வெற்றியின் முரண்
தேர்தல் களத்தில்
தோற்றுப் போனவன்
தன் பேரனின் பட்டமளிப்பு விழாவில்
பட்டப் பகல் வெளிச்சமாய்
சிரித்துக் கொண்டிருக்கிறான்!
அரசியல் சிம்மாசனத்தில்
வெற்றி வாகை சூடியவனோ
அதிகாரத்தின் அந்திப் பொழுதில்
அறமற்ற உறவின் மடியில்
தன் அந்தரங்கத்தை
அடகு வைத்துத் தொலைத்திருக்கிறான்!
வெற்றி தோல்விகள்
வாக்குப்பெட்டியில் இல்லை...
வாழ்க்கை அறத்தில் தான்
முடிவாகிறது!
டிஸ்கி : கிழேயுள்ள படத்தைதான் முதன் முதலில் பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன் . அதை பார்த்த நண்பர் உங்கள் கருத்தில் எப்போதும் கடுமை அதிகமாக இருக்கும் ஆனால் இது மிக சந்தாமாக இருக்கிறது. உங்களிடம் இருந்து வரும் அந்த ஆக்ரோஷம்தான் எனக்கு பிடிக்கும் என்று சொன்னதால் மேலே உள்ள பதிவு
அன்புடன்
மதுரைத்தமிழன்
#MKStalin#EditorialCartoon #SatireTamil #PoliticalCommentary #TVK


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.