மாணிக்கம் தாகூர் 59 ஆண்டுகளாக கோமாவில் இருந்தாரா? அல்லது மூளையை அடகு வைத்திருந்தாரா?
காமராஜருக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு நேர்மையான முதலமைச்சர் கிடைக்கல. 59 வருஷத்துக்கு அப்புறம் மீண்டுமொருமுறை லஞ்சம் வாங்காத முதலமைச்சர், நேர்மையான முதலமைச்சர் வேண்டும் என்று விஜயை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” - - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
மதுரைத்தமிழன்: ஹரே மாணிக்கம் தாக்கூர் பைய்யா... 59 ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு நேர்மையான முதலமைச்சரே இல்லையா? அப்படியென்றால் அந்த 59 ஆண்டுகளில் உங்கள் கட்சி யாருடன் கைகோர்த்தது? யாரை மக்கள் நலன் காக்கும் தலைவர் என்று மேடைகளில் புகழ்ந்தது? யாருக்காக வாக்கு கேட்டது? யாருடைய ஆட்சிக்கு நம்பிக்கை தீர்மானம் தந்தது? கொஞ்சம் வரலாற்றுப் புத்தகத்தையும் திறந்து வைத்து பதில் சொல்லுங்கள்.
ஏனென்றால் நேற்று வரை உங்கள் கூட்டணியில் இருந்தவர்கள் நல்லாட்சியின் நாயகர்கள் என்று போற்றப்பட்டார்கள். இன்று அவர்கள் எல்லோரும் ஊழலின் உருவமென்று சொல்கிறீர்கள்.
அப்படியென்றால் ஒரு சந்தேகம்... அன்று நீங்கள் மக்களை ஏமாற்றினீர்களா? இல்லை இன்று ஏமாற்ற முயற்சிக்கிறீர்களா?
அரசியலில் கருத்து மாறலாம். கொள்கை மாறலாம். சூழ்நிலை கூட மாறலாம்.
ஆனால் வரலாற்றையே மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டால்... அது அரசியல் அல்ல.
அது நினைவிழப்புக்கு எழுதப்படும் தேர்தல் மருந்துச் சீட்டு!
மக்களுக்கு நினைவு இருக்கிறது, மாணிக்கம் தாக்கூர் அவர்களே.
அரசியல்வாதிகள் மறந்துவிடலாம்.
வரலாறு மறப்பதில்லை.
வெற்றியின் முரண் https://avargal-unmaigal.blogspot.com/2026/07/mkstalineditorialcartoon-satiretamil.html
அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.