Monday, June 1, 2026

 சின்னம் 'சூரியன்'... சித்தாந்தம் 'துரதிர்ஷ்டம்' - துரை வைகோவின் 'ஞானோதயம்'!
    

#துரைவைகோ, #DuraiVaiko, #ஸ்டாலின், #திமுக, #மதிமுக, #உதயசூரியன், #தமிழகஅரசியல்2026, #அவர்கள்உண்மைகள், #மதுரைத்தமிழன், #TNPolitics2026,


"திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது..." என்று  துரை வைகோ இப்போது உருகியிருக்கிறார்.

தேர்தல் களம் வந்தபோது, தங்களின் சுயத்தைக் காற்றில் பறக்கவிட்டு, உதயசூரியன் சின்னத்தின் நிழலில் தஞ்சம் புகுந்தவர்கள் இன்று "அதில் போட்டியிட்டது என் துரதிர்ஷ்டம்" என்று தத்துவம் பேசுகிறார்கள்.


அடடா... தேர்தல் நேரத்தில் கூட்டணிக் கட்சிகளை அறிவாலயம் எப்படி எல்லாம் அலறவிட்டது, சீட்டுக்காக எவ்வளவு கெஞ்ச வைத்தது, 'சொந்தச் சின்னம்' என்று வாய் திறந்தவர்களை எல்லாம் எப்படி மிரட்டித் தங்களது 'சூரியன்' சின்னத்திற்குள் அடக்கியது என்றெல்லாம் நாம் பார்த்தபோது, "என்னடா இது... ஸ்டாலின்  இவ்வளவு கராராக இருக்கிறாரே, கொஞ்சம் அனுசரித்துப் போகலாமே..." என்று  நம்மை போல உள்ள பலர் நினைத்திருப்போம் 

ஆனால், தேர்தல் முடிந்து, சீட்டும் ஜெயித்து, பதவியும் வந்த பிறகு... "அய்யோ, அந்தச் சின்னத்தில் நின்றது என் துரதிர்ஷ்டம்" என்று தம்பி துரை வைகோ இப்போது கொடுக்கும் 'பில்டப்'-பைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது..., வேரின் நன்றியை மறந்துவிட்டு கிளைகள் பேசும் இந்த 'முதேவிகளின்' (அரசியல் மேதாவிகளின்) சுயரூபத்தை அன்றே கணித்து  ஸ்டாலின் எடுத்தது எவ்வளவு தீர்க்கதரிசனமான முடிவு என்று! இப்படிப்பட்ட 'முதேவிகளுக்கு' (மன்னிக்கவும்... அரசியல் மேதாவிகளுக்கு) அன்றைக்கு அறிவாலயம் செய்த அத்தனை கச்சேரிகளும், காட்டிய கரார் தனமும் 100% சரிதான் என்பது இப்போது அல்லவா வெட்டவெளிச்சமாகப் புரிகிறது!

சின்னத்தையும் வாங்கிக்கொண்டு, சீட்டையும் வாங்கிக்கொண்டு, ஓட்டையும் வாங்கிக்கொண்டு... இப்போது வந்து 'துரதிர்ஷ்டம்' என்று தத்துவம் பேசும் இந்தச் 'சாணக்கியத்தனத்தை' என்னவென்று சொல்வது?


கஷ்டம் வரும் போது நம்முடன்  உடன் இருப்பவர்கள்தான் உண்மையான நட்பு & உறவு என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.  அது ஸ்டாலினுக்கு மிக பொருந்தும். அவருடைய உண்மையான நட்புகள் யார் என்பதை இந்த்த தேர்தலின் தோல்வியின் மூலம் கற்றுக் கொள்ளும் மிகப் பெரிய வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பது அவருக்கு  மிக அதிர்ஷடமே

 
 


ஆதவ் அர்ஜுனா: தமிழக அரசியலின் புதிய கார்ப்பரேட் சாணக்கியனா?  https://avargal-unmaigal.blogspot.com/2026/05/aadhavarjuna-politicalchanakyan.html




அன்புடன்,
மதுரைத்தமிழன்

#DuraiVaiko, #ஸ்டாலின், #திமுக, #மதிமுக, #உதயசூரியன், #தமிழகஅரசியல்2026, #அவர்கள்உண்மைகள், #மதுரைத்தமிழன், #TNPolitics2026,

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.