஆயிரக்கணக்கானோரைச் சிறையிலும் சுடுகாட்டிற்கும் அனுப்பிய ஒருவரைத் 'தியாகி' என்று அழைப்பது, அந்தப் பிணங்களின் மீது ஏறி நின்று அரசியல் செய்வதற்குச் சமம்.
தமிழகத்தின் 'படித்த அறிவுஜீவிகளே! ஒரு கொலையாளியைத் தியாகியாகக் கொண்டாடுவது வெறும் முட்டாள்தனம் மட்டுமல்ல, அது ஒரு வரலாற்றுத் துரோகம். ஈரானில் கொல்லப்பட்ட அந்த 70-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆன்மாக்கள் கேட்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? எதிரியை வெறுப்பதற்காக நீதியை அடகு வைக்காதீர்கள். ஏனெனில், ரத்தக் கறையை ஒருபோதும் 'தியாகம்' என்ற பெயரால் மறைக்க முடியாது!
ஈரான் ஏன் அமெரிக்காவை நேரடியாகத் தாக்காமல் வளைகுடா நாடுகளை அடிக்கிறது பின்னாலுள்ள மாஸ்டர் பிளான்??? https://avargal-unmaigal.blogspot.com/2026/03/why-is-iran-attacking-gulf-countries.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#IranPolitics #Khamenei #HumanRights #TamilSocialMedia #AvargalUnmaigal #IranProtests #RealityCheck #JusticeForMahsaAmini #deejDurai


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.