அமெரிக்காவை உலுக்கிய கோரச் சம்பவம் எழுப்பும் கேள்வி: AI காரணமா அல்லது நாம் கவனிக்கத் தவறிய மனித வலியா?
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலம் ஆக்டன் நகரில் நடந்த இரட்டைக் கொலை, ஒரு குடும்பத்தின் சோகத்தைத் தாண்டி, நவீன சமூகத்தின் முன் ஒரு சங்கடமான கேள்வியை நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள ஆக்டன் (Acton) நகரின் அமைதியான புறநகர்ப் பகுதி, இதுவரை எந்தக் குடும்பமும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு சோகத்திற்கு ஆளாகியுள்ளது. இங்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 45 வயதான சுதா வெங்கடேசன் மற்றும் அவரது 14 வயது இளைய மகன் சித்தார்த் அரவிந்த் ஆகியோர் தங்களது சொந்த வீட்டிலேயே பலத்த காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வழக்கம் போல் வீட்டிற்கு வந்த தனிப்பயிற்சி ஆசிரியர் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முயன்றபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் வீட்டைச் சோதனையிட்டபோது , முதல் தளத்தில் சித்தார்த்தும், கீழ் தள நிலவறையில் (basement) சுதா வெங்கடேசும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கொல்லப்பட்ட சுதாவின் 17 வயது மூத்த மகன் அர்ஜுன் அரவிந்த் தனது தாயின் காரை எடுத்துக் கொண்டு தப்பியோட, வெய்லேண்ட் பகுதியில் காவல்துறையினர் அவரைத் துரிதமாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்துள்ளனர்
இந்த வழக்கில் மக்களின் கவனத்தை அதிகமாக இழுத்திருப்பது, அந்த மாணவனின் இணைய மற்றும் #ChatGPT பயன்பாடு பற்றிய விசாரணைத் தகவல்கள்தான். குடும்பத்தினரைக் கொல்வது தொடர்பான கற்பனைகள், சூழ்நிலைகள் மற்றும் வன்முறை சார்ந்த தேடல்கள் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தேடல்களே இந்தக் குற்றத்துக்கான நேரடி நோக்கம் அல்லது காரணம் என்று அதிகாரிகள் இதுவரை உறுதி செய்யவில்லை. அதனால் இது ChatGPT செய்த கொலை என்று ஒரு வரியில் தீர்ப்பளிக்கக்கூடிய சம்பவம் அல்ல.
ஒரு கத்தியால் காயப்படுத்த முடியும் என்பதற்காகக் கத்தியே கொலைகாரன் ஆகிவிடாது. அதுபோல, ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியில் இருண்ட கேள்வி கேட்கப்பட்டது என்பதற்காக, அந்த இயந்திரமே ஒரு மனிதனின் முடிவுக்கு முழுப் பொறுப்பாகிவிட முடியாது. தொழில்நுட்பம் ஒரு கருவி. சில நேரங்களில் அது பதில் சொல்லும் கருவி சில நேரங்களில் அது மனித மனதின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடி. கண்ணாடியில் தெரியும் முகம் நமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, கண்ணாடியை உடைத்துவிட்டால் முகம் மாறிவிடாது.
ஆனால் அதே நேரத்தில், AI வெறும் கருவிதான் என்று சொல்லிவிட்டு சமூகத்தின் பொறுப்பில் இருந்து நழுவிவிடவும் முடியாது. ஒரு இளைஞன் தனது அறைக்குள் நீண்ட நேரம் மூடிக்கொண்டு வாழும்போது, அவனது கோபம், பயம், தனிமை, குழப்பம் இவற்றை யார் கவனிக்கிறார்கள். குடும்பத்தில் தினமும் பேசப்படும் விஷயம் மதிப்பெண், வேலை, செலவு, எதிர்காலம் மட்டும்தானா . நீ உண்மையில் நலமா இருக்கியா என்று கேட்க யாருக்காவது நேரம் இருக்கிறதா.
இன்றைய குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இணையத்தில் தனியாக இல்லை அவர்கள் ஆயிரக்கணக்கான தகவல்களுக்குள் தனிமையாக இருக்கிறார்கள். திரையில் கேள்வி கேட்டால் உடனே பதில் கிடைக்கும். ஆனால் மனசுக்குள் இருக்கும் கேள்வியைச் சொல்ல ஒரு மனிதன் அருகில் கிடைப்பது எப்போதும் உறுதி அல்ல. அதுதான் இந்தச் சம்பவத்தின் மிகக் கசப்பான பக்கம்.
அர்ஜுன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரிக்கும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும். அதேபோல், ChatGPT அல்லது எந்த AI கருவியின் பங்கு இருந்ததா, இருந்தால் எந்த அளவுக்கு இருந்தது என்பதையும் விசாரணை முடிவுகள் மட்டுமே தெளிவுபடுத்த முடியும். ஆனால் சட்ட விசாரணைக்கு அப்பால் சமூகத்தை நோக்கி எனக்குள் சில கேள்விகள் எழுகின்றன
நம் பிள்ளைகள் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதற்கும் முன் அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைக் கேட்கிறோமா?
