Thursday, July 30, 2026

 ஸ்டாலின் அவர்களே... ஆய்வு செய்ய வேண்டியது EVM-ஐ அல்ல, உங்கள் சுற்றத்தை 'ஆடிட்' செய்யுங்கள்!
    

#MKStalin, #EVM, #TamilPolitics, #DMK, #AvargalUnmaigal,


ஸ்டாலின் அவர்களே... EVM ஒன்றும் கிழடி அல்ல, நீங்கள் நினைத்த மாத்திரத்தில் எட்டிப் பார்த்து, ஆராய்ச்சி செய்து உண்மைகளைப் பிடிப்பதற்கு அது ஒன்றும் எளிய பொருள் கிடையாது.

ஒருவேளை யாராவது திட்டமிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM) தங்களுக்குச் சாதகமாக மாற்றியமைத்திருந்தால், அதை நீங்கள் ஆய்வுகள் மூலம் எளிதாகக் கண்டுபிடிக்கும்படி அப்படியே திறந்துவைத்திருப்பார்கள் என்று நினைப்பது அப்பட்டமான அப்பாவித்தனம். திருடனிடமே போய், தயவு செய்து உங்கள் திருட்டை நீங்களே எங்களுக்கு நிரூபித்துக் கொடுங்கள்  என்று கேட்பது மாதிரிதான், கொளத்தூர் தொகுதியில் EVM-ஐ  ஆய்வு செய்யுங்கள் என்று கோரிக்கை வைப்பது.

தேர்தலில் தோற்றுவிட்டதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து எப்படி மீண்டு வருவது, புதிய காலத்தின் அரசியலில் எப்படி காய் நகர்த்துவது என்பதைக் கற்றுக்கொள்வதே ஒரு நல்ல தலைவருக்கு அழகு. காலம் வேகமாகச் சுழலுகிறது. மக்களின் தேவைகளும் சிந்தனைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு, குறிப்பாக இளம் தலைமுறைக்கு ஏற்றவாறு யார் செயல்படுகிறார்களோ, அவர்கள்தான் எதிர்காலத்தின் ஆட்சியாளர்கள் என்பது நூறு சதவீதம் உறுதி!

ஒன்று மட்டும் பக்கா கன்ஃபார்ம். ஒருவேளை அவர்கள் திட்டமிட்டு EVM-களில் கைவரிசை காட்டியிருந்தால், அந்தத் திருட்டுத்தனம் சாதாரண மக்களின் கண்களுக்கு எப்படித் தெரியும். கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அத்தனைத் துல்லியமாக மதில் மேல் பூனை மாதிரி காய்களை நகர்த்தியிருப்பார்கள். அதை விட்டுவிட்டு நாம் இன்னும் மெஷின்ல ஏதோ பிழை இருக்கு என்று தேடிக்கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

அதை நீங்கள் எக்காலத்திலும் கண்டறிய முடியாதவாறு அவர்கள் நிச்சயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஸ்டாலின் அவர்களே... EVM-ஐச் சந்தேகப்படுவதை விட்டுவிட்டு, உங்களுக்கு இப்படி வீணான  அறிவுரை சொல்லிக் கொடுக்கும் உங்களை சுற்றியுள்ள கும்பலைச் சற்று தூரத்தில் வையுங்கள். உங்கள் கட்சியைச் சுற்றியிருக்கும் அந்த ஒட்டுண்ணிக் கூட்டத்தை நீங்கள் முதலில் ஆடிட் செய்யாத வரை, எந்த மெஷினும் உங்களைக் காப்பாற்ற முடியாது.


My Advice to Stalin : உண்மையை சொல்லப் போனால் களத்தில் இருந்து நீங்கள் ஒதுங்கி, அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, வழி நடத்துவதே உங்களுக்கு பெருமை தரும். களம் இளைஞர்களிடையே போய்விட்டது  என்பதை புரிந்து கொண்டாலே போதும்.


அன்புடன்,
மதுரைத்தமிழன்

#MKStalin, #EVM, #TamilPolitics, #DMK, #AvargalUnmaigal, #kolathur,#Recounting ,#result,

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.