தமிழக அரசியல் களத்தில் இப்போது ஒரு புதிய 'விதிமுறை' அமலுக்கு வந்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இனி எந்தவொரு அரசியல் கூட்டணியோ, கட்சி மாற்றமோ அல்லது அதிரடி அறிவிப்போ இருந்தாலும், அதை வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) மட்டுமே வெளியிட வேண்டுமாம்!
காரணம் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வார இறுதியில் (சனி, ஞாயிறு) வீட்டில் ஓய்வெடுக்கும் இந்த "மதுரைத் தமிழன்" (அதாவது நான் தான்!), அரசியல் தலைவர்கள் செய்யும் குளறுபடிகளைப் பார்த்துவிட்டு, சும்மா இருக்காமல் கண்ணாபின்னாவென்று நக்கல் நையாண்டி செய்து, பதிவுகளைப் போட்டு, அவர்களின் மானத்தை வாங்கிவிடுகிறாராம்!
தலைவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து, அதற்கு நையாண்டி மேளம் கொட்டுகிறாரே... இதையெல்லாம் எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! என்று தலைவர்கள் கதறுகிறார்களாம். அடிக்கும் மேல் அடி கொடுத்து, நையாண்டியால் வதம் செய்கிறாரே என்றுதான் இந்த வார இறுதி அரசியல் சத்தமில்லாத அறிவிப்பு என்கிறார்கள்.

மதுரைத் தமிழனின் பதில்:
தலைவர்களே, நீங்கள் அறிவிப்பை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். ஆனால், வார இறுதியில் வெளியிட்டால்தான் நான் என் மனைவியின் தாக்குதலில் இருந்து தப்பித்து உங்களை கலாய்க்க முடியும் எனக்காக இதை நீங்க செய்யாமாட்டீர்களா என்ன?

|
|
பாமக தொண்டர்களுக்கு ஒரு கேள்வி: நீங்க அடிமைகளா, இல்ல விடியலுக்காக உழைப்பவர்களா? https://avargal-unmaigal.blogspot.com/2026/06/pmkpolitics-tamilnadupolitics.html
அதிகார அடிமைகள்: இவர்களின் ஒரே தகுதி ஷூ நக்குவதுதான்! https://avargal-unmaigal.blogspot.com/2026/06/blog-post_26.html
|
|
அன்புடன்
மதுரைத்தமிழன்
#மதுரைத்தமிழன் #அரசியல்நையாண்டி #தமிழகஅரசியல் #சனிஞாயிறுஸ்பெஷல் #அரசியல்அபத்தங்கள் #வைகோஸ்டாலின் #மீம்அரசியல் #AvargalUnmaigal #TamilPolitics #PoliticalSatire

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.