சீட் என்று வரும்போது மட்டும் ஏன் 'அரசியல் தீண்டாமை'? திராவிட மாடலின் போலி முகம்
உதயசூரியனின் நிழல் ஒதுக்கீடு!
சமூக நீதி ,அது ஒரு அழகான மேடை அலங்காரம்!
கீழே இருப்பவர்களை மேலே தூக்குவோம் என்பார்கள்,
ஆனால் சீட் என்று வரும்போது மட்டும் - அவர்களை
மேடைக்குக் கீழே அமர வைப்பதே
அவர்களின் தீராத 'கொள்கை' தாகம்!
கூட்டணி என்பது ?
வலுவானவர்கள் பந்தி வைப்பார்கள்,
வலியவர்கள் அங்கே பங்கு கேட்பார்கள்.
பாவம், தலித் கட்சிகள் மட்டும் - அங்கே
இலை போடும்போது இடஒதுக்கீடு பற்றிப் பேசிவிட்டு
சாப்பிடும்போது மட்டும் மிச்சம் மீதிக்காகக் காத்திருக்க வேண்டும்!
இதுதான் திமுகவின் அந்த விசித்திர லாஜிக்
"உங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் - இது பொதுக்கூட்ட முழக்கம்.
உங்களுக்கு இரண்டு சீட் போதும் - இது அறிவாலயப் புன்னகை.
அதிக இடஒதுக்கீடு பெற்றுத் தருவதாகச் சொல்லி,
அரசியல் களத்தில் அவர்களுக்கு இடமே ஒதுக்காமல் செய்வது...
பசியோடு இருப்பவனுக்கு - பிரியாணி அண்டாவை
வெளியே இருந்து தொட்டுக் கும்பிடச் சொல்வதற்குச் சமம்!
கொள்கை ஒரு பக்கம்...
கொடுக்கிற சீட் மறுபக்கம்!
சூரியன் உதிப்பது எல்லோருக்கும் ஒளி தரத்தான்,
ஆனால் அந்தப் பிரகாசமான வெளிச்சத்தில் -
கூட்டணிக் கட்சிகளின் முகவரி மட்டும்
ஏனோ 'இருட்டடிப்பு' செய்யப்படுகிறது!
அன்புடன்
மதுரைத்தமிழன்
#சமூகநீதி #திமுக #திராவிடமாடல் #அரசியல்சதி #திருமாவளவன் #கூட்டணிஅரசியல் #மதுரைத்தமிழன் #இடஒதுக்கீடு #அறிவாலயம் #TNPolitics

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.