Saturday, August 1, 2026


அதிமுக/திமுக-வை மிஞ்சிய ஆன்மிக அரசியல்: முதல்வரின் கண்ணீரும், ஆண்டவனின் இரக்கமும்!"

  

#PoliticalSatireTamil  #TVK  #VijayPolitics  #CauveryWater  #TamilNaduPolitics  #AvargalUnmaigal  #Mekedatu



தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைகாகவும்,  மேகதாது அணைக்கட்டு  பிரச்சனைக்காகவும் ,தமிழக முதல்வர் கர்நாடாக சென்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டார். ஆனால் கர்நாடக முதல்வர் சந்திப்பு இப்ப வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டார். 

இதை அறிந்த தமிழக முதலவர் விஜய் மனமுடைந்து போனார். தன்னை முதல்வாரக்கிய தமிழ் மக்களுக்கு என்னால் உதவ முடியவில்லையே என்று பெரும் துயரில் ஆழ்ந்தார். நேற்று அலுவலகத்திற்கு எடுத்து சென்ற மதிய உணவை கூட அவர் சாப்பிடவில்லை. வழக்கமாக மனது துயர் உரும் நேரத்தில் , தனது தோழி த்ரிஷாவிடம் சென்று மன ஆறுதல் பெறுவார் . நேற்று அதையும் செய்யவில்லை .


 நேராக  தனது வீட்டிற்கு சென்றார் . வீட்டில் உள்ளவர்களை வெளியே போக சொல்லிவிட்டு , கண்களை மூடி இரவு முழுவதும் அழுது மன்றாடி ஜெபம் செய்தார் . அவரின் ஜெபத்திற்கு செவி சாய்த்த ஆண்டவர், அவர் மீது இரக்கம் காட்டி மகனே பொதுமக்களுக்காக நீ செய்த ஜெபம் என்னையே உருக வைத்துவிட்டது . இப்படிப்பட்ட  தலைவர்கள் அரிதாகத்தான் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள் .அதில் நீயும் ஒருவன் என்பதை  நான் அறிந்து கொண்டேன். நீ ஜெபம் செய்தது போதும், உணவு உண்டு படுக்கைக்கு செல். உன் ஜெபம் பலிக்கும் என்றார் .

இன்று காலையில் கண் விழித்த தமிழக முதல்வர் முதலில் படித்த செய்தி கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுகிறது என்ற  செய்திதான். அதை பார்த்ததும் அவர் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த திராவிடப் பூமியில் ஆன்மிகம் மூலம் எதையும்  சாதிக்கலாம் என்பதை நம் தமிழக முதல்வர் சாதித்து காட்டிவிட்டார். மக்களே அப்படிப்பட்ட முதல்வரை நமக்கு இறைவன் தந்தற்காக நாம் நன்றி சொல்லுவோம்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

#PoliticalSatireTamil  #TVK  #VijayPolitics  #CauveryWater  #TamilNaduPolitics  #AvargalUnmaigal  #Mekedatu#அவர்கள்உண்மைகள், #தமிழகஅரசியல், #காவிரிநீர், #ஆன்மிகஅரசியல், #நையாண்டி, #VijayPolitics,

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.