Friday, March 27, 2026

 உணவில் விஷத்தைக் கலந்துவிட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படும் சமூகமா நாம்?  Hidden Danger in Indian Kitchens: Is your Chutney a Silent Killer?
    

Hidden Danger in Indian Kitchens: Is your Chutney a Silent Killer?



இன்றைய தலைமுறை பெண்கள் படித்து இருக்கிறார்கள் பட்டங்கள் பல வாங்கி இருக்கிறார்கள் .தங்கள் முன்னோர்களை விட அறிவில் சிறந்தவர்களாக் கருதுகிறார்கள்   ..  தாங்கள் பகுத்தறியும் திறமை உள்ளவர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள் உடல் ஆரோக்கியம் பற்றி பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் படிக்கிறார்கள்... ஆனால் இத்தகைய பெண்களின் கிச்சனில் இந்தச் சட்னி இருந்தால், அது அவர்களின் அறிவை ஏளனம் செய்வதாகவே அமையும்  . அவர்கள் கண்டிப்பாக  வடிக்கட்டின முட்டாள்தான் என்று ஆணிதரமாக கூறுவேன்.

அது என்ன பொருள் அதனால் என்ன பாதிப்பு என்பதை இந்த பதிவில் பார்ப்போம் . வழக்கமாகச்  அரசியல் செய்திகளைப் அலசுவோம், ஆனால் இன்று நம் சமையலறைக்குள் ஒளிந்திருக்கும் ஒரு ஆபத்தைப் பற்றிப் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

 சிங்ஸ் செஸ்வான் சட்னி (Ching’s Schezwan Chutney). இன்று நடுத்தர வர்க்க வீடுகளில் நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், மோமோஸ் என எதைத் தொட்டாலும் இந்தச் சட்னி இல்லாமல் இறங்குவதில்லை. குறிப்பாகக் குழந்தைகள் இதன் காரத்திற்கும் அந்த விசித்திரமான ருசிக்கும் அடிமையாகிக் கிடக்கிறார்கள். "இந்தோ-சைனீஸ்" என்கிற போர்வையில் நம் தட்டுக்குள் நுழைந்திருக்கும் இந்தச் சட்னியின் லேபிளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளைத் தோண்டிப் பார்த்தபோது எனக்கு உடல் நடுங்கிவிட்டது.

கொஞ்சம் அந்தப் பாட்டிலைத்  பாருங்கள். மிகச் சிறிய எழுத்துக்களில் E211 மற்றும் E202 என்று போட்டிருப்பார்கள். சோடியம் பென்சோயேட் மற்றும் பொட்டாசியம் சார்பேட். இவை வெறும் உணவுப் பாதுகாப்புப் பொருட்கள் (Preservatives) மட்டுமல்ல, இவை முறையே உயர் ஆபத்து மற்றும் நடுத்தர ஆபத்து கொண்ட ரசாயனங்கள். சோடியம் பென்சோயேட் (E211) தனியாக இருக்கும்போதே கல்லீரல் நச்சுத்தன்மை, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும் (ADHD) தன்மை கொண்டது.

ஆனால் இங்கேதான் ஒரு மிகப்பெரிய சதி ஒளிந்திருக்கிறது. இந்தச் சோடியம் பென்சோயேட் ரசாயனம், வைட்டமின் சி (Vitamin C) உடன் சேரும்போது 'பென்சீன்' (Benzene) ஆக மாறுகிறது. பென்சீன் என்பது நேரடியாகப் புற்றுநோயை உருவாக்கும் ஒரு காரணி. நாம் இந்தியச் சமையலில் தக்காளி, எலுமிச்சை என வைட்டமின் சி நிறைந்த பொருட்களைச் சாதாரணமாகப் பயன்படுத்துவோம். சூடான நூடுல்ஸில் இந்தச் சட்னியைச் சேர்த்துப் பிசையும்போது, அந்த வெப்பத்தில் ஒரு ரசாயன மாற்றம் நிகழ்ந்து, உங்கள் குழந்தையின் வயிற்றுக்குள் பென்சீன் எனும் புற்றுநோய் விஷம் செல்கிறது. 

அடுத்ததாக பொட்டாசியம் சார்பேட் (E202). சமீபத்திய 2025-ஆம் ஆண்டு ஆய்வுகள் இதைப் பற்றி அதிர வைக்கும் தகவல்களைத் தருகின்றன. இது நம் குடலில் உள்ள நற்பண்பு கொண்ட பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நம் உடலின் அடிப்படை ஆதாரமான DNA-வையே சிதைக்கும் (Genotoxic) வல்லமை கொண்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு உணவுத் தரக் குறியீட்டில் 100-க்கு வெறும் 9 மதிப்பெண்கள் மட்டுமே வாங்கிய ஒரு பொருளை நாம் ஏன் இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்?

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள். அவர்களுக்கு உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை விட, அந்தச் சட்னி கெட்டுப்போகாமல் பல மாதங்கள் கடையில் இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதற்கெல்லாம் 'FSSAI அங்கீகாரம்' இருக்கிறது என்று சமாதானம் சொல்லாதீர்கள். அந்த அனுமதி என்பது எப்போதாவது ஒருமுறை சாப்பிடுபவர்களுக்காகத் தரப்பட்டது. ஆனால் நாமோ தினமும், ஒவ்வொரு வேளையும் விதவிதமான பாக்கெட் உணவுகள் மூலம் இந்த ரசாயனங்களை நம் உடலில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம். இதைத்தான் 'கிரிமினல் அலட்சியம்' என்பேன்.

உடல் ஆரோக்கியம் என்று  ஆர்கானிக் காய்கறிகளைத் தேடி ஓடும் நாம், ஒரு ரசாயனக் குப்பையை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும்? காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, வினிகர் இருந்தால் 20 நிமிடங்களில் வீட்டிலேயே சுத்தமான செஸ்வான் சட்னி செய்துவிட முடியும். பாக்கெட் உணவுகளை வாங்குவதற்கு முன் லேபிளைப் படியுங்கள். உணவு ஸ்கேன் செய்யும் செயலிகளைப் பயன்படுத்துங்கள். இந்த தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால்  உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பகிருங்கள். நம் கிச்சனில் பதுங்கியிருக்கும் இந்த 'சைலண்ட் கில்லரை'  என்ற் விஷத்தை தூக்கி ஏறிவோம் .

விழிப்புணர்வு ஒன்றே நம் ஆரோக்கியத்திற்கான ஒரே வழி.

அன்புடன்,
மதுரை தமிழன்

#அவர்கள்உண்மைகள் #மதுரைதமிழன் #விழிப்புணர்வு #உணவுபாதுகாப்பு #Alarm #FoodSafety #Awareness #NoProcessedFood #SaveOurKids #HealthAlert 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.