Saturday, July 4, 2026

 அரசியல் சீரழிவு வைகோவின் சமீபத்திய பித்தலாட்டமும், கசப்பான உண்மைகளும்!
    

#vaiko #MLA #DMK #TVK #SofaModel #tamilnauPolitics


ஆண்மை குறைவுள்ள ஒருவன், தன் மனைவியை வேறொருவர் மூலம் கருத்தரிக்க வைத்து, பிறகு அதை கலைத்துவிட்டு வா, மீண்டும் இன்னொருவரிடம் அனுப்பி வைத்து  கருத்தரித்து குழந்தைப்  பெற்றுக் கொள்ளலாம்  வா' என்று சொல்வது எவ்வளவு அருவருப்பானதோ, அதே போன்றதொரு இழிவான அரசியலைத்தான் வைகோ இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் செய்து கொண்டிருக்கிறார்.

திமுகவுடன் கூட்டணி வைத்து, அந்த அடையாளத்தில் வெற்றிபெற்று, இப்போது வெற்றிக் களிப்பில் இருக்கும்போதே, தன் கட்சி எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து "ராஜினாமா செய்துவிட்டு வா, தவெகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம்" என்று வைகோ கட்டளையிடுவது, ஜனநாயகத்திற்கு செய்யும் துரோகம்.

 திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அந்த வேட்பாளருக்கு வாக்களித்த தொகுதி மக்களின் தீர்ப்பிற்கு என்ன மரியாதை வைகோ தருகிறார்? தனக்குதான் சுயமாரியாதை இல்லை ஆனால் எம்.எல்.ஏ-க்ககு ஒரு சுயமரியாதை இருக்கிறதே  இலை, தழை போல இன்று ஒரு கூட்டணியில், நாளை மறு கூட்டணி என்று ஆட்களை மாற்றி மாற்றி ஆட, அவர்கள் ஒன்றும் காய்கறிகள் அல்ல!  ஒரு தலைவராக கொள்கை மற்றும் நேர்மையை நிலைநாட்ட வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு, இப்படி "பதவிக்காக அலைவது" தொண்டர்களுக்கு நீங்கள் சொல்லும் பாடம் என்ன?
வைகோ சார் உங்கள் அரசியல் அறம் எங்கே போயிற்று? அதையும் அடகு வைத்துவிட்டீர்களா?

வெற்றிக்காக ஒரு கூட்டணி, பதவிக்காக ஒரு கூட்டணி என்று, கூட்டணி மாற்றுவதை வெறும் "வியாபாரம்" என்று மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டார். வைகோவின் அரசியல். மனைவியின் கர்ப்பத்தை முடிவெடுக்கும் அந்தத் தரம் தாழ்ந்த கணவனைப் போல, ஜனநாயகப் பதவிகளைத் தன் இஷ்டப்படி மாற்ற நினைக்கும் இந்த எண்ணம், அரசியல் வரலாற்றில் கறையாகவே அமையும்.

எந்தக் கூட்டணிக்குச் சென்றாலும், வாக்காளர்களின் கண்ணியத்தைக் காப்பாற்றாத எந்தவொரு அரசியலும் நிலைக்காது. இனியாவது உணருவாரா வைகோ?

மக்கள் ஒரு சின்னத்தைப் பார்த்து, ஒரு கூட்டணியைப் பார்த்து வாக்கு அளிக்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற பிறகு,  தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக கூட்டணியை மாற்றிக்கொள்வது, வாக்காளர்களை ஏமாற்றும் ஒரு 'திருட்டுதானே?


ஒரு காலத்தில் வைகோ மீது பெரும் மதிப்பு வைத்து இருந்தோம் என்னை போல உள்ளவர்கள் பலர் , இப்போ வைகோ போன்ற மூத்த தலைவர்கள் கூட, கொள்கை அல்லது மக்கள் நலன் என்பதைத் தாண்டி, இப்படி ஒரு "சீசன் வியாபாரி" போல கூட்டணி மாற நினைப்பது, அரசியல் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்துவிடுகிறதுதானே?

ஒரு கட்சி என்பது ஒரு குடும்பம் போன்றது. அதன் உறுப்பினர்களை இஷ்டத்திற்கு ஆட்டிப்படைப்பது, அந்தத் தலைவரின் அதிகார போதையைத்தான் காட்டுகிறது. 

இந்த கடுமையான உவமையை நான் பயன்படுத்தியிருப்பது, அரசியல் மாற்றத்தின் வீரியத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பயன்படுத்தி இருக்கின்றேன். இப்போதாவது வைகோவின் அரசியலை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்."






அன்புடன்
மதுரைத்தமிழன்


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.