Saturday, June 20, 2026

 

விருப்பம்  உள்ளவர்கள் இங்கேயும் என்னை தொடரலாம்

https://www.facebook.com/avargal.unmaigal/ 
https://www.youtube.com/@AvargalUnmaigal

திருப்பதி லட்டுக்கு வந்த ஆத்திரம்... ராமர் கோயில் கொள்ளைக்கு வராதது ஏன்? ஊடகங்களின் இந்த ஆண்மையற்ற மெளன விரதம் ஏன்!

Scroll down for the English and Hindi versions of this post.
     

#TirupatiLaddu, #RamMandirScam, #MediaHypocrisy,

திருப்பதிக் கோவில் லட்டு விவகாரம் என்றதும், மதம் அபாயத்தில் இருக்கிறது, புனிதம் கெட்டுவிட்டது என்று சமூக வலைதளங்கள் முதல் தெருமுனைப் போராட்டம் வரை அனல் பறந்தது. லட்டு கலப்படம் விவகாரத்தில் காட்டிய அந்தத் தீவிரம், பக்தர்களின் நியாயமான கோபமாகவே பார்க்கப்பட்டது.


ஆனால், இப்போது வரும் செய்திகள் மிகப்பெரிய கேள்வியை எழுப்புகின்றன. அயோத்தி ராமர் கோவிலில், ராமர் சிலையிலிருந்த விலைமதிப்பற்ற நகைகளும், சரண் பாதுகாக்களும் (Charan Paduka) கூட திருடப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. கோயிலுக்காக திரட்டப்பட்ட நிதிகள் சுருட்டப்பட்டு இருக்கின்றன என்ற தகவலும் வெளிவந்திருக்கிறது.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், லட்டு விவகாரத்தில் துடித்த அதே பக்திக் கும்பல், கடவுளின் நகைகளே திருடப்பட்ட செய்தி வந்தபோது ஏன் இவ்வளவு மவுனமாக இருக்கிறது?

உண்மையைச் சொல்லப்போனால், பி.ஜே.பி-யின் ஐடி விங் (IT Cell) இந்துக்களின் மூளையை எப்படி மழுங்கடித்து, அவர்களின் குரல்வளையை நெரித்திருக்கிறது பாருங்கள்! இதுவே ஒரு மாற்றுக்கட்சி மாநிலத்தில் நடந்திருந்தால், இந்நேரம் இந்து அமைப்புகள் கொக்கரித்திருக்கும், சாலைகளில் போராட்டம் வெடித்திருக்கும். ஆனால், கொள்ளையடிப்பது நம் ஆட்கள் என்பதால், இப்போது மட்டும் ஏன் இந்த ஆண்மை அற்ற மவுன விரதம்? கொள்ளையடிப்பது கூட இவர்களின் புதிய இந்து தர்மமோ?

லட்டு விவகாரத்தில் கிடைத்த ஆத்திரம், நகைகள் மற்றும் நிதி விவகாரத்தில் ஏன் வரவில்லை? இதுதான் நான் கேட்கும் அடிப்படை கேள்வி. இங்கே உண்மை என்னவென்றால், இது பக்தியல்ல... இது வெறும் பிசினஸ்! லட்டு கலப்படம் என்பது ஒரு சென்டிமென்ட் விவகாரம், ஆனால் நகைகள் மற்றும் நிதி விவகாரங்கள் இவர்களின் அரசியல் லாபத்தோடு தொடர்புடையது. அந்த லாபம் குறையக்கூடாது என்பதில் இவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்தால் பக்தர்களாகத் தெரியவில்லை; வெறும் மத வியாபாரிகளாகத்தான் தெரிகிறார்கள். இவர்களுக்குத் தேவை கடவுள் அல்ல, கையில் கிடைக்கும் கல்லாப்பெட்டி. லட்டு கலப்படத்தைக் கண்டு கொதிப்பவர்கள், ராமர் நகைகள் திருட்டையும், நிதி கொள்ளையையும் கண்டு மவுனம் காப்பது, அவர்கள் பக்தர்களை ஏமாற்றும் ஒரு தந்திரம் என்பதை மக்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

அவர்கள் மட்டுமா மவுனம் காக்கிறார்கள்? மானம் கெட்ட ஊடகங்களும், அவர்கள் போடும் பிச்சைகளுக்காக அவர்களின் கால்களை நக்கிக்கொண்டு அல்லவா மவுனம் காக்கிறது? இதைத்தான் வேசித்தனம் என்று சொல்ல வேண்டும்.

