உலக அரங்கில் பாரதப் பிரதமர் மோடிஜிக்கு கிடைக்கும் மரியாதையைப் பற்றி நாள்தோறும் ஊடகங்கள் பக்கம் பக்கமாகப் புகழ்ந்து தள்ளுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்வது, அங்கே இருக்கும் இந்தியர்களை ஒரு அரங்கத்தில் கூட்டி வைத்து சினிமா நட்சத்திரங்களைப் போல கைகொட்டச் செய்வது, சில உள்ளூர் பெண்களை இந்தியப் பாரம்பரிய நடனம் ஆட வைப்பது, பிறகு அந்த நாட்டிடம் தனக்குத் தானே ஒரு விருதைக் கேட்டு வாங்குவது இதுதான் இன்றைய தேதியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாகவும், தேசத்தின் மரியாதையாகவும் கட்டமைக்கப்படுகிறது.
ஆனால், உண்மையான மரியாதை என்பது இத்தகைய சுய விளம்பரங்களால் சம்பாதிக்கப்படுவதல்ல. அது ஒரு நாட்டின் வலிமையான செயல்களிலிருந்தும், தன் நாட்டு மக்களின் நலனுக்காகச் சமரசம் இன்றி எடுக்கப்படும் முடிவுகளிலிருந்தும் மட்டுமே கிடைக்கும் என்பதை சமீபத்திய நிகழ்வுகள் முகத்தில் அறைந்தாற்போல உணர்த்துகின்றன.
ஓமன் வளைகுடாவில் நடந்த அந்தச் சம்பவம், இந்தியாவின் போலிப் பெருமிதங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது. ஈரான் துறைமுகங்கள் மீதான தடையை மீறியதாகக் கூறி, அமெரிக்கக் கடற்படை இரக்கமின்றி நடத்திய தாக்குதல்களில் எம்.டி செட்டபெல்லோ உள்ளிட்ட கப்பல்களில் பணியாற்றிய மூன்று அப்பாவி இந்திய மாலுமிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர். ஆதித்யா சர்மா போன்ற 23 வயது இளைஞர்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைத் தொடர்புகொண்டு தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்ததோடு, இது நியாயமற்ற தாக்குதல் என்று கூறினார். டெல்லியில் உள்ள அமெரிக்க அதிகாரியை இரண்டு முறை நேரில் அழைத்து இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. ஆனால், மூலோபாயப் கூட்டாளி என்று நம்மால் கொண்டாடப்படும் அமெரிக்கா, இதற்குக் கொடுத்த பதிலடிதான் நம் வெளியுறவுக் கொள்கையின் லட்சணத்தை உலகிற்குக் காட்டுகிறது.
மூன்று இந்தியர்களின் மரணத்திற்காக ஒரு சிறு வருத்தத்தைக் கூடத் தெரிவிக்காத அமெரிக்காவின் மார்கோ ரூபியோ, அமெரிக்கப் படைகளின் உத்தரவுகளுக்கு வணிகக் கப்பல்கள் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும் என்றும், தடையை மீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மிக ஆணவமாகப் பதிலளித்துள்ளார்.
இதுதான் 'விஸ்வகுரு' என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியாவிற்கு உலக அரங்கில் இருக்கும் உண்மையான மரியாதையா? சொந்த நாட்டு மாலுமிகள் சர்வதேசக் கடல் பரப்பில் கொல்லப்படும்போது, அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்குப் பணிந்து நிற்பதுதான் பலமான தலைமையின் அடையாளமா? வெளிநாடுகளில் தம்பட்டம் அடித்துக்கொள்வதும், உள்நாட்டுத் தேர்தல் அரசியலுக்காக வெற்று நாடகங்கள் ஆடுவதும் எந்த வகையிலும் தேசத்தின் பாதுகாப்பையோ, மக்களின் உயிரையோ காப்பாற்றப் போவதில்லை. நிஜமான கௌரவம் என்பது மேடைப் பேச்சுகளில் இல்லை, வல்லரசு நாடாக இருந்தாலும் தன் நாட்டு மக்களின் ரத்தம் சிந்தப்படும்போது அதன் கண்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் துணிச்சலில் மட்டுமே இருக்கிறது.
சரி, மோடிக்குத்தான் அந்தத் துணிச்சல் இல்லை; காரணம் அவர் காற்று அடைத்த பலூன். ஆனால், தேச பக்தி கொண்ட ஆண்மையுள்ள மக்கள் இந்தியாவில் இல்லவே இல்லையா? உலக மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் இந்தியாவில் உண்மையான தேசபக்தியுள்ளவர்கள் யாரும் இல்லை என்பது மிகவும் கேவலமாகத்தான் இருக்கிறது. தலைவர்தான் அமைதி காக்கிறார் என்றால், மக்களாவது தெருவில் இறங்கி அமெரிக்காவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் பண்ணி இந்தியாவையே கலகலத்துப் போகும் அளவிற்குச் செய்திருக்கலாம் அல்லவா?
இந்தப் பதிவை படித்த அனைவரிடமும் நான் கேட்கும் கேள்வி இதுதான் .அமெரிக்காவின் இந்தத் திமிர்த்தனமான தாக்குதலையும், அதற்கு வெறும் 'கண்டனம்' மட்டுமே தெரிவித்துவிட்டு மண்டியிட்டுச் சலாம் போடும் இந்திய அரசின் கையாலாகாத்தனத்தையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று உங்கள் மனம் திறந்து சொல்ல முடியுமா? முடியும் என்றால் உங்கள் கருத்துகளைக் கீழே பதிவிடுங்கள்

சமுக வலைத்தளங்களைக் கலக்கும் அரசியல் நையாண்டிகள்: ‘மதுரைத்தமிழன்’ கார்ட்டூன் பக்கம்!
https://avargal-unmaigal.blogspot.com/2026/06/blog-post_13.html
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
#மோடி, #அமெரிக்கா, #இந்தியா, #மாலுமி, #மார்கோ_ரூபியோ

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.