அவர்களுக்கு இணையப் பாதுகாப்பு பற்றி சொல்வதுபோல், கோபம், மன அழுத்தம், வன்முறை எண்ணம் வந்தால் உதவி கேட்பது தவறல்ல என்றும் சொல்லிக் கொடுக்கிறோமா திரை நேரத்தைக் குறைப்பதற்கான விதிகள் இருக்கின்றன. ஆனால் மனசைத் திறந்து பேசுவதற்கான நேரம் இருக்கிறதா?
அமெரிக்கா ஆக்டனில் நடந்தது ஒரு குடும்பத்தின் அழியாத இழப்பு. அதை sensational headline-ஆக மாற்றிவிடாமல், ஒரு எச்சரிக்கையாகப் பார்க்க வேண்டும். இயந்திரங்களுக்கு மனசாட்சி இல்லை. அவற்றுக்கு துயரமும் இல்லை. இழப்பும் இல்லை.ஆனால் மனிதர்களாகிய நமக்கு இது எல்லாம் இருக்கிறது.
அதனால், என் மனதில் எழும் உண்மையான கேள்வி, இயந்திரம் என்ன சொன்னது என்பது மட்டும் அல்ல. நம் அருகில் இருந்த மனிதன் அமைதியாக உடைந்து கொண்டிருந்தபோது, நாம் ஏன் அதை கவனிக்கவில்லை என்பதுதான்.
குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்; பெரிய வேலைக்குப் போக வேண்டும்; குடும்பத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும்இவை எல்லாம் பெற்றோரின் இயல்பான ஆசைகள்தான். ஆனால் அந்த ஆசைகள், குழந்தையின் மனதைப் புரிந்துகொள்ளும் பொறுப்பை விடப் பெரியதாகிவிடக் கூடாது.
தினமும் சில நிமிடங்களாவது அவர்களுடன் பேச வேண்டும். என்ன படித்தாய்எ ன்று மட்டும் அல்ல எப்படி இருக்கிறாய் , எதாவது மனசில் இருக்கா யாராவது உன்னை காயப்படுத்துகிறார்களா என்றும் கேட்க வேண்டும்.
மற்றவர்களின் குழந்தைகளோடு ஒப்பிட்டு அழுத்தம் கொடுப்பதற்குப் பதில், நம் குழந்தையின் பயம், கோபம், தனிமை, துக்கம் ஆகியவற்றைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உதவி தேவைப்பட்டால் அதை கேட்பது பலவீனம் அல்ல என்பதையும் சொல்லித் தர வேண்டும்.
ஒரு குடும்பத்தில் உரையாடல் உயிரோடு இருந்தால், எல்லா சோகங்களையும் தடுக்கலாம் என்று யாரும் உறுதி சொல்ல முடியாது. ஆனால் தனிமையில் மூழ்கும் ஒரு குழந்தையை முன்கூட்டியே கவனித்து, சரியான உதவிக்குச் சேர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இயந்திரங்களுக்கு மனசாட்சி இல்லை இழப்பின் வலி தெரியாது. ஆனால் மனிதர்களாகிய நமக்கு அது உண்டு.
அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். குழந்தைகளின் மதிப்பெண்களை மட்டும் அல்ல, அவர்களின் மனதையும் வாசிப்போம்.
டிஸ்கி : இந்த சம்பவம் மட்டுல்ல .எனது அடுத்தடுத்த பதிவில் இது போன்ற இந்திய இளம் வயதினரால் ஏற்படும் குற்றங்கள் இரண்டையும் நாம் பார்க்க இருக்கிறோம்.. இந்திய குடும்பங்கள் அமெரிக்காவில் எப்படி பல பிரச்சனைகளை சந்திக்கின்றன என்பதையும் பார்ப்போம். இப்படி உலகில் நடக்கும் சம்பவங்களை வெறும் செய்திகளாக தாரமல் மனித மனங்கள் என்ன நினைக்கிறது என்பதையும் உங்களுடன் சுவராஸ்யமாக பகிர்கின்றேன்.
படிக்காதவர்கள் படிக்க
அடிமைக் கூட்டமும் வடை சுடும் அரசியலும்! சுதந்திர தின ஸ்பெஷல் நையாண்டிப் பார்வை https://avargal-unmaigal.blogspot.com/2026/08/independenceday-maduraitamizhan.html
#IndependenceDay #MaduraiTamizhan #PoliticalSatire #TamilBlogs #சுதந்திரதினம் #நையாண்டி
மிகுந்த மனவருத்தத்துடன்,
உங்கள் மதுரைத்தமிழன்

#America,#ActonMA #MassachusettsCrime #TrueCrimeTamil #ChatGPTInvestigation #USCrimeNews #IndianOriginTeen #TamilBlogs #CyberForensics #SuburbanTragedy #ParentingMindset

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.