இனிமேலாவது கண் திறந்து பாருங்கள்! பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற மத வியாபாரிகளின் கையில் இந்துக்களின் குரலை அடமானம் வைத்தது போதும். உங்களுக்கு என்று சொந்தமாக, எவருக்கும் அடங்காத, உண்மையான மாற்று ஊடகத்தை உருவாக்காதவரை, இந்த அயோக்கியர்கள் உங்களை எப்போதும் இப்படித்தான் ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு உடந்தையாக இருக்கும் தலைவர்களா உங்கள் மதத்தைக் காப்பாற்றப் போகிறார்கள்? அல்லது நாட்டை வளப்படுத்தப் போகிறார்கள்? ஆமாம் என்று நீங்கள் நம்பினால், உலகிலேயே ஒரு முட்டாள்தனமான சமூகமாகத்தான் இந்திய சமூகத்தைப் பார்க்க முடியும்.

வெட்கங்கெட்ட இந்தியர்களே... நீங்கள் எப்போதுதான் மாறப்போகிறீர்கள்?

 


விஜய் முகத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் வலி! - ஒரு AI மூலம் வெளிச்சத்திற்கு வந்த உளவியல் மர்மம்.  https://avargal-unmaigal.blogspot.com/2026/06/ai-vijay-psychologicalanalysis.html

விஜய்யின் முகபாவனை பற்றி AI மூலம் செய்த ஆய்வின் முடிவு



 
தீக்குச்சிகள் ஏன் விற்கவில்லை? - மாறிய திமுகவும், தணிந்த தியாகங்களும்!   https://avargal-unmaigal.blogspot.com/2026/06/tnpolitics-digitalpolitics.html



### English Translation

**Why the anger for Tirupati Laddu... but not for the Ram Temple theft? Why this impotent vow of silence by the media!**

When the issue of Tirupati Laddu arose, the fire spread from social media to street protests, claiming that religion is in danger and sanctity has been destroyed. The intensity shown in the Laddu adulteration issue was seen as the justifiable anger of devotees.

But, the news coming in now raises a huge question. News is emerging that the precious jewels on the Ram idol and even the *Charan Padukas* (footwear) in the Ayodhya Ram Temple have been stolen. Information has also surfaced that the funds collected for the temple have been swindled.

What we need to notice here is, why is the same group of devotees who fretted over the Laddu issue so silent when the news came that God's jewels themselves have been stolen?

To tell the truth, look at how the BJP's IT Cell has blunted the brains of Hindus and choked their voices! If this had happened in a state ruled by an opposition party, by now Hindu organizations would have crowed, and protests would have erupted on the streets. But, because the ones looting are 'our own people', why this impotent vow of silence now? Is looting even their new Hindu Dharma?

The anger that was found in the Laddu issue, why didn't it come for the jewels and funds issue? This is the fundamental question I am asking. The truth here is, this is not devotion... this is just business! Laddu adulteration is a sentimental issue, but the jewelry and fund issues are connected to their political profit. They are careful that their profit should not diminish.

Looking at them, they don't look like devotees; they only look like religious traders. What they need is not God, but the cash box in their hand. When will the people realize that those who boil over the Laddu adulteration, but maintain silence at the theft of Ram's jewels and financial looting, are merely using a ploy to cheat devotees?

Are they the only ones maintaining silence? The shameless media, too, is maintaining silence while licking the feet of those who throw them alms. This is what must be called prostitution (referring to journalistic integrity).

At least from now on, open your eyes! It is enough to have mortgaged the voice of Hindus in the hands of religious traders like the BJP, RSS, and VHP. As long as you do not create an independent, truly alternative media of your own that does not bow to anyone, these scoundrels will always keep cheating you like this.

Are the leaders who are complicit in this going to save your religion? Or are they going to enrich the country? If you believe 'yes', then Indian society can only be seen as the most foolish society in the world.

Shameless Indians... when are you going to change?

---

### Hindi Translation

**तिरुपति लड्डू के लिए आया गुस्सा... राम मंदिर लूट के लिए क्यों नहीं? मीडिया का यह नपुंसक मौन व्रत क्यों!**


जब तिरुपति लड्डू का मुद्दा उठा, तो सोशल मीडिया से लेकर सड़क के प्रदर्शनों तक आग फैल गई, यह दावा करते हुए कि धर्म खतरे में है और पवित्रता नष्ट हो गई है। लड्डू में मिलावट के मुद्दे पर दिखाई गई वह तीव्रता, भक्तों के न्यायसंगत गुस्से के रूप में देखी गई थी।

लेकिन, अब जो खबरें आ रही हैं, वे एक बड़ा सवाल खड़ा करती हैं। खबरें आ रही हैं कि अयोध्या राम मंदिर में राम की मूर्ति पर लगे कीमती गहने और यहाँ तक कि 'चरण पादुका' भी चोरी हो गए हैं। यह जानकारी भी सामने आई है कि मंदिर के लिए इकट्ठा किया गया धन हड़प लिया गया है।

हमें यहाँ यह गौर करना चाहिए कि लड्डू के मुद्दे पर तड़पने वाला वही भक्त समूह, जब यह खबर आई कि भगवान के गहने ही चोरी हो गए हैं, तो इतना चुप क्यों है?

सच कहें तो, देखिए कैसे बीजेपी की आईटी सेल ने हिंदुओं के दिमाग को कुंद कर दिया है और उनकी आवाज को दबा दिया है! अगर यह किसी विपक्षी दल द्वारा शासित राज्य में हुआ होता, तो अब तक हिंदू संगठन शोर मचा रहे होते और सड़कों पर विरोध प्रदर्शन फूट पड़े होते। लेकिन, चूँकि लूटने वाले 'हमारे अपने लोग' हैं, तो अब यह नपुंसक मौन व्रत क्यों? क्या लूटपाट करना ही इनका नया हिंदू धर्म है?

लड्डू के मुद्दे पर जो गुस्सा मिला, वह गहनों और धन के मुद्दे पर क्यों नहीं आया? यह वह बुनियादी सवाल है जो मैं पूछ रहा हूँ। यहाँ सच यह है कि यह भक्ति नहीं... यह सिर्फ बिजनेस है! लड्डू में मिलावट एक भावनात्मक मुद्दा है, लेकिन गहने और धन के मुद्दे उनके राजनीतिक लाभ से जुड़े हैं। वे इस बात को लेकर सतर्क हैं कि उनका वह लाभ कम नहीं होना चाहिए।

इन्हें देखकर ये भक्त नहीं लगते; ये सिर्फ धार्मिक व्यापारी लगते हैं। इन्हें भगवान की नहीं, हाथ में मिलने वाले कैश बॉक्स की जरूरत है। लोग कब समझेंगे कि जो लड्डू में मिलावट देखकर उबल पड़ते हैं, वे राम के गहनों की चोरी और धन की लूट पर जो मौन साधे हुए हैं, वह भक्तों को ठगने की उनकी एक चाल है?

क्या सिर्फ वे ही मौन साधे हुए हैं? बेशर्म मीडिया भी, जो उन्हें भीख मिलती है, उसके लिए उनके तलवे चाटते हुए मौन साधे हुए है। इसे ही वेश्यावृत्ति (पत्रकारिता की अखंडता के संदर्भ में) कहना चाहिए।

कम से कम अब तो अपनी आँखें खोलें! बीजेपी, आरएसएस, वीएचपी जैसे धार्मिक व्यापारियों के हाथों में हिंदुओं की आवाज को गिरवी रखना काफी है। जब तक आप अपना खुद का एक स्वतंत्र, वास्तव में वैकल्पिक मीडिया नहीं बनाते, जो किसी के सामने न झुके, तब तक ये बदमाश आपको हमेशा ऐसे ही ठगते रहेंगे।

क्या इसमें शामिल नेता आपके धर्म को बचाने वाले हैं? या वे देश को समृद्ध बनाने वाले हैं? यदि आप 'हाँ' मानते हैं, तो भारतीय समाज को दुनिया के सबसे मूर्ख समाज के रूप में ही देखा जा सकता है।

बेगैरत भारतीयों... तुम कब बदलने वाले हो?

அன்புடன்,
உங்கள் மதுரைத்தமிழன்

#அவர்கள்உண்மைகள் #TirupatiLaddu #RamMandirScam #MediaHypocrisy

